1
00:00:02,294 --> 00:00:03,754
இதற்குப் பின்,
என் நினைவுகளை அணுகுவதற்கான

2
00:00:03,836 --> 00:00:08,132
அனுமதியை, இடத்தின் வேறுபாடே முடிவு
செய்ய நான் சம்மதம் தெரிவிக்கிறேன்.

3
00:00:09,218 --> 00:00:11,720
நான் லுமனின் அடிதளத்திலுள்ள
துண்டிக்கப்பட்ட தளத்தில் இருக்கும் வரையில்,

4
00:00:11,803 --> 00:00:14,848
என் வெளிப்புற நினைவுகளை என்னால் இங்கு நினைவு
கொள்ள முடியாது, அதே போல், என் பணியிட

5
00:00:14,932 --> 00:00:17,351
நினைவுகளையும் நான்
மேலே ஏறிய பின் நினைவு கொள்ள முடியாது.

6
00:00:19,728 --> 00:00:22,898
இந்த மாற்றம் பூரணமான ஒன்று,

7
00:00:22,981 --> 00:00:25,526
மற்றும் பழைய நிலைக்கு
மீண்டும் மாற முடியாத ஒன்று என்பதையும் அறிவேன்.

8
00:00:27,569 --> 00:00:29,112
நான் இந்த அறிக்கையை
தன்னிச்சையாக பதிவு செய்கிறேன்.

9
00:00:30,656 --> 00:00:34,117
சரி, அவ்வளவு தான்.

10
00:00:37,204 --> 00:00:38,205
தயவுசெய்து என்னுடன் வாருங்கள்.

11
00:00:44,920 --> 00:00:48,257
இன்னும் கொஞ்ச நேரத்துல, துண்டிக்கப்பட்ட தளத்துல
உங்க பணியிட பிரமுகம் விழித்து கொள்ளும்.

12
00:00:48,340 --> 00:00:51,593
ஆனால் இன்று மாலை,
லிஃப்டி பேக் அப்புல, அடுத்த முறை

13
00:00:51,677 --> 00:00:53,136
நீங்க நீங்களாகவே உணர்வீர்கள்.

14
00:00:53,220 --> 00:00:54,221
சரி.

15
00:00:54,763 --> 00:00:58,267
மயக்கம் வந்தா பிடிச்சுக்க, இடுப்பளவுலே,
லிஃப்டுலே ஒரு கைபிடி கூட இருக்கு.

16
00:00:58,350 --> 00:00:59,768
அட, நல்லதுப்பா.

17
00:01:02,437 --> 00:01:04,815
அவர் முகத்துல சூரிய ஒளி
விழுவதைப் பார்க்க நல்லாயிருக்கும்.

18
00:01:06,483 --> 00:01:09,361
தினமும் காலையிலே மூணு முட்டைகளை பச்சையா
உடைச்சு பாலோட குடிப்பார், தெரியுமா?

19
00:01:09,444 --> 00:01:10,445
கேட்டிருக்கேன்.

20
00:01:10,529 --> 00:01:12,114
அவருக்கு பிடித்த உணவு.

21
00:01:12,990 --> 00:01:14,533
உங்களை இங்கே தயாராக்குவோம்.

22
00:01:15,576 --> 00:01:17,160
- காலை வணக்கம், லாரன்ஸ்.
- காலை வணக்கம்.

23
00:01:43,854 --> 00:01:45,189
வலிக்காதுன்னு சொல்லறாங்க.

24
00:01:46,190 --> 00:01:47,733
கீட்டாமின்

25
00:01:50,068 --> 00:01:51,403
அப்படியே இளைப்பாறுங்க.

26
00:02:07,669 --> 00:02:09,378
கொஞ்சம்
அதிர்வுகள் இருக்கும், இப்போ.

27
00:02:24,269 --> 00:02:26,271
லுமன்

28
00:02:26,355 --> 00:02:28,565
லுமன் துண்டிப்பு
மைக்ரோசிப் தொழில்நுட்பம்

29
00:02:47,501 --> 00:02:50,003
இது முடிந்த பின் எப்படி
நடந்ததுன்னு சொல்ல நான் மேலே இருப்பேன்.

30
00:02:51,964 --> 00:02:53,757
நான் பார்க்க அச்சுறுத்தலாக இருந்தா மன்னிச்சுடுங்க.

31
00:02:55,509 --> 00:02:58,428
கவலை வேண்டாம். நான் உங்களை
சந்திக்க மிக உற்சாகமாக இருக்கிறேன்.

32
00:03:40,721 --> 00:03:41,805
ஹே, ஹெல்லி.

33
00:03:42,931 --> 00:03:43,932
என்ன நடக்குது?

34
00:03:44,016 --> 00:03:45,142
உங்கள பார்த்ததுல சந்தோஷம்.

35
00:03:46,310 --> 00:03:48,103
உங்களுடைய சீரமைத்தல் ரொம்ப நல்லா போச்சு.

36
00:03:51,231 --> 00:03:52,232
நான் எங்க இருக்கேன்?

37
00:03:52,733 --> 00:03:57,404
சரி, சில சமயம், துண்டித்த இடத்துக்கு தக்கபடி
பொருந்த, நாங்கள் புதிதாக சேர்ந்தவர்களுக்கு

38
00:03:57,487 --> 00:03:59,698
அந்த மாற்றத்தை அவங்களே உணர்வதுக்காக
இங்கே ஒரு

39
00:03:59,781 --> 00:04:01,658
படிக்கட்டுக்கு கூட்டிட்டு வந்து உதவுவோம்.

40
00:04:01,742 --> 00:04:03,619
அட, வேண்டாம். நான் கிளம்ப முயற்சி செய்யறேனே?

41
00:04:03,702 --> 00:04:04,912
இல்ல, இல்ல.

42
00:04:04,995 --> 00:04:06,455
இதெல்லாம் இந்த செயல்முறையில வருது.

43
00:04:06,538 --> 00:04:08,957
நீங்க திரும்பி நேர உள்ளே போனா,
அதோட முடிஞ்சு போயிடும்.

44
00:04:13,837 --> 00:04:14,838
அட, இங்க பாரு.

45
00:04:17,757 --> 00:04:20,427
- என்ன எழவு அது?
- பரவாயில்லை.

46
00:04:21,261 --> 00:04:22,846
பிரச்சினையில்லை.

47
00:04:22,930 --> 00:04:24,640
இன்னொரு முறை முயற்சி செய்யறீங்களா?

48
00:04:24,723 --> 00:04:26,141
இன்னும் கொஞ்சம் உற்சாகத்தோட?

49
00:04:31,480 --> 00:04:32,814
ஹை.

50
00:04:32,898 --> 00:04:33,982
நான் படிகட்டுல இருக்கேன்.

51
00:04:35,234 --> 00:04:36,777
பரவாயில்ல, போயிகிட்டிருக்கு.

52
00:04:38,028 --> 00:04:39,321
இல்ல, அவங்க...

53
00:04:39,404 --> 00:04:40,405
ச்சே!

54
00:04:41,907 --> 00:04:42,991
இல்ல, நான் திரும்ப கூப்பிடறேன்.

55
00:04:45,244 --> 00:04:46,245
அடடா.

56
00:04:49,081 --> 00:04:50,415
நீங்க ரொம்ப மூக்கை நுழைக்கிறீங்க.

57
00:04:51,166 --> 00:04:52,501
எனக்கு அங்க உள்ள
இருக்கப் பிடிக்கலை, இல்ல?

58
00:04:52,584 --> 00:04:53,794
பிடிக்க பழகிட்டு இருக்கீங்க.

59
00:04:54,920 --> 00:04:58,882
ஹே. நீங்க இங்க வரப் போறீங்கன்னு
கேட்டப்போ, அது ஒரு அற்புதமா தோணுச்சு.

60
00:04:59,550 --> 00:05:01,593
நீங்க செய்வது மிக ஆச்சரியமான ஒண்ணு.

61
00:05:24,283 --> 00:05:25,367
ஹே, நெடுநாள் தோழியே!

62
00:05:25,868 --> 00:05:27,160
ஒரு நாள் ஆச்சு.

63
00:07:01,296 --> 00:07:04,383
லுமன்
சீனியர் சுத்திகரிப்பாளர் காலை வேலைப் பட்டியல்

64
00:07:04,466 --> 00:07:06,176
கழிப்பறையில் இருக்கும்
சோப் டப்பாவை மீண்டும் நிரப்புவது.

65
00:07:06,260 --> 00:07:08,762
கியர் ஈகன் சித்திரத்தை கவனிப்பது.
தன்னாய்வு: நான் இன்று வழிநடத்த முடியுமா?

66
00:07:11,265 --> 00:07:13,433
லுமன்
ரவாண்டாவின் காஃபிப் பொடி

67
00:07:43,964 --> 00:07:45,966
விதிமுறைகளின் கைபுத்தகம்

68
00:07:53,682 --> 00:07:55,684
மார்க் எஸ் - ஆலென்டவுன்

69
00:08:42,231 --> 00:08:43,232
ஹே.

70
00:08:44,232 --> 00:08:45,234
ஹலோ.

71
00:08:45,317 --> 00:08:46,610
எனவே இப்போ நாளை ஆயிடுச்சா?

72
00:08:47,903 --> 00:08:48,946
ஆமாம்.

73
00:08:49,029 --> 00:08:50,822
சரி, இன்னிக்கு திங்கட்கிழமை.

74
00:08:51,615 --> 00:08:53,200
- ஒரு வாரயிறுதி போயிடுச்சா?
- ஆமாம்.

75
00:08:53,283 --> 00:08:54,701
நான் இந்த இடத்தை விட்டு போனது போலவே இல்லை.

76
00:08:54,785 --> 00:08:57,496
ஆம், இங்க இரவுகளும் வாரக்கடைசிகளும்
அப்படிதான் போய்விடும்.

77
00:08:58,288 --> 00:08:59,289
ஒண்ணும் செய்யாதது போல?

78
00:08:59,373 --> 00:09:00,499
ஆமாம், பழகிடும்.

79
00:09:00,582 --> 00:09:03,210
நான் சொல்வது என்னான்னா, நாம
தூக்கத்தின் விளைவுகளைப் பத்தி கவனிப்பது நல்லது

80
00:09:03,293 --> 00:09:05,629
ஏன்னா நாம தூக்கத்தை உண்மையில
அனுபவிப்பதே இல்லை.

81
00:09:05,712 --> 00:09:09,216
நீங்க சந்தோஷமாகவோ,
புத்துணர்ச்சியோடவோ இருக்கலாம்.

82
00:09:09,299 --> 00:09:11,885
தோள்பட்டைகளிலே அழுத்தம் குறைவு.
உற்சாகமா.

83
00:09:14,221 --> 00:09:15,931
எனவே இப்போ மணி 09:05ஆ?

84
00:09:16,014 --> 00:09:19,268
ஆமாம், வெளியிலே சந்திக்கக்கூடாதுன்னு
உள்ள வரும் நேரத்தில இடைவெளி விடுவாங்க.

85
00:09:19,351 --> 00:09:20,686
அது என்னவோ அவ்வளவு முக்கியமாம்.

