1
00:00:10,844 --> 00:00:12,054
பீட்டி, நீ நல்லாயிருக்கயா?

2
00:00:17,768 --> 00:00:19,019
பீட்டி?

3
00:00:19,102 --> 00:00:25,025
நான் நல்லாயிருக்கேன். வழுக்கி விழுந்துட்டேன்.
நீ ஒரு மிதியடி வாங்கிப்போடணும், அப்பா.

4
00:00:25,108 --> 00:00:29,655
ஆமாம், சரி. நீ போட்டிருக்கும் உடை
என் மச்சான் அன்பளிப்பா தந்தது.

5
00:00:29,738 --> 00:00:32,824
நான் அத போட்டுக்கவேயில்ல.
அதனால் கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கும். மன்னிச்சிடு.

6
00:00:34,743 --> 00:00:36,620
தலையணைகள் இருக்கு.
வேறு எதுவும் உனக்கு வேண்டுமா?

7
00:00:37,538 --> 00:00:40,290
ஆமாம், இந்த நல்ல ஆடையைப் பத்தி
குறைவா பேசுறத நிறுத்தணும்.

8
00:00:41,792 --> 00:00:43,293
சரி, நீயே அதை வைச்சுக்கோ.

9
00:00:43,377 --> 00:00:44,670
வைச்சுக்கறேன்.

10
00:00:44,753 --> 00:00:49,341
ஏய். இந்த சின்ன ஜன்னல்கள் வழியா நிச்சயமா
யாராலும் இங்க உள்ள பார்க்க முடியாதில்ல?

11
00:00:49,424 --> 00:00:50,509
பார்க்கமுடியாது.

12
00:00:50,592 --> 00:00:52,261
மேலும் மேலே எல்லா இடமும் பூட்டியிருக்கு.

13
00:00:53,679 --> 00:00:55,931
அந்த பக்கத்து வீட்டுல யாரும் குடியிருக்காங்களா?

14
00:00:56,014 --> 00:00:58,892
இல்ல, திருமதி. செல்விக் மட்டுமா தான்
இருக்காங்க, அதுவும் அந்த பக்கமா.

15
00:00:58,976 --> 00:01:04,188
உண்மையில இந்த காலனியில அவ்வளவா
யாரும் குடி வரலை. நல்லா, அமைதியா இருக்கு.

16
00:01:06,066 --> 00:01:07,860
தனிமையின் கோட்டை.

17
00:01:08,652 --> 00:01:11,738
அவ்வப்போது சந்திக்கிறதுல தப்பேதும்
இருக்கிற மாதிரி எனக்குத் தெரியலை.

18
00:01:11,822 --> 00:01:15,200
நான் செக் பண்ணினேன், கைப்புத்தகத்தில
அதை தடையின்னு எங்கேயும் கொடுக்கப்படலை.

19
00:01:15,284 --> 00:01:16,285
ஆமாம், நிச்சயமா!

20
00:01:16,368 --> 00:01:19,538
கடந்த காலாண்டுலே, எல்லா ஊழியர்களையும் சேர்த்து
ஒரு பார்ட்டி வைக்கலாம்னு கோபெலை வற்புறுத்தினேன்.

21
00:01:19,621 --> 00:01:22,416
உனக்கு அந்த தகுதி வர்றப்போ, அது கிடைக்கும்னு
சொல்லிட்டாங்க, அதுக்கு என்ன அர்த்தமோ.

22
00:01:22,499 --> 00:01:25,043
- கோபெலா?
- டைலன் சன்செட் பார்க் கோப்புல 4 சதம்

23
00:01:25,127 --> 00:01:26,879
முடிச்சுட்டான்னு நம்ப முடியலை...

24
00:01:28,505 --> 00:01:29,798
பீட்டி?

25
00:01:31,216 --> 00:01:32,384
நீ நல்லாயிருக்கியா?

26
00:01:35,971 --> 00:01:37,723
ம்ம், மன்னிச்சிடு.

27
00:01:39,725 --> 00:01:43,896
இந்த வியாதியோட, நான்...
அப்பப்போ தடம் புரண்டு போயிடறேன்.

28
00:01:44,855 --> 00:01:45,856
கொஞ்ச நேரத்துக்குதான்.

29
00:01:47,858 --> 00:01:49,234
அது என்ன சன்செட் பார்க்?

30
00:01:52,404 --> 00:01:53,447
எனக்குத் தெரியலை.

31
00:04:13,128 --> 00:04:16,464
இரண்டு வெவ்வேறு வாழ்வுகளை சேர்த்து
தைச்சா மாதிரி தோணுது.

32
00:04:17,632 --> 00:04:19,551
ஆனால் ஒண்ணுக்கு ஒண்ணு பொருந்தி வரலை.

33
00:04:19,635 --> 00:04:23,639
லுமனில் என் முதல் நாள், என் அஞ்சாவது
பிறந்தநாளுலே ஆரம்பிச்சது.

34
00:04:23,722 --> 00:04:26,808
அதனால, இரண்டு கடந்தகாலங்களும் குழம்பி,
நிகழ்கலத்தையும் குழப்பி விடுது.

35
00:04:28,227 --> 00:04:29,937
ஆனால் போகப்போக சரியாகி
விடும்னு சொல்லியிருக்காங்க.

36
00:04:33,148 --> 00:04:34,149
யாரு "சொல்லியிருக்காங்க"?

37
00:04:37,611 --> 00:04:40,614
இந்த துண்டிப்புங்கிற விஷயம் மனிதகுலத்துக்கே
ஒரு சாபம்னு தெரிஞ்சவங்க "சொல்லியிருக்காங்க".