86
00:09:23,313 --> 00:09:24,940
ஆக நாம நண்பர்கள் இல்லன்னு புரிஞ்சுக்கறேன்.

87
00:09:26,733 --> 00:09:27,901
இல்லன்னு நினைக்கிறேன்.

88
00:09:32,072 --> 00:09:33,657
என் தற்போதய கோப்பின் பெயர்
"டம்வாட்டர்"...

89
00:09:33,740 --> 00:09:34,950
லுமன் குடும்பத்துக்கு வரவேற்கிறோம்

90
00:09:35,033 --> 00:09:36,368
...அது 11 வாரங்களுக்கு முன்னாடி ஆரம்பிச்சது.

91
00:09:36,451 --> 00:09:37,786
"டம்வாட்டர்". ஒரே வார்த்தை.

92
00:09:37,870 --> 00:09:39,413
நான் எதுவும் குறிப்புகள் எடுத்துக்கணுமா?

93
00:09:39,496 --> 00:09:41,832
- தேவையில்லை.
- அதுல 96 சதம் நான் சரிப்படுத்திட்டேன்,

94
00:09:41,915 --> 00:09:44,585
அப்படீன்னா நான் அஞ்சுல நாலு மட்டம்
ஊக்கத் தொகைகளை சாம்பாதிச்சுட்டேன்,

95
00:09:44,668 --> 00:09:49,256
நீ இங்க பார்க்கிற விரல் பிடிகள்,
அழிக்கும் ரப்பர்கள் எல்லாம் சேர்த்து.

96
00:09:49,840 --> 00:09:53,010
100 சதங்கிறது அஞ்சு.
அது உனக்கு உன்னுடைய வேடிக்கை படத்தைத் தரும்.

97
00:09:53,802 --> 00:09:56,972
இது போல நான் சேர்த்திருக்கிற
சொத்தைப் பத்தி எனக்கே சொல்ல கூச்சமா இருக்கு.

98
00:09:57,055 --> 00:09:58,515
- அடடே.
- மிகச் சரி.

99
00:09:58,599 --> 00:10:00,976
இது ஒவ்வொண்ணுமா?
முடித்த கோப்பு இந்த டப்பாவிலே.

100
00:10:01,685 --> 00:10:03,312
எனவே அது தான் மிக உயர்ந்த பரிசா?

101
00:10:03,395 --> 00:10:04,521
சதவிகிதத்தை வைத்து பார்த்தா,
ஆமாம்.

102
00:10:04,605 --> 00:10:06,690
ஆனால் நாம மூன்று மாதங்களுக்கு ஒரு முறை
அடைய வேண்டிய இலக்குகளை அடைந்தால்,

103
00:10:06,773 --> 00:10:08,817
நம்மில் ஒருத்தரை காலாண்டின்
சுத்திகரிப்பாளருன்னு அறிவிப்பாங்க,

104
00:10:08,901 --> 00:10:11,195
அதோடு ஒரு வாஃபில் பார்ட்டி கிடைக்கும்.

105
00:10:11,278 --> 00:10:12,863
என்னது, வாஃபில் பார்ட்டியா?

106
00:10:12,946 --> 00:10:14,364
சரி, ஆபத்துகள் இருக்கு, ஜாக்கிரதை.

107
00:10:14,448 --> 00:10:17,701
இந்த காலாண்டுல அந்த தகுதி கண்டிப்பா எனக்குதான்,
அதனால, ரொம்ப ஆசைப்படாதே.

108
00:10:20,621 --> 00:10:22,414
மார்க்கோட கிறிஸ்டல் சதுரம் என்னாச்சு?

109
00:10:22,998 --> 00:10:25,417
அது பரிசு கிடையாது,
அவனுக்கு சும்மா கொடுத்தாங்க.

110
00:10:25,501 --> 00:10:27,878
ஹெல்லி,
உங்க முகப்பை கொஞ்சம் மாத்துங்க?

111
00:10:44,144 --> 00:10:45,479
சரி.

112
00:10:48,065 --> 00:10:49,191
அது... மன்னிக்கணும்.

113
00:10:50,150 --> 00:10:52,277
சியானா

114
00:10:56,406 --> 00:10:58,951
மார்க், தடங்கலுக்கு வருந்துகிறேன்.
நீ ஹெல்லிக்கு பயிற்சி கொடுப்பது தெரியும்.

115
00:10:59,034 --> 00:11:02,246
நம்ம மேஜைகளிலிருந்து நீ நம்ம குழுமப் படங்களை
எடுத்து வைச்சுட்டன்னு கவனிச்சேன்.

116
00:11:02,329 --> 00:11:05,457
ஆமாம். இன்னிக்கு நடக்கப் போற ஹெல்லியோட
பார்ட்டியில, நாம புது ஃபோட்டோ எடுக்கலாம்.

117
00:11:08,669 --> 00:11:11,880
சரி, இது தான் சியானா கோப்பு.

118
00:11:11,964 --> 00:11:13,799
இப்போ, நீ பார்க்கிற எல்லா டாட்டாவும்

119
00:11:13,882 --> 00:11:17,344
முக்கியமான நாலு வகையில,
ஏதாவது ஒரு வகையை சேர்ந்தது தான்.

120
00:11:17,427 --> 00:11:19,555
ஒவ்வொரு வரி கோடையும்,
நாம ஒரு தொகுப்பாக்குவோம்,

121
00:11:19,638 --> 00:11:24,184
பின்னர், அஞ்சு டிஜிட்டல் பக்கெட்டுகளிலும்
அதையெல்லாம் சரிசமமா வரிசைப்படுத்துவோம்.

122
00:11:24,268 --> 00:11:25,269
பார்ட்டி.

123
00:11:25,352 --> 00:11:27,229
முதல்ல அப்படி குத்திப் பாரு.
அம்புகளை பயன்படுத்து.

124
00:11:27,855 --> 00:11:31,233
நிச்சயமா அந்த பழைய ஃபோட்டோக்கள்
மேஜையில் தான் இருக்கணும்னு நினைக்கிறேன்

125
00:11:31,316 --> 00:11:32,943
புதுசு வரும்வரையாவது.

126
00:11:39,950 --> 00:11:40,951
சரி.

127
00:11:41,535 --> 00:11:43,787
- இதுல நான் எதுவும் புரிஞ்துக்கணுமா?
- இல்ல.

128
00:11:43,871 --> 00:11:46,331
இல்ல, எல்லா டாட்டாவும் மேலேருந்து தான்
வருது, எல்லாமே கோட் செய்து தான் வரும்.

129
00:11:47,416 --> 00:11:48,917
அப்போ நான் எப்படி அதை வகைப்படுத்தறது?

130
00:11:51,003 --> 00:11:52,045
என்ன?

131
00:11:53,505 --> 00:11:58,677
சுத்திகரிப்பாளரின் மனதில் ஒரு உணர்ச்சியைத்
தூண்டும் வகையில், ஒவ்வொரு வகை எண்ணும்

132
00:11:58,760 --> 00:12:00,971
அதுல தொகுத்து வழங்கப்பட்டிருக்கு.

133
00:12:02,055 --> 00:12:07,477
எனவே, ம்ம், உதாரணத்துக்கு, வகை 1 எண்கள்,
பார்த்தவுடனே ஒரு வித உணர்வைக் கொடுக்கும்.

134
00:12:07,561 --> 00:12:10,731
அவை சற்று உறுத்தலாக இருக்கும், அச்சுறுத்தும்.

135
00:12:10,814 --> 00:12:11,815
பயமா இருக்குமா?

136
00:12:11,899 --> 00:12:13,108
புரியுது.

137
00:12:13,192 --> 00:12:14,943
என் வேலை என்னன்னா இந்த
ஸ்பிரோட்ஷாட்டை முழுவதும் பார்த்து

138
00:12:15,027 --> 00:12:16,612
அச்சுறுத்தும் எண்களைத் தேடிப்பிடிக்கணும், இல்லயா?

139
00:12:16,695 --> 00:12:18,697
கேட்க மடத்தனமாக இருக்கு,
மார்க்கும் அப்படிதான் சொன்னான்.

140
00:12:19,281 --> 00:12:21,950
எண்கள்ள இரத்தக்கரை இருக்குமா? அவை பாடுமா?

141
00:12:22,034 --> 00:12:24,912
அதையெல்லாம் பார்த்தாதான் புரியும்,
அதோடு அதை அடையாளம் காண நேரம் பிடிக்கும்.

142
00:12:24,995 --> 00:12:26,872
ஏய், மார்க். குழுமத்தின் ஃபோட்டோக்கள

143
00:12:26,955 --> 00:12:29,333
மாத்தறதப் பத்தி கைபுத்தகத்தில
இருக்கும் விதியை நான் அச்சிட்டு எடுத்துட்டேன்.

144
00:12:29,416 --> 00:12:32,544
உன வேலைக்கு நடுவில் நேரம்
கிடைக்கிற போது அதைக் கொஞ்சம் பாரு.

145
00:12:32,628 --> 00:12:34,463
- நன்றி.
- மன்னிக்கணும்.

146
00:12:37,883 --> 00:12:38,967
நான் இங்க மாட்டிக்கிட்டேனோ?

147
00:12:41,178 --> 00:12:42,638
எந்த விதத்தில சொல்லற?

148
00:12:42,721 --> 00:12:46,433
ஒருவேளை எனக்கு இதெல்லாம் பிடிக்கலைன்னா
நான் விட்டுட்டு போகணும்னா, அது முடியுமா?

149
00:12:50,145 --> 00:12:51,188
பாரு.

150
00:12:52,523 --> 00:12:53,815
உண்மையிலேயே நீ சந்தோஷமா இல்லைன்னா,

151
00:12:53,899 --> 00:12:58,111
நீ உன் ராஜினாமா கோரிக்கையை, உன் வெளியுலக
பிரதியுடன் சேர்த்து, பரிசீலனைக்கு அனுப்பலாம்.

152
00:12:58,195 --> 00:13:00,072
சம்மதம் வாங்குவதுக்கெல்லாம் யோகம் வேண்டும்.

153
00:13:00,155 --> 00:13:03,867
பெரும்பாலும் அதையெல்லாம் ஒத்துக்க மாட்டாங்க.
மேலும், என்னன்னா...

154
00:13:05,452 --> 00:13:06,453
என்ன?

155
00:13:07,329 --> 00:13:12,167
சரி, உன்னுடைய நிரந்தர பிரதி இங்க லுமன்ல
மட்டும் தான் இருப்பதால்,

156
00:13:13,001 --> 00:13:15,462
வேலையை ராஜினாமா செய்வதுன்னா,
உன் உயிரை நீயே எடுத்துக்கிற மாதிரி தான்.

157
00:13:15,546 --> 00:13:17,464
இவ்வளவும் உனக்கு தெரிந்த அளவில்.

158
00:13:19,508 --> 00:13:20,968
ஹலோ, சுத்திகரிப்பாளர்களே.

159
00:13:21,635 --> 00:13:23,136
இனிமை. மெலன் பார்.

160
00:13:23,220 --> 00:13:24,680
ஹை, திரு. மில்சிக்.

161
00:13:24,763 --> 00:13:27,099
ஹெல்லி, உங்கள வரவேற்கிறோம்.

162
00:13:27,182 --> 00:13:30,686
அதுக்குள்ள நீங்க எவ்வளவு நல்லா பொருந்தறீங்கன்னு
எனக்குப் பார்த்தாலே ஆச்சரியமா இருக்கு.

163
00:13:31,728 --> 00:13:33,397
அந்த அலுவலகம் இப்போதான் முழுமையா இருக்கு.

164
00:13:34,815 --> 00:13:38,527
இப்போ, இந்த பார்ட்டியை தொடங்கலாம்.

165
00:13:44,533 --> 00:13:47,870
இப்போ, உங்க அனைவருக்கும் தெரியும்,
என் பெயர் இர்விங்.

166
00:13:47,953 --> 00:13:50,122
நான் இங்க மூணு வருடங்கள் பணி செய்திருக்கேன்,

167
00:13:50,205 --> 00:13:55,002
என்னைப் பத்தி சொல்லணும்னா, எனக்கு ஒன்பது
லுமன் கொள்கைகளையும் நல்லா தெரியும்.

168
00:13:55,085 --> 00:13:57,546
அற்புதம். அதில் எது உங்களுக்கு ரொம்ப பிடித்தது?

169
00:14:00,549 --> 00:14:01,550
ஒன்பதுமே பிடிக்கும்.

170
00:14:02,426 --> 00:14:06,680
ஆனால் இன்னிக்கு, நான் "சீயர்"னு
சொல்லலாம்னு நினைக்கிறேன்.

171
00:14:06,763 --> 00:14:07,764
சிறப்பு.

172
00:14:11,143 --> 00:14:14,229
உம்-ஹூம்! இர்வ், இன்னிக்கு
இத நம்பி விழுவதெல்லாம் வேண்டாம்.

173
00:14:16,440 --> 00:14:17,441
அப்படியா, சரி.

174
00:14:22,279 --> 00:14:24,156
ஹலோ, ஹெல்லி!

175
00:14:26,158 --> 00:14:28,202
இல்ல. இல்ல.

176
00:14:35,918 --> 00:14:37,878
ஹலோ, நான்தான் ஹெல்லி.

177
00:14:37,961 --> 00:14:39,671
நான் லுமனில் சேர்ந்து, வந்து...

178
00:14:40,672 --> 00:14:41,840
பத்து மணி நேரம் ஆகுது, அதோடு...

179
00:14:44,426 --> 00:14:46,553
என்னை மன்னிக்கணும்,
அதுக்கு மேலே என்னைப் பத்தி எதுவும் தெரியாது.

180
00:14:47,554 --> 00:14:48,847
அட, நிச்சயமா உனக்குத் தெரியும், ஹெல்லி.

181
00:14:50,265 --> 00:14:51,308
உண்மையா தெரியாது.

182
00:14:52,684 --> 00:14:53,894
நேற்று இரவு வீட்டுக்குப் போனேன்னு நினைக்கிறேன்,

183
00:14:53,977 --> 00:14:56,063
ஆனால வீடுங்கிறது, தனி வீடா,
அல்லது அபார்ட்மெண்டான்னு தெரியாது,

184
00:14:56,146 --> 00:14:57,231
அல்லது எனக்கு குடும்பம் இருக்கான்னோ...

185
00:14:57,314 --> 00:14:59,983
ஒரு படகைப் போல, என்னுடைய வெளிப்புற பிரதி
வாழ்ந்துகிட்டிருக்கான்னு நினைக்கிறேன்.

186
00:15:02,110 --> 00:15:03,612
மன்னிக்கணும், வெளிப்புற பிரதிகள்...

187
00:15:03,695 --> 00:15:06,490
நாமளே தான், இங்கிருந்து வெளியே போன பின்.

188
00:15:06,573 --> 00:15:08,784
நீ நேற்று வீடியோவிலே பார்த்தாயே.

189
00:15:08,867 --> 00:15:12,120
ஆமாம். எனக்கு சில விஷயங்களை அவகிட்ட
சொல்லணும். நான் பதிவு செஞ்சு அனுப்பலாமா?

190
00:15:14,248 --> 00:15:16,917
என்னன்னா இங்க அந்த இரண்டு
பிரதிகளுக்கும் இடையே இருக்கும் தொடர்பு

191
00:15:17,000 --> 00:15:18,377
ரொம்பவே துண்டிச்சிருக்கு.

192
00:15:18,877 --> 00:15:20,462
ஆகவே நான் ஒரு சின்ன சீட்டு எழுதினாலோ?

193
00:15:20,546 --> 00:15:24,591
நல்லவேளையா, லிஃப்டுகள்ள
"கோட் டிடெக்டர்"களை பொருத்தி வைச்சிருக்காங்க.

194
00:15:25,300 --> 00:15:26,969
அதனால தகவல்களை அனுப்ப முடியாது.

195
00:15:27,052 --> 00:15:30,472
ஆம்... அவை உலோக டிடெக்டர்களைப் போலதான்,
ஆனால் எழுதப்பட்ட சின்னங்களுக்கு.

196
00:15:30,556 --> 00:15:31,807
அது லுமனின் சொந்த கண்டுபிடிப்பாம்.

197
00:15:31,890 --> 00:15:32,975
மிகவும் சரி.

198
00:15:33,058 --> 00:15:34,893
கண்டிப்பா. சரி, இப்படி செய்தாலோ, நான்...

199
00:15:34,977 --> 00:15:37,688
இங்கதான் நீங்க விஷயத்தை சரியா
புரிஞ்சுக்கலைன்னு நினைக்கிறேன், ஹெல்லி.

200
00:15:38,856 --> 00:15:39,898
பந்தை நான் போடலாமா?

201
00:15:42,776 --> 00:15:44,027
நண்பர்களே, இவங்க ஹெல்லி.

202
00:15:44,111 --> 00:15:47,447
அவங்களுக்கு 30 வயசாச்சு, அவங்களுக்கு
பாதாம் பருப்பு ஒத்துக்காது, பலவீன பல் இனாமல்கள்.

203
00:15:48,198 --> 00:15:51,243
5 அடி 6 அங்குலம் இருக்கும் இவங்கதான் இந்த
அலுவலகத்துல நான்காவது நெட்டையான பெண்,

204
00:15:51,326 --> 00:15:54,496
தோள்-பட்டை வரை உள்ளது அவங்களுடைய முடி.

205
00:15:56,123 --> 00:16:00,419
உங்க அனைவரோடும் பார்க்கும் போது,
குடும்பத்தோடு இருக்காங்கன்னு தான் நினைக்கிறேன்.

206
00:16:06,341 --> 00:16:09,094
அட, பேஷ். புரிஞ்சுக்க இன்னும்
நிறைய விஷயங்கள் இருக்கு.

207
00:16:09,178 --> 00:16:12,514
ஆகவே, நான் மார்க்
என்று மட்டும் சொல்லிக்கிறேன்.

208
00:16:12,598 --> 00:16:18,312
லுமனுக்கு வந்து கிட்டதட்ட இரண்டு வருஷமாகுது,
எனக்கு இந்த விளையாட்டு ரொம்ப பிடிக்கும்.

209
00:16:20,105 --> 00:16:23,567
நல்ல முயற்சி, தோழா,
ஆனால் அதையே தான் போன முறையும் சொன்ன.

210
00:16:24,902 --> 00:16:26,361
சரியா போச்சு.

211
00:16:30,199 --> 00:16:31,200
சரி, நான்...

212
00:16:36,788 --> 00:16:40,334
நான் இன்று காலை ஒரு சடங்கை முறித்தேன்.

213
00:16:43,921 --> 00:16:46,924
நான் பழைய ஃபோட்டோக்களை சுத்தம் செய்தேன்,
அதுவும் பீட்டியுடன் இருந்ததையெல்லாம்,

214
00:16:47,007 --> 00:16:48,550
அதோடு அது வந்து...

215
00:16:49,843 --> 00:16:52,054
என்னை சோகத்துல தள்ளிவிட்டது.

216
00:16:53,639 --> 00:16:55,265
மேலும், நான்,

217
00:16:56,225 --> 00:17:00,103
அந்த எம்டிஆரை அவன் நடத்தியதுப் போல என்னால
நடத்த முடியாதுன்னு நினைக்கிறேன்.

218
00:17:00,187 --> 00:17:02,231
எனக்கு புரியுது. எனக்கும் அது போல
சில கவலைகள் உண்டு.

219
00:17:03,565 --> 00:17:04,775
ஆகவே நான்...

220
00:17:05,776 --> 00:17:08,862
அதையெல்லாம் அந்த சதுரத்திலிருந்து எடுத்து
மேலே ஸ்டோரேஜ் அலமாரியில் வைச்சேன்,

221
00:17:08,945 --> 00:17:11,156
அதை நாம செய்யக்கூடாது தான்.

222
00:17:13,534 --> 00:17:15,702
எனக்கு நினைவிருக்கு. நான் அதை நிராகரித்தேன்.

223
00:17:19,455 --> 00:17:21,124
என்னிடம் சொன்னதுக்கு நன்றி, மார்க்.

224
00:17:22,667 --> 00:17:25,253
நீ அதை எடுத்துகிட்ட விதம் ரொம்ப நல்லாயிருக்கு.

225
00:17:25,337 --> 00:17:29,383
ஆனால், எனக்கு என்ன புரியலைன்னா, உனக்கு
பீட்டி மேலே இவ்வளவு உணர்ச்சி பெருக்கு இருந்தாலும்,

226
00:17:29,466 --> 00:17:32,553
கரோல் டியிடம் அது போல இல்லையே.

227
00:17:33,512 --> 00:17:36,557
ஆனால் கரோல் டி போகப் போறாங்கன்னு
நமக்கு முன்னாடியே தெரியும்.

228
00:17:36,640 --> 00:17:38,600
அவங்க வெளிபுற பிரதி கூட ஒரு
வீடியோவிலே நன்றின்னு சொன்னாங்களே.

229
00:17:39,560 --> 00:17:41,728
பீட்டி திடீருன்னு போயிட்டான்.

230
00:17:43,105 --> 00:17:45,107
அதோடு, நான்... எனக்குத் தெரியலை

231
00:17:45,190 --> 00:17:51,488
அவன் ஒரு புது வேலையில சேர்ந்திட்டானா அல்லது
பீச்சுல குடிச்சுட்டு விழுந்தானா, இறந்துட்டானா...

232
00:17:51,572 --> 00:17:53,031
தயவுசெய்து, அதோட நிறுத்து.

233
00:18:02,916 --> 00:18:05,043
இந்த இடத்துக்கு வெளியில தான் சாவுங்கறது
எல்லாம் நடக்கும்னு நாம ஞாபகப்படுத்திக்க

234
00:18:05,127 --> 00:18:08,255
இது சரியான நேரம்னு நினைக்கிறேன்.

235
00:18:09,715 --> 00:18:10,716
இங்க நடக்காது.

236
00:18:12,134 --> 00:18:15,179
லுமனில் இருக்கும்வரை, வாழ்க்கையில்
அப்படியெல்லாம் நடக்காம பாதுகாப்பு உண்டு.

237
00:18:16,305 --> 00:18:21,977
அதனால, அதுக்காக நீங்க நல்ல நன்றிக்கடனோடு
இருப்பது தான் தகுந்த வகையான பதிலுன்னு தோணுது.

238
00:18:30,110 --> 00:18:33,614
இதுக்கு மேலே மெலனுக்கு
சுவை கூடாதுன்னும் நினைக்கிறேன்.

239
00:19:08,732 --> 00:19:10,400
அட, உங்க ஆட்டத்தை கலைச்சதுக்கு மன்னிக்கணும்.

240
00:19:11,443 --> 00:19:15,280
ஏற்கனவே மோசம்னு நினைச்சேன், ஆனால்,
ஆமாம், நீ இன்னும் மோசமா ஆக்கிட்ட.

241
00:19:18,492 --> 00:19:20,786
ஆக பீட்டி நல்லாயிருக்காரான்னு
எப்படி கண்டுபிடிக்கப் போற?

242
00:19:20,869 --> 00:19:23,372
அதுவா, மில்சிக் தான் தெளிவா சொல்லிட்டாரே.

243
00:19:24,289 --> 00:19:26,041
நம்மள மேற்பார்வை செய்யறவர் நிறுத்துன்னு
சொல்லிட்டதனால, நீ உன் உற்ற நண்பனைப்

244
00:19:26,124 --> 00:19:27,918
பத்தி கேட்கறதையே விட்டுவிடுவாயா?

245
00:19:30,045 --> 00:19:32,214
மில்சிக், நல்ல மனிதர் தான்.

246
00:19:32,297 --> 00:19:35,175
அவர் ஏதாவது ஒண்ணை சொன்னா,
அதை கேட்கறது தான் நல்லது.

247
00:19:35,259 --> 00:19:38,095
- எனக்கு கவலையில்ல.
- ஏன்னா எப்போதுமே நல்லவரா இருக்க முடியாது.

248
00:19:38,720 --> 00:19:40,097
சரி,
சுத்திகரிப்பாளர்களே!

249
00:19:40,180 --> 00:19:43,350
நம்ம வயிற்றுல உப்புஸம் வருவதுக்கு முன்னாடி
நாம இந்த குழுமத்தின் ஃபோட்டோவை எடுப்போம்.

250
00:19:55,445 --> 00:19:56,488
கடைசியாக.

251
00:19:59,324 --> 00:20:04,329
சரி. நல்ல பெரிய புன்னகை. ஞாபகமிருக்கட்டும்,
நீங்க இதை தினமும் பார்த்துக்கிட்டே இருப்பீங்க.

252
00:20:06,164 --> 00:20:07,624
"நன்றிக் கடன்" சொல்லுங்க.

253
00:20:08,333 --> 00:20:09,585
நன்றிக் கடன்!

254
00:20:12,754 --> 00:20:13,881
"சீயர்" சொல்லுங்க.

255
00:20:14,423 --> 00:20:15,883
சீயர்!

256
00:20:20,262 --> 00:20:22,181
ஹெல்லி? என்ன செய்ற?

257
00:20:22,264 --> 00:20:26,143
நான் இனிமே இங்க வேலை செய்ய
முடியாதுன்னு தோணுது. மன்னிக்கவும்.

258
00:20:26,226 --> 00:20:27,394
நீ என்ன சொல்லற?

259
00:20:27,978 --> 00:20:28,937
நான் ராஜினாமா செய்கிறேன்.

260
00:20:29,021 --> 00:20:30,731
எனக்கு இந்த கோப்பை வகைப் படுத்தும்
வேலையெல்லாம் செய்ய பிடிக்கலை

261
00:20:30,814 --> 00:20:33,150
அல்லது, சூரியனை இனி பார்க்கமுடியாது அல்லது
நண்பர்கள் மறைந்த போவார்களுங்கறதை எல்லாம்.

262
00:20:33,233 --> 00:20:35,694
- எனக்கு இதெல்லாம் துளியும் பிடிக்கலை.
- கோட் டிடெக்டர்கள் இருக்குன்னு சொன்னோமே.

263
00:20:35,777 --> 00:20:39,489
உனக்குத் தெரியுமா? நீ முயற்சி செய்திருக்காயா?
ஏன்னா, வெளிப்படையாகவே, அது பொய்யாக் தோணுது.

264
00:20:47,581 --> 00:20:48,582
ஹெல்லி!

265
00:20:52,127 --> 00:20:53,253
ஹெல்லி!

266
00:21:04,890 --> 00:21:07,142
தயவுசெய்து, உனக்குத் தெரியாதா...

267
00:21:09,061 --> 00:21:10,646
கடவுளே. இங்க வா.

268
00:21:20,989 --> 00:21:23,116
ச்சே. திரு. கிரேனர்?

269
00:21:26,703 --> 00:21:27,704
வெளியே வா.

270
00:21:33,627 --> 00:21:35,045
என்ன இருக்கு இங்க?

271
00:21:38,173 --> 00:21:39,675
நீ என்கூட வருவது தான் நல்லது.

272
00:21:39,758 --> 00:21:40,843
திரு. கிரேனர்.

273
00:21:43,554 --> 00:21:47,766
அட. தொலைஞ்சு போன என் பயிற்சி மாணவியை
நீங்க கண்டுபிடிச்சுட்டீங்க.

274
00:21:48,892 --> 00:21:50,936
எப்போதும் போலவே, உங்கள் உதவிக்கு நன்றி, சார்.

275
00:21:53,981 --> 00:21:54,982
அந்த நோட்.

276
00:21:55,607 --> 00:21:59,403
ஆகவே, இது ரொம்ப சங்கடமா இருக்கு, ஆனால்,
முதல் முறையா பயிற்சி தருகிறேன்,

277
00:21:59,486 --> 00:22:03,699
ஹெல்லிகிட்ட டாட்டா-கடத்தல் விதிகளைச்
சொல்ல மறந்து விட்டேன் போலயிருக்கு.

278
00:22:05,158 --> 00:22:06,702
அட, மறந்துட்டேன். இது ஹெல்லி.

279
00:22:06,785 --> 00:22:07,786
ஹெல்லி, திரு. கிரேனர்.

280
00:22:08,996 --> 00:22:09,997
ஆமாம்.

281
00:22:12,165 --> 00:22:14,668
ஆம், ஆகவே ஹெல்லி அந்த
கோட் டிடெக்டர்களை அலறச் செய்தது,

282
00:22:14,751 --> 00:22:19,298
அந்த தவறு, அதுக்கு காரணம் நான்தான்,
நான் மன்னிப்பு கேட்கிறேன், சார்.

283
00:22:19,798 --> 00:22:20,799
ஆவலுடன்.

284
00:22:22,593 --> 00:22:24,303
மார்க் எஸ், பெரிய டிபார்ட்மெண்ட் தலையா, இப்போ?

285
00:22:24,970 --> 00:22:25,971
வந்து...

286
00:22:27,556 --> 00:22:30,517
உன் தவறு தானே. அப்போ, வா, போகலாம்.

287
00:23:19,441 --> 00:23:21,777
பிரேக் அறை

288
00:23:46,635 --> 00:23:47,886
மார்க்.

289
00:23:51,056 --> 00:23:52,933
ஆக நீங்க ஒரு டௌலாவா?

290
00:23:53,016 --> 00:23:55,352
ஒரு பிரசவம் பார்க்கும் பெண், உண்மையிலே.

291
00:23:57,688 --> 00:24:01,525
எவ்வளவு பிரசவம் பார்த்திருப்பீங்க,
இல்ல உதவியிருப்பீங்க?

292
00:24:05,404 --> 00:24:06,822
300க்கும் மேலே?

293
00:24:07,447 --> 00:24:09,199
பெரும்பாலும் மோன்டானாவிலே தான்.

294
00:24:09,283 --> 00:24:11,743
- அட. அது ரொம்ப நல்லது.
- ஆமாம்.

295
00:24:11,827 --> 00:24:14,162
அது பெரிய எண்ணிக்கை.

296
00:24:14,246 --> 00:24:17,749
ஆமாம். எங்களுக்கு,
ஒரு நாளைக்கு இரண்டு பிரசவ கேஸுகள் வரும்.

297
00:24:18,876 --> 00:24:19,918
அன்னிக்கு நிலையை பொருத்து.

298
00:24:30,012 --> 00:24:32,723
ஆக, அப்படீன்னா, ஒரு வாரத்துல பத்தா?

299
00:24:32,806 --> 00:24:34,725
ஒரு வாரத்துல அஞ்சு வேலை நாளுன்னா, அல்லது...

300
00:24:34,808 --> 00:24:36,435
- ஆமாம், கிட்டதட்ட.
- ஆம். சரி.

301
00:24:37,436 --> 00:24:41,106
- உங்க சகோதரிக்காக என்னை விசாரிக்கிறீங்களா?
- அட, இல்லயில்ல. நீங்க நல்லதான் செய்வீங்க.

302
00:24:41,190 --> 00:24:42,733
- ஆம், நான் சும்மாதான் சொன்னேன்.
- தெரியும்.

303
00:24:52,326 --> 00:24:53,410
நன்றி.

304
00:24:53,493 --> 00:24:55,996
ஆக, லுமனா?

305
00:24:57,122 --> 00:24:58,957
- ஆமாம்.
- இந்த ஊர்ல பாதி பேரைப் போல.

306
00:24:59,791 --> 00:25:01,835
அதோடு என்னோட ஒரு பாதியும்.
அது ஜோக்கு.

307
00:25:02,961 --> 00:25:03,962
வேடிக்கைதான்.

308
00:25:04,046 --> 00:25:09,885
ஆம். நான் அந்த ஆர்கைவ்ஸ் பிரிவுல இருக்கேன்,
ஒரு வகை நிறுவனங்களின் வரலாற்று ஆசிரியன் போல.

309
00:25:10,802 --> 00:25:14,181
அதனால நிறைய ரகசிய விஷயங்கள்,
அதனால, அந்...

310
00:25:16,892 --> 00:25:18,310
ஆகவே உங்களுக்குத் தெரியாதா...

311
00:25:19,770 --> 00:25:23,148
நீங்க யாரோட வேலை செய்யறீங்க, என்ன ஏதுன்னு,
அல்லது... எதுவுமே?

312
00:25:23,232 --> 00:25:24,942
ஆமாம், அது தானே விஷயமே.

313
00:25:25,025 --> 00:25:27,319
- ஒரு சீட்டை எங்காவது இடுக்கிக்கொண்டாலோ?
- சீட்டை இடுக்கிக்கொண்டு போக முடியாது.

314
00:25:27,903 --> 00:25:28,946
ஆகவே...

315
00:25:30,030 --> 00:25:31,907
- உங்களுக்குத் தெரியாமலேயே லுமனில் ஒரு...
- நன்றி.

316
00:25:31,990 --> 00:25:32,991
...காதலி இருக்கலாம்.

317
00:25:33,075 --> 00:25:35,702
அதோடு நீங்க இங்க யாரையும் சந்திச்சீங்கன்னா,
அங்க உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

318
00:25:36,286 --> 00:25:38,163
அதாவது, நீங்க திருமணமாகி உங்களுக்கு
குழந்தைகள் கூட இருக்கலாம்,

319
00:25:38,247 --> 00:25:40,791
ஆனாலும் தினமும் எட்டு மணி நேரம் அவங்க
இருக்காங்கன்னு கூட உங்களுக்கு மறந்துவிடும்,

320
00:25:40,874 --> 00:25:42,251
வாழ்நாள் முழுவதும்.

321
00:25:42,835 --> 00:25:44,336
அது உங்களுக்கு உறுத்தலா இல்ல?

322
00:25:47,631 --> 00:25:50,384
சிலருக்கு, அது தான்
பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன்.

323
00:25:55,305 --> 00:25:59,560
எனவே, நீங்கதான் இந்த ஊர் ஆளு,
சாதாரணமா இந்த வெப்பம் தான் இருக்குமா?

324
00:25:59,643 --> 00:26:01,603
சொல்லப்போனால்,
நான், கேன்ஸிலிருந்து வர்றேன்.

325
00:26:01,687 --> 00:26:04,022
நீதான் சொல்லணும்.

326
00:26:04,106 --> 00:26:08,318
அந்த ஏரியெல்லாம் இருப்பதால,
மின்னிசோட்டாவிலே பயங்கர குளிராக இருக்குமில்ல?

327
00:26:08,402 --> 00:26:10,737
ஆமாம். என் ஊரான மோன்டானாவிலிருந்து
ஒரு முறை அங்கு போன போது,

328
00:26:10,821 --> 00:26:14,908
மின்னிசோட்டாவிலே கடும் குளிராக தான் இருந்தது.

329
00:26:15,868 --> 00:26:17,035
ஆக அவை இரண்டும்
இரண்டு இடங்கள்.

330
00:26:18,120 --> 00:26:19,246
உம்-ஆம்.

331
00:26:20,414 --> 00:26:22,165
ஆக நீங்க லுமன் கொடுக்கும் வீட்டிலே
தான் இருக்கீங்களா?

332
00:26:23,500 --> 00:26:25,669
அது என்னவோ சாதாரண
டார்மெட்டரி மாதிரி இல்ல சொல்றீங்க.

333
00:26:26,420 --> 00:26:28,589
- இல்ல, அப்படி இல்ல, நான் சொல்ல வந்தது...
- நான் இருப்பது பேர்ட் க்ரீக்குல.

334
00:26:28,672 --> 00:26:33,343
ஆமாம், அதெல்லாம் நான் வேலை செய்யும்
நிறுவனத்தினால குறைந்த விலை கொடுக்கப்பட்டது.

335
00:26:33,427 --> 00:26:35,721
மன்னிக்கணும், குழந்தைகளின் அறிவு
ஆரோக்கியத்திற்காக ஒரு நிமிடம் ஒதுக்குறீங்களா?

336
00:26:35,804 --> 00:26:37,389
மற்றும் பணியிடத்தில்
செய்யப்படும் சட்டப்பூர்வ துண்டப்பு பற்றி பேச?

337
00:26:38,974 --> 00:26:41,602
- அட நல்லாயிருக்கு. டபிள்யூஎம்சி தான் அப்படியே.
- யாரு?

338
00:26:41,685 --> 00:26:44,313
பல துண்டிக்கப்பட்ட ஊழியர்கள்,
வாழ்நாளில் சூரிய ஒளியை பார்ப்பதே இல்லை.

339
00:26:44,396 --> 00:26:46,690
ஹோல் மைண்டு கலெக்டிவ்.
அவங்க சிறப்பா வேலை செய்யறாங்க.

340
00:26:46,773 --> 00:26:49,443
மன்னிக்கணும், குழந்தைகளின் அறிவு
ஆரோக்கியத்திற்காக ஒரு நிமிடம் ஒதுக்குறீங்களா?

341
00:26:49,526 --> 00:26:50,527
இல்ல, பரவாயில்ல.

342
00:26:50,611 --> 00:26:52,487
உங்களால குழந்தைகளின் அறிவு
ஆரோக்கியத்திற்காக ஒரு நிமிடம் ஒதுக்க முடியுமா?

343
00:26:52,571 --> 00:26:53,447
- முடியுமே.
- நல்லது!

344
00:26:53,530 --> 00:26:55,240
லுமனைப் போல மிகப் பெரிய நிறுவனங்கள்

345
00:26:55,324 --> 00:26:58,076
நம்ம மாவட்டத்தில தொடர்ந்து
சட்டப்பூர்வ துண்டிப்பை வற்புறுத்துவதை

346
00:26:58,160 --> 00:26:59,411
தடுக்க நாங்க வோட்டு சேகரிக்கிறோம்.

347
00:26:59,494 --> 00:27:00,871
அதை இப்போது வற்புறுத்தறாங்களா?

348
00:27:00,954 --> 00:27:03,749
அதை தான் அவங்க வேணும்னு கேட்குறாங்க.
ஜேம் ஈகன் குழந்தைகளின் மீது துண்டிப்பை செய்ய...

349
00:27:03,832 --> 00:27:07,085
சரி, தாங்களே முன்வந்து அந்த சுய-காயத்தை
ஏற்படுத்திக்கிறவங்களைப் பத்தி என்ன சொல்றீங்க?

350
00:27:07,169 --> 00:27:09,671
என்னன்னா, சிலருக்கு அவங்க
பாதிக்கப்பட்டிருக்காங்கன்னு

351
00:27:09,755 --> 00:27:11,507
தெரியாத அளவுக்கு,
மாய வலையில் விழுந்திருக்காங்க.

352
00:27:11,590 --> 00:27:14,176
நீங்க துண்டிக்கப்பட்டிறுந்தால், நீங்க

353
00:27:14,259 --> 00:27:17,346
இரு வகை நரகங்களை அனுபவிப்பீங்கன்னு
சொல்றாங்களே. உண்மையா?

354
00:27:17,429 --> 00:27:19,848
அட பாருப்பா, உனக்கு கட்டாய வேலையின்
லாபம் வேண்டுமென்றால், அது உன்னை...

355
00:27:19,932 --> 00:27:22,142
- ஏய், நண்பா. கட்டாய வேலையா?
- ...பொறுத்தது தானே.

356
00:27:22,226 --> 00:27:23,268
உண்மையாவா சொல்ற?

357
00:27:23,352 --> 00:27:24,561
- ஏய்!
- ஆமாம்.

358
00:27:24,645 --> 00:27:25,938
- வற்புறுத்தி வேலை செய்ய வைப்பாங்களா? சரி.
- உண்மையா.

359
00:27:26,021 --> 00:27:28,482
அதனால, அவங்களால,
சுயமா அடைப்பட்டு இருக்க முடியுமா?

360
00:27:28,565 --> 00:27:30,067
நீங்க இப்போ பாதிக்கப்பட்டிருக்கீங்களா?

361
00:27:30,150 --> 00:27:34,363
இல்ல, நிஜமா, உங்க முன்னாள் பிரதி
இங்க நடந்து வந்து

362
00:27:34,446 --> 00:27:36,907
இங்க அனைவருக்கும் ஒரு தொல்லையா
இருக்க ஆசைப்பட்டது.

363
00:27:36,990 --> 00:27:39,785
துண்டிப்புங்குறது அடிமைத்தனம், முட்டாளே.

364
00:27:40,786 --> 00:27:42,621
அட, அட, நல்ல வார்த்தையை பயன்படுத்தறீங்களே...

365
00:27:42,704 --> 00:27:44,122
உனக்கு... உனக்கு என்ன வயதாகிறது?
பன்னிரண்டு இருக்குமா?

366
00:27:44,206 --> 00:27:47,084
உனக்கு பன்னிரண்டு வயசாச்சா?
நீ உயர்நிலை பள்ளிக்காவது போயிருக்கியா?

367
00:27:49,753 --> 00:27:51,255
சரி. பாரு.

368
00:28:21,952 --> 00:28:22,953
திருமதி. செல்விக்.

369
00:28:23,453 --> 00:28:24,746
அமைதிக் கொடி.

370
00:28:25,789 --> 00:28:26,790
நாம சண்டைப் போடறோமா என்ன?

371
00:28:26,874 --> 00:28:30,002
நான் அந்த நாசமாப் போன
குப்பைத் தொட்டிகளைப் பத்தி யோசிச்சேன்.

372
00:28:30,961 --> 00:28:35,382
அட, அது பரவாயில்ல, இதெல்லாம் தேவையில்லை,
ஆனாம், உங்களுக்கு ரொம்ப அன்பு. நன்றி.

373
00:28:38,760 --> 00:28:41,221
நீங்க உள்ள வரலாமே? நான் பால் தருகிறேன்.

374
00:28:41,930 --> 00:28:43,682
- வரலாமே, நன்றி!
- ஆமாம்.

375
00:28:46,018 --> 00:28:49,855
நான் சமோமைல் கசாயத்தை குடிச்சு
பார்த்துகிட்டிருக்கேன், அதனால உளறினால் பரவாயில்ல.

376
00:28:49,938 --> 00:28:51,106
அதெல்லாம் செய்யமாட்டேன்.

377
00:28:54,359 --> 00:28:58,030
இன்னும் அந்த மூணாவது பல்பு தானே
எரியும்னு காத்திருக்கீங்களா?

378
00:28:58,113 --> 00:29:01,158
அட, ஆம். மாத்தறதுக்கு மறந்து போகிறேன்.

379
00:29:01,950 --> 00:29:04,786
அட, உங்ககிட்ட நல்ல வாசம் வருதே.
யாராவது பெண்ணை சந்திச்சீங்களா?

380
00:29:05,829 --> 00:29:12,753
ஒரு மாதிரி, ஆம். என் சகோதரி, தன் டௌலாவை,
அதாவது இடைப்பெண்ணை என்னோட அனுப்பினாங்க.

381
00:29:12,836 --> 00:29:14,505
எதுவும் நடக்கல.

382
00:29:19,885 --> 00:29:22,262
சரி, எங்க பார்க்கலாம். நான்...

383
00:29:32,064 --> 00:29:33,190
அடடே.

384
00:29:33,690 --> 00:29:35,150
இவை... இவை அற்புதமா இருக்கே.

385
00:29:39,446 --> 00:29:41,281
காலமான என் கணவர், ஒரு ஆசாரி,

386
00:29:41,365 --> 00:29:42,824
அவர் இறந்து போறதுக்கு முன்னாடி,

387
00:29:42,908 --> 00:29:47,788
நாங்க அடுத்த உலகத்துல வாழ ஒரு
வீடு கட்டப் போறேன்னாரு.

388
00:29:48,830 --> 00:29:52,292
அதுல பின்பக்கமா,
ஒரு சின்ன விருந்தினர் விடுதி இருக்கும்,

389
00:29:52,376 --> 00:29:55,337
ஒருவேளை நான் இறக்கும் முன் இன்னொருத்தரை
எனக்கு பிடிச்சு போச்சுன்னா, அதுக்காக.

390
00:29:58,966 --> 00:30:00,843
அது... அவருக்கு நல்ல மனசு.

391
00:30:02,970 --> 00:30:07,516
ஆமாம். அதுக்காக பிளுபிரிண்ட் எல்லாம்
தயார் செய்துட்டார், இன்னும் என் பர்ஸில இருக்கு.

392
00:30:13,063 --> 00:30:14,648
சரி, கடை பக்கம் வாங்க, என்ன?

393
00:30:14,731 --> 00:30:19,319
நான் உங்களுக்கு தூக்கம் வருகிறா மாதிரி
ஒரு ஜெல் தருகிறேன், நல்லா தூக்கம் வரும்.

394
00:30:19,403 --> 00:30:20,863
அங்க வர முயற்சி செய்யறேன்.

395
00:30:21,947 --> 00:30:23,448
இரவு வணக்கம், திருமதி. செல்விக்.

396
00:31:17,419 --> 00:31:19,838
ஜெம்மாவின் கலைகள்.

397
00:31:19,922 --> 00:31:21,924
தைரியம், என் புது பார்ட்னர் ஒரு பெண்.

398
00:31:22,007 --> 00:31:24,259
அதை முன்னாடியே நீ
சொல்லியிருக்கணும்னு நினைக்கிறேன்.

399
00:31:24,343 --> 00:31:28,931
உணவுக்கு... உணவுக்கு இல்ல,
நீ ஆபத்துக்கு தயாரா இரு.

400
00:32:03,632 --> 00:32:05,259
துண்டிப்பை நிறுத்து!

401
00:32:05,342 --> 00:32:09,388
தார்மீக ரீதியாக ஊழியரின்
சுய-ஆளுமையை பறித்து விடுகிறது துண்டிப்பு

402
00:32:28,740 --> 00:32:30,868
செத் மில்சிக்,
லுமன் இன்டஸ்டிரீஸ்.

403
00:32:30,951 --> 00:32:33,036
திரு. மில்சிக், நான் தான் மார்க் ஸ்கௌட்.

404
00:32:33,120 --> 00:32:36,081
நான் ஒரு துண்டிக்கப்பட்ட ஊழியர்.
என் தொழிலாளர் எண் 4502.

405
00:32:36,164 --> 00:32:39,168
திரு. ஸ்கௌட், ரொம்ப சந்தோஷம்.
நான் எப்படி உங்களுக்கு உதவலாம்?

406
00:32:39,251 --> 00:32:41,712
இன்னிக்கு எழுந்த போதே
உடம்பு சரியாயில்லை.

407
00:32:41,795 --> 00:32:43,380
நான் இப்போ கூப்பிடறதுக்கு மன்னிக்கணும்.

408
00:32:44,047 --> 00:32:47,176
பரவாயில்ல.
அது எவ்வளவு மோசமா இருக்கு, சொல்லலாமா?

409
00:32:47,259 --> 00:32:51,930
சரி, மோசமா இல்ல,
ஒரு சின்ன வயித்துப் போக்கு.

410
00:32:52,014 --> 00:32:53,307
நாளைக்கு வந்துவிடுவேன்.

411
00:32:54,391 --> 00:32:55,517
என்னை மன்னியுங்க.

412
00:32:55,601 --> 00:32:58,228
வேலைக்கு வர முடியாததைப் பத்தி
உங்கள் உட்புறம் ரொம்ப வருத்தப்படும்.

413
00:33:00,522 --> 00:33:02,983
நல்லா குணமாகுங்க. சரியா, திரு. ஸ்கௌட்?

414
00:33:07,946 --> 00:33:10,324
- மார்க் எங்க?
- உன் பிரிவையும் உணர்ந்தேன்.

415
00:33:10,407 --> 00:33:13,327
அவன் தான் முதல்ல வருவான்.
நீ என்ன நினைக்கிற, அவனை...

416
00:33:13,410 --> 00:33:15,996
ஒருவேளை உடம்பு சரியாயிருக்காது. அவனையும்
பீட்டியையும் ஒரே வாரத்துல அனுப்பிட மாட்டாங்க.

417
00:33:16,079 --> 00:33:17,414
அப்படி இருக்கக்கூடாது.

418
00:33:17,497 --> 00:33:18,916
காலாண்டு இறுதி நெருங்கிட்டிருக்கு,

419
00:33:18,999 --> 00:33:21,502
நான் டிபார்ட்மெண்ட் தலையாக இருக்க விரும்பலை.

420
00:33:21,585 --> 00:33:25,422
அடப் பாருடா. ஒரு தரம் தூங்கிட்டு இருந்தப்போ
பிடிபட்டவனுக்கு, இது அதிகமான தன்நம்பிக்கைதான்.

421
00:33:27,841 --> 00:33:29,343
மன்னிக்கணும். அது வந்து...

422
00:33:32,137 --> 00:33:35,182
உன்னைவிட வயதான என்னை அவங்க
சேர்த்துகிட்டதுக்கு நான் எதுவும் செய்ய முடியாது.

423
00:33:37,976 --> 00:33:39,603
இதுக்கு முடிவேயில்ல, இல்ல?

424
00:33:39,686 --> 00:33:40,938
முடிவில்லாம கஷ்டப்பட்டு உழைக்கணும்.

425
00:33:42,272 --> 00:33:43,398
மார்க் எங்க?

426
00:33:43,482 --> 00:33:45,651
உடம்பு சரியில்ல, இல்ல தூக்கிட்டாங்க.
சுகமில்லாம இருக்கலாம்.

427
00:33:46,151 --> 00:33:48,237
என்னுடைய அந்த சீட்டு விஷயத்துக்காக
அவனை தூக்கியிருக்க மாட்டாங்க, இல்ல?

428
00:33:48,320 --> 00:33:51,031
இல்ல. மாட்டாங்க. நேத்து அவன்
பிராயச்சித்தத்தை பிரேக் அறையில செய்திட்டான்.

429
00:33:55,160 --> 00:33:56,370
சுகமில்லன்னு சொன்னான்.

430
00:33:56,954 --> 00:33:58,163
சகமில்லாதது போல இருந்ததா?

431
00:33:58,247 --> 00:34:00,499
தெரியலை. வயித்துப் போக்குன்னு சொன்னான்.

432
00:34:02,042 --> 00:34:03,210
இந்த நேரத்துலங்குறது வேடிக்கையா இருக்கு.

433
00:34:24,481 --> 00:34:26,149
499 அரைச் சுற்று தெரு.

434
00:34:44,877 --> 00:34:47,963
நம்மிடம் பென்சில்கள்
இல்லங்குறதால, ரப்பர் எல்லாம் வெறும் காட்சிக்கு தான்.

435
00:34:48,045 --> 00:34:50,382
விரல் பிடி நல்லாயிருக்கு, அதை எப்படி
பாதுகாப்பா உபயோகிக்கணும் தெரிஞ்சா.

436
00:34:50,465 --> 00:34:53,594
ஆனால், உண்மையில, அது பிரதிபலிக்கிறது என்னன்னா,
நீ கோப்புக்குள்ள எவ்வளவு ஆழமா இருக்கன்னு தான்.

437
00:34:54,261 --> 00:34:57,139
- ஆனால் நாம ஏன் போப்புகளை முடிக்கிறதேயில்ல?
- ஏன்னா அவ்வளவு நேரம் அதை வைச்சுப்பாங்க.

438
00:34:57,806 --> 00:35:01,185
சுமாரா, நாம அவை காலாவதி ஆகுறதுக்கு முன்,
நாம அஞ்சுல ஒரு போப்பை முடிக்கிறோம்.

439
00:35:01,268 --> 00:35:04,938
மார்க்குக்கு முதல் முறை அதிர்ஷ்டமடிச்சு வருவதுக்கு
முன்னாடி இருந்ததோட, இப்போ நல்லாயிருக்கு.

440
00:35:05,022 --> 00:35:06,273
முதல் முறை அதிர்ஷ்டம்னா என்ன?

441
00:36:05,332 --> 00:36:06,416
இல்ல!

442
00:36:07,251 --> 00:36:08,252
இர்வ்?

443
00:36:11,129 --> 00:36:12,464
என்னை... என்னை மன்னிச்சிடுங்க.

444
00:36:13,257 --> 00:36:14,299
இர்விங்?

445
00:37:17,404 --> 00:37:20,490
நீங்க தூங்கின நேரத்துக்கு ஈடா, வரும்
வெளிபுறத்தோட சம்பளத்துல குறைச்சுடுவோம்.

446
00:37:20,991 --> 00:37:24,661
இர்விங், எனக்கும் மிஸ். கோபெலுக்கும் உங்க
மேல இருந்த நம்பிக்கை தான் போயிடுச்சு.

447
00:37:25,204 --> 00:37:28,081
என்னை மன்னிச்சிடுங்க சார்.

448
00:37:28,165 --> 00:37:31,126
யாரும் உங்களை
பிரேக் அறையில் போட சொல்லி வற்புறுத்தல.

449
00:37:31,835 --> 00:37:34,922
நாம மிஸ். கேஸியிடம் ஒரு ஆரோக்கிய செக் அப்
செய்துட்டு, அங்கிருந்து போகலாம், சரியா?

450
00:37:35,422 --> 00:37:36,840
நன்றி, திரு. மில்சிக்.

451
00:37:38,342 --> 00:37:39,635
ஆரோக்கியம்

452
00:37:43,805 --> 00:37:46,141
உங்கள் நரம்புகளில் பலவீனத்தை தங்கவிடாதீர்கள்.
கியர் ஈகன்

453
00:37:46,225 --> 00:37:48,227
கோபத்தை அடக்குங்கள்.
கியர் ஈகன்

454
00:37:59,404 --> 00:38:00,656
இன்னும் பயப்படும்படி எதுவும் இல்லை.

455
00:38:09,957 --> 00:38:11,291
அடக் கடவுளே! ஒரு நாலு!

456
00:38:11,375 --> 00:38:12,543
சும்மா விளையாடாதே.

457
00:38:13,085 --> 00:38:16,338
நான் சொன்னேன் இல்ல, பார்த்ததும்
புரிஞ்சுப்பன்னு, அதனால பொறுமையா இரு.

458
00:38:16,964 --> 00:38:18,423
இந்த எண்கள் எல்லாம் என்ன?

459
00:38:18,507 --> 00:38:20,884
குறைந்தது நாம எதை சுத்தம் செய்றோம்னு தெரியாமா?

460
00:38:23,262 --> 00:38:24,263
என் யூகம் என்ன தெரியுமா?

461
00:38:25,973 --> 00:38:26,974
கடல்.

462
00:38:29,268 --> 00:38:30,269
கடலா?

463
00:38:30,978 --> 00:38:32,437
ஆமாம். யோசித்து பாரு.

464
00:38:32,521 --> 00:38:35,649
இப்போ, நம்ம வெளிப்புறங்கள் அவங்க
தலையை துண்டிக்க ஒத்துகிட்டு இருக்காங்கன்னா,

465
00:38:35,732 --> 00:38:37,526
அங்க வெளியில நடப்பது
ரொம்ப மோசமாக தானே இருக்க முடியும்.

466
00:38:37,609 --> 00:38:40,279
பஞ்சம், பிளேகு, இத்யாதிகள்.

467
00:38:40,362 --> 00:38:43,574
ஆகவே பாவம், மனித இனம் என்னதான் செய்யும்?

468
00:38:46,034 --> 00:38:47,035
கடலுக்குள்ள போயிடுமா?

469
00:38:47,119 --> 00:38:48,495
கடல்ல போய் வாழ்வது தான்.

470
00:38:48,579 --> 00:38:52,332
ஆனால், அதுக்கு முன், அதுக்குள்ள ஊடுருவி பார்த்து,
கடலுக்குள்ள இருதக்கும் அந்த மோசமான ஈல்கள்,

471
00:38:52,416 --> 00:38:55,878
இன்னும் மிச்சத்தை எல்லாம் சுத்தம் செய்யணும்,
ஏன்னா அதுகளோட நாம சேர்ந்து வாழ முடியாதே.

472
00:38:56,378 --> 00:38:59,882
அதனால, நாம ஊடுறுவி பார்ப்போம், அந்த கருவிகள்
நமக்கு கோட் செய்த டாட்டாவை அனுப்பும்,

473
00:38:59,965 --> 00:39:04,511
நாம எது ஈலுன்னு கண்டுபிடிச்சு, அந்த
கருவிகளுக்கு எதை அழிக்கணும்னு சொல்கிறோம்.

474
00:39:08,015 --> 00:39:09,266
இது தான் எல்லோரும் நம்புறதா?

475
00:39:11,226 --> 00:39:14,313
இல்ல, நாம திரைப்படங்களிலிருந்து கெட்ட
வார்த்தைகளை அழிக்கிறோம்னு இர்வ் நினைக்கிறான்.

476
00:39:18,775 --> 00:39:22,362
ஆனால அது என்ன? நாம என்ன... எதை வைத்து
உண்மையிலே வேலை செய்துகிட்டு இருக்கோம்?

477
00:39:24,448 --> 00:39:25,449
எனக்குத் தெரியாது.

478
00:39:26,742 --> 00:39:29,328
துண்டிப்பு இல்லாம இன்னும்
நல்லா புரியும்னு நினைச்சேன், ஆனால்...

479
00:39:31,163 --> 00:39:33,832
மத்த டிபார்ட்மெண்டுகளிலிருந்தும்
நம்மை பிரிச்சிடுறாங்க.

480
00:39:33,916 --> 00:39:35,751
எவ்வளவு இருக்குன்னு கூட நமக்குத் தெரியாது.

481
00:39:40,255 --> 00:39:42,508
ஆனால் என்னை இரண்டு வாரங்களுக்கு முன்
எனக்கு மறு பிணைப்பு செய்துட்டாங்க.

482
00:39:45,135 --> 00:39:46,887
நான் தரையின் வரைபடத்தை போட்டுகிட்டு இருக்கேன்.

483
00:39:58,607 --> 00:40:00,984
நான் அங்கிருந்து வெளியேறின போது
உனக்காக அசலை மறைத்து வைத்தேன்.

484
00:40:03,070 --> 00:40:04,696
பிரேக் அறை

485
00:40:20,963 --> 00:40:22,089
நீ நலமா?

486
00:40:30,222 --> 00:40:31,223
மன்னிச்சிடுப்பா.

487
00:40:32,599 --> 00:40:33,892
மறுபிணைப்பு பிரச்சினைகள்.

488
00:40:36,520 --> 00:40:38,188
அப்படி ஒண்ணு இருப்பதே தெரியாதே.

489
00:40:38,981 --> 00:40:41,400
ஏன்னா, அதை செய்துகிட்ட
முதல் மாங்மடையன் நான் தான்.

490
00:40:42,693 --> 00:40:46,530
அதோடு, ஒரு குளிர்ந்த கிரீன்ஹௌஸில் இருப்பது
ரோம்ப கஷ்டம், ஆனால் வீடு திரும்ப முடியாது.

491
00:40:49,658 --> 00:40:53,787
சரி, அங்க அவ்வளவு மோசமா
என்ன தான் அப்படி நடக்குது?

492
00:40:57,666 --> 00:40:58,667
அங்க ஒரு அறை இருக்கு...

493
00:41:05,340 --> 00:41:07,759
நாம சரியா நடந்துக்காத போது அதுக்குள்ள போவோம்.

494
00:41:15,517 --> 00:41:16,643
அது என்ன?

495
00:41:23,358 --> 00:41:24,943
நீங்க வருந்தலைன்னு எனக்குத் தோணுது.

496
00:41:26,069 --> 00:41:30,282
தயவுசெய்யுங்க. நிஜமா. நான் வருந்துகிறேன்.

497
00:41:30,365 --> 00:41:32,034
தயவுசெய்து அந்த வரியை மீண்டும் படிங்க.

498
00:41:33,994 --> 00:41:38,415
நான் இந்த உலகிற்கு
செய்த தீமைக்கு என்னை மன்னிக்கவும்.

499
00:41:38,498 --> 00:41:44,338
என் செயல்களுக்கு என்னைத் தவிர வேறு யாரும் வருந்த
முடியாது, என்னில் மட்டுமே அந்த கரைகள் வாழும்.

500
00:41:44,421 --> 00:41:46,632
என்னை பிடித்ததற்கு நான் நன்றியுடன் இருக்கிறேன்,

501
00:41:46,715 --> 00:41:50,802
அந்த மேன்மை பொருந்திய கரங்களால்
என் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தியமைக்கு நன்றி.

502
00:41:51,678 --> 00:41:55,307
நான் செய்யக்கூடியதெல்லாம் வருந்துவது தான்,
நான் செய்வதெல்லாம் அது தான்.

503
00:41:56,475 --> 00:42:00,896
நீங்க பொருள் உணர்ந்து சொல்லலை.
மீண்டும் சொல்லுங்க, தயவுசெய்து.

504
00:42:02,439 --> 00:42:07,069
நான் இந்த உலகிற்கு
செய்த தீமைக்கு என்னை மன்னிக்கவும்.

505
00:42:08,570 --> 00:42:11,865
என் செயல்களுக்கு என்னைத் தவிர
வேறு யாரும் வருந்த முடியாது.

506
00:42:15,327 --> 00:42:16,662
என்ன கண்ராவி இது?

507
00:42:19,081 --> 00:42:20,332
அது தான் பிரேக் அறை.

508
00:42:53,448 --> 00:42:54,700
மன்னிச்... மன்னிச்சிடுங்க.

509
00:42:54,783 --> 00:42:56,034
இல்ல, என்னை மன்னிச்சிடுங்க, சார்.

510
00:42:56,118 --> 00:42:58,328
இங்க யாரும் இருந்திருப்பாங்கன்னு நான் நினைக்கலை.

511
00:42:58,412 --> 00:43:01,206
நான் என் நேரத்தை முடிச்சிட்டு வருகிறேன்.

512
00:43:01,290 --> 00:43:06,587
நான் இப்போ தான் போகிறேன். காத்திருக்கும்
நேரத்தில, கலையை ரசிக்கிறேன்.

513
00:43:07,462 --> 00:43:11,133
அந்த படம், நிரந்தர பகுதியில,
பல வருடங்களா தொங்கிட்டு இருந்தது.

514
00:43:11,216 --> 00:43:14,094
தெரியும். அதை அவங்க எடுத்த போது
என் மனசே உடைஞ்சு போச்சு.

515
00:43:14,678 --> 00:43:16,972
இங்க பரவாயில்ல. அமைதியைத் தருது.

516
00:43:20,184 --> 00:43:22,895
நான் இர்விங். மேக்ரோடேட்டா சுத்திகரிப்பு.

517
00:43:23,478 --> 00:43:24,938
நீங்க டிபார்ட்மெண்ட் தலையா?

518
00:43:25,022 --> 00:43:26,940
நான், ஆப்டிக்ஸ் மற்றும் டிசைன்.

519
00:43:27,691 --> 00:43:30,152
இரண்டு பேர் கொண்ட டிபார்ட்மெண்ட்,
அதனால, சொல்லிக்கலாம்.

520
00:43:30,235 --> 00:43:31,653
ஆக இது உங்க வேலை தான்?

521
00:43:32,446 --> 00:43:35,199
நாங்க அவற்றை வர்ணம் பூசுவதில்ல.
ஆனால மாட்டுவோம்.

522
00:43:35,282 --> 00:43:40,495
போன காலாண்டுல, குழு-அமைப்பு இடத்துல
உங்க ஆம்பிரோஸ் வளையம் எனக்கு பிடித்துப் போனது.

523
00:43:41,038 --> 00:43:42,956
நான் பார்த்ததேயில்ல.

524
00:43:43,457 --> 00:43:45,959
ஒரு நவீனமானவரை சந்திப்பது அரிது தான்.

525
00:43:46,877 --> 00:43:50,881
பெரும்பாலும் ஓ&டியைப் பத்தி மக்களுக்கு ஞாபகம்
வருவது புது கைப்புத்தகப் பைகள் வரும் போது தான்.

526
00:43:51,924 --> 00:43:53,717
அட, எனக்கும் அவை பிடிக்கும்.

527
00:43:53,800 --> 00:43:55,177
அப்படியா?

528
00:43:55,260 --> 00:43:57,638
அடுத்த மாசம் புதுசு வரும்.

529
00:43:58,597 --> 00:44:00,390
இது வரை வந்ததுல, மிக நல்ல டிசைன்,
என் பிரகாரம்.

530
00:44:01,433 --> 00:44:05,437
ஓ, அப்படியா! அப்போ அது வரும் வரை
நான் அதைப் பத்திதான் யோசிப்பேன்.

531
00:44:06,063 --> 00:44:06,897
இர்விங்?

532
00:44:45,352 --> 00:44:46,645
சரி, இர்விங்.

533
00:44:47,479 --> 00:44:51,400
உன் வெளிப்புற பிரதியைப் பத்திய சில உண்மைகள
நான் உங்களுடன் பகிர விரும்புறேன்.

534
00:44:51,483 --> 00:44:53,694
இர்விங் பி - ஆரோக்கிய மையம்
நோயாளியின் வெளிப்புற உண்மைகள்

535
00:44:53,777 --> 00:44:58,991
உங்க வெளிப்புறம் மிகவும் அருமையானவரானதால்,
உண்மைகள் இனிதாக இருக்கும்.

536
00:45:00,659 --> 00:45:04,663
உங்க உடம்பை இளைப்பாற விட்டு,
உண்மைகளை ஏற்க தயாராகுங்க.

537
00:45:05,455 --> 00:45:08,584
எல்லாத்தையும் தனித்தனியே சமமாக
அனுபவிக்க முயற்சி செய்யுங்க.

538
00:45:09,918 --> 00:45:13,130
இந்த உண்மைகளை இந்த அறைக்கு
வெளியே யாருடனும் பகிரக்கூடாது.

539
00:45:14,673 --> 00:45:17,885
ஆனால் தற்சமயம், நீங்க அவற்றை அனுபவிக்கலாம்.

540
00:45:23,390 --> 00:45:25,350
உங்க வெளிப்புறம் மிக தாராளமானவர்.

541
00:45:27,978 --> 00:45:31,899
உங்கள் வெளிப்புறம் இசையை ரசிப்பவர்
அதனால் நிறைய இசைத்தட்டுகளை வைத்துள்ளார்.

542
00:45:33,650 --> 00:45:39,448
வயதானவர்கள், கிறுக்கர்கள், மற்றும் குழந்தைகளுக்கு
உங்க வெளிப்புறம் உற்ற நண்பர்.

543
00:45:41,491 --> 00:45:45,704
மிக கனமான பொருளை தூக்க யாருக்கோ
உங்க வெளிப்புறம் உதவியிருக்கார், பலமானவர்.

544
00:45:47,748 --> 00:45:53,420
பல நடனங்களில் பங்கெடுத்து, மற்றவர்களிடம்
பிரபலமானவராக இருக்கிறார் உங்க வெளிப்புறம்.

545
00:45:54,755 --> 00:46:01,720
அவருக்கு திரைப்படங்கள் பிடிக்கும், அவற்றை
காட்டும் ஒரு கருவிக்குச் சொந்தக்காரர்.

546
00:46:03,430 --> 00:46:08,894
நன்றாக நீச்சல் தெரியும், நன்றாக
அழகாக நீச்சலிடுவார் உங்கள் வெளிப்புறம்.

547
00:46:10,395 --> 00:46:11,605
வருந்துகிறேன்.

548
00:46:12,481 --> 00:46:15,067
எல்லா உண்மைகளையும்
சமமாக அனுபவிக்க முயற்சி செய்யுங்க

549
00:46:15,734 --> 00:46:18,403
அதோடு எந்த ஒன்றுக்கும் உங்க
விருப்பத்தைக் காட்டக் கூடாது.

550
00:46:18,987 --> 00:46:21,990
அதனால உங்களுக்கு பத்து புள்ளிகள் குறைச்சல்.
இன்னும் 90 புள்ளிகள் இருக்கு.

551
00:46:22,074 --> 00:46:24,284
- புள்ளிகளா?
- தயவுசெய்து பேச வேண்டாம்.

552
00:46:32,042 --> 00:46:34,628
இரண்டு வாரங்களுக்கு முன் உங்க வெளிப்புறம்
ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றார்.

553
00:46:36,046 --> 00:46:38,632
உங்க வெளிப்புறம் நீரை மதிப்பவர்.

554
00:46:39,925 --> 00:46:44,638
ஒரு விருதுடன் உங்க வெளிப்புறத்தின் ஃபோட்டோ
ஒன்று, ஒரு முறை செய்தித்தாளில் வந்திருந்தது.

555
00:46:46,265 --> 00:46:50,602
உங்க வெளிப்புறம் கேடிக் கும்பலைப் பார்த்தோ
அல்லது அடியாட்களைப்ப பார்த்தோ பயப்படுவதில்லை.

556
00:46:52,563 --> 00:46:55,607
உங்க வெளிப்புறத்துக்கு ராடாரின் ஒலி பிடிக்கும்.

557
00:46:58,193 --> 00:47:03,073
உங்க வெளிப்புறம் காதல் புரிவதிலும்,
முத்தமிடுவதிலும் கைதேர்ந்தவர்.

558
00:47:05,909 --> 00:47:06,910
வருந்துகிறேன்.

559
00:47:06,994 --> 00:47:09,913
குறிப்பாக எந்த உண்மைக்கும் பதில் கூற வேண்டாம்.

560
00:47:09,997 --> 00:47:11,790
அதுக்கு பத்து புள்ளிகள் குறைவு.

561
00:47:11,874 --> 00:47:14,084
- நான் வெறுமன...
- இதுக்கு மேலும் எதுவும் சொல்லாதீங்க,

562
00:47:14,168 --> 00:47:18,005
அல்லது மிச்சமிருக்கும் புள்ளிகள் எல்லாம்
குறைக்கப்பட்டு ஆரோக்கிய நேரம் முடிந்துவிடும்.

563
00:47:22,259 --> 00:47:24,511
ஒரு நாளைக்கு ஒருவருக்கு
இரண்டு டோக்கன்கள் மட்டுமே

564
00:47:35,772 --> 00:47:36,815
சரி.

565
00:47:39,443 --> 00:47:40,944
எடாமாமே - உலர்ந்த திராக்ஷைகள்
நிலக்கடலை - இனிப்புகள்

566
00:47:47,743 --> 00:47:49,494
புளூபெர்ரீஸ் - கின்செங்கு
சூரியகாந்து விதைகள் - புதினா

567
00:47:53,081 --> 00:47:54,041
உலர்ந்த திராக்ஷைகள்

568
00:47:57,753 --> 00:47:59,254
- வெறும் லிஃப்டுகள் மட்டும் தானா?
- என்னது?

569
00:47:59,338 --> 00:48:01,673
கோட் டிடெக்டர்களுடன் இருப்பவை.
அல்லது படிக்கட்டுகளிலும் உள்ளனவா?

570
00:48:01,757 --> 00:48:03,675
கடவுளே. படிக்கட்டுகளிலும் உண்டு. ஏன்?

571
00:48:03,759 --> 00:48:05,969
யாருமே ராஜினாமாவை ஏற்கலைன்னா,

572
00:48:06,053 --> 00:48:07,846
அதெல்லாம் போய்
சேருகிறதுன்னு உனக்கு எப்படி தெரியும்?

573
00:48:07,930 --> 00:48:10,224
நீ இந்த தகவலை கடத்தல் செய்யும்
யோசனையை விட்டுவிடணும்.

574
00:48:10,307 --> 00:48:11,558
சரி, ஆனால் அந்த ஸ்கானர்கள் நல்ல தரமானவையா?

575
00:48:11,642 --> 00:48:14,811
அந்த எழுத்துக்களை வேறு விதமா எழுதினா என்ன,
அந்த ரோபோ சோதனைகளிலே இருப்பது போல?

576
00:48:14,895 --> 00:48:16,772
- ஹே, பசங்களா. இரவு உணவு என்ன?
- இல்ல!

577
00:48:16,855 --> 00:48:18,106
ஆரோக்கியம் எப்படி இருந்தது?

578
00:48:18,190 --> 00:48:20,067
சிறப்பு. ரொம்ப புத்துணர்ச்சி ஊட்டுவது.

579
00:48:20,150 --> 00:48:21,944
நான் ஓ&டி டிபார்ட்மெண்ட் தலையை சந்தித்தேன்.

580
00:48:22,027 --> 00:48:26,198
பர்ட்டா? நான் அந்த ஆளை பார்த்திருக்கேன். அவன்
மோசம். நாம இங்க இருப்பதைச் சொல்லலை, இல்ல?

581
00:48:26,281 --> 00:48:28,367
பர்ட் ஒண்ணும் மோசமில்லை. அதோடு இல்ல.

582
00:48:28,450 --> 00:48:30,577
நான் இந்த டிபார்ட்மெண்டுக்கு
பாதுகாப்பை கேட்கிறேன்.

583
00:48:30,661 --> 00:48:32,120
- நான் சொல்லத் தேவையில்லை...
- அதெல்லாம் கதைன்னு.

584
00:48:32,204 --> 00:48:34,039
இந்த டிபார்ட்மெண்டைப் பத்து உங்களுக்கு
அக்கறைன்னு வேஷம் போடவேண்டாம்.

585
00:48:34,122 --> 00:48:35,749
உனக்கு உன் வாஃபில் பார்ட்டி மட்டும்
தான் வேண்டும்.

586
00:48:35,832 --> 00:48:38,794
அடடா, மன்னிச்சு தொலையுங்க.
நமக்கு தரப்படும் கொசுறுகளை நாம் ரசிக்கணும்.

587
00:48:38,877 --> 00:48:42,881
"லுமனின் அரவணைப்பில் அனைவரும் ஊக்கத்
தொகையின் மிகுதியில் திளைப்பார்கள்."

588
00:48:42,965 --> 00:48:45,676
என்னிடம் சும்மா உன் கைப்புத்தக
அறிவை காட்டாதே, சரியா?

589
00:48:45,759 --> 00:48:46,927
- அதை செய்யாதே.
- ஹே, பசங்களா?

590
00:48:47,010 --> 00:48:48,846
லுமன் நமக்கு நல்லது செய்திருக்கு,
அதனால நாம...

591
00:48:48,929 --> 00:48:49,930
பசங்களா!

592
00:48:58,480 --> 00:48:59,731
அது.

593
00:49:00,524 --> 00:49:01,525
ஆம்.

594
00:49:02,150 --> 00:49:03,694
ஏன்... ஏன் அது...

595
00:49:03,777 --> 00:49:06,488
நீ சரியா தான் செய்கிறாய். நான் உனக்கு
காமிச்சது போல, கெட்ட டெட்டாவை ஒதுக்கிடு.

596
00:49:06,572 --> 00:49:08,448
உன்னால் சுத்தளவை பார்க்க முடிகிறதா?

597
00:49:17,624 --> 00:49:19,042
இப்போ அதை பெட்டியில போடு.

598
00:49:31,263 --> 00:49:33,140
பூம், எழவு சுத்திகரிப்பு ஆகியிருக்கு.

599
00:49:33,223 --> 00:49:35,392
சரி, ஹெல்லி. ஹிப், ஹிப்.

600
00:49:36,143 --> 00:49:39,146
அது ரொம்ப பயமா இருந்தது,
அந்த எண்கள் அச்சுறுத்தலா இருந்தது.

601
00:49:56,997 --> 00:50:00,375
இந்தா படுக்கை.
நான் உனக்கு ஒரு ஸ்லீபிங் பாகை கண்டுபிடிக்கிறேன்.

602
00:50:01,251 --> 00:50:04,671
அப்பறம் உனக்கு வேணும்னா, ஷவரை
உபயோகித்துக் கொள்.

603
00:50:05,422 --> 00:50:06,840
நீ என்ன சொல்ல வர்ற?

604
00:50:11,845 --> 00:50:13,138
இதைச் செய்ததற்கு
மிகவும் நன்றி, மார்க்.

605
00:50:13,680 --> 00:50:16,517
வந்து, எனக்கு முன்கூட்டியே தெரியும்,
என் வேலை-செய்யும் பிரதிக்கு

606
00:50:16,600 --> 00:50:18,185
உன்னை கிரீன்ஹௌவுஸில்
தங்க விட்டால் பிடிக்காதுன்னு.

607
00:50:24,316 --> 00:50:25,317
விளக்கு இடது பக்கம் இருக்கு.

608
00:50:46,004 --> 00:50:47,005
கெம்பிங்

609
00:50:53,011 --> 00:50:54,179
நீ அங்க சௌரியமா இருக்கியா?

610
00:50:54,263 --> 00:50:56,557
ஆமாம்! ஆமாம், நல்லாயிருக்கேன்.

611
00:52:09,546 --> 00:52:10,672
பீட்டி, நீ நலமா இருக்கியா?

612
00:53:13,694 --> 00:53:14,736
காலிப் ஸ்மித்
அன்பான நினைவஞ்சலி

613
00:53:14,820 --> 00:53:16,822
தமிழாக்கம் அகிலா குமார்