38
00:04:41,114 --> 00:04:42,741
அவங்க அதை தடுக்கவும் முயற்சி செய்யறாங்க.

39
00:04:45,285 --> 00:04:47,162
ஹோல் மைண்டு கலெக்டிவ் ஆளுங்களா?

40
00:04:47,829 --> 00:04:51,583
யாரு, கையெழுத்துக்காக சுத்தி அலைவாங்களே?
இல்ல, அந்த டபிள்யூஎம்சியை சொல்லலை.

41
00:04:53,001 --> 00:04:54,002
வேற யாரோ.

42
00:04:55,087 --> 00:04:56,380
சரி. வந்து...

43
00:04:59,258 --> 00:05:02,970
எனவே எங்கிட்டேர்ந்து என்ன எதிர்பார்க்கறீங்க?

44
00:05:05,722 --> 00:05:07,766
அந்த இடத்துல நீ என்ன
செய்றன்னு தெரிஞ்சுக்க விரும்பலையா?

45
00:05:12,479 --> 00:05:16,149
சரி, பாரு.
நான் துண்டிப்பில்லாம செய்துக்கப் போறதில்லை.

46
00:05:16,733 --> 00:05:19,945
துண்டிப்பில்லாமங்கிறது சரியான வார்த்தை
இல்ல, அதனால அப்படி யோசிக்காதே.

47
00:05:20,988 --> 00:05:23,073
- மறுபிணைப்பு.
- சரி. சரி. ஏதோ ஒண்ணு.

48
00:05:23,156 --> 00:05:26,118
என்னை பொறுத்த வரை, அது
எனக்கு ஒரு சாபமா இல்ல.

49
00:05:26,201 --> 00:05:27,703
அது எனக்கு உதவியிருக்கு.

50
00:05:29,204 --> 00:05:32,332
சரி. உனக்கு கிடைச்ச உதவியின் விலை என்னன்னா

51
00:05:34,042 --> 00:05:35,919
ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம்,
ஜனங்களை கொலை செய்றது,

52
00:05:36,003 --> 00:05:37,045
ஆனால் உனக்கு அதைப் பத்தி எதுவுமே தெரியாதுன்னா?

53
00:05:38,755 --> 00:05:39,882
அட, நான் என்ன கொலையா செய்றேன்?

54
00:05:42,885 --> 00:05:47,848
பாரு, நான் அங்க இருக்கிற ஒரு துறையை
கண்டுபிடிச்சேன். அவங்க நம்மகிட்ட சொல்லாத ஒண்ணு.

55
00:05:47,931 --> 00:05:49,600
அதை விட்டு வரமுடியாத ஒரு துறை.

56
00:05:51,268 --> 00:05:53,562
அட, நம்ம யாராலுமே தான்
அதை விட்டு வர முடியாதே?

57
00:05:53,645 --> 00:05:58,233
இல்ல, நான் சொல்றது, நீ நிஜமாவே வர முடியாது.
அவங்க இப்போ அங்க தான் இருக்காங்க.

58
00:05:58,317 --> 00:06:00,444
அப்படியா என்ன? என்ன, சங்கிலி போட்டு கட்டி...

59
00:06:03,530 --> 00:06:04,823
என்ன?

60
00:06:09,953 --> 00:06:11,705
இங்க நான் அதைப் பத்தி பேச மாட்டேன்.

61
00:06:12,873 --> 00:06:17,211
இங்க அந்த மானிடர்களில எல்லாம் அந்த கேட்கிற
கருவி வைச்சிருக்கலாம். அல்லது இர்விங் உள்ள வரலாம்.

62
00:06:25,844 --> 00:06:27,888
பீட்டி, நாம லுமனில இல்ல.

63
00:06:34,061 --> 00:06:35,395
அப்படீன்னா, ஜூன் எங்க போயிட்டா?

64
00:06:47,157 --> 00:06:48,492
என்னை மன்னிச்சிடுப்பா, மார்க்.

65
00:06:58,210 --> 00:06:59,211
ஜூன் யாரு?

66
00:07:02,548 --> 00:07:07,469
ஜூன் தான் என் மகள். நல்ல பெண்,
ரொம்ப நல்லா கிட்டார் வாசிப்பா.

67
00:07:13,600 --> 00:07:16,019
என்னை இங்க தங்கச்
சொன்னதைப் பத்தி வருத்தமா இருக்கா?

68
00:07:46,550 --> 00:07:48,135
ஓஓ, மார்க்.

69
00:07:50,888 --> 00:07:52,598
நீ நல்லாயிருக்கியா?

70
00:07:54,850 --> 00:07:58,937
ஆனா, நாடலி, நீங்க என்ன சொல்றீங்க,
நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு மாசத்துக்குள்ள

71
00:07:59,021 --> 00:08:01,356
துண்டிக்கப்பட்ட பெண், அலுவலகத்துல
கர்ப்பவதி ஆகியிருக்காங்கன்னா, என்ன பொருள்?

72
00:08:01,440 --> 00:08:03,859
சரி, அப்படியானா, நான் சொல்வது, அவங்க
முதல்ல அவங்க அடையாளத்தை சொல்லட்டும்

73
00:08:03,942 --> 00:08:05,569
அவங்க அனுபவிச்சதைப் பத்தி
நேர்மையா பேசுவதற்கு

74
00:08:05,652 --> 00:08:07,696
- அது தான் வழி.
- அவங்களுடைய வேலையிட பிரதிக்கு தான் அதைப் பத்தி

75
00:08:07,779 --> 00:08:10,699
- தெரியும்னா, இவங்க எப்படி பேச முடியும்...
- சரி, முதல்ல வேலையிட பிரதின்னா என்ன?

76
00:08:11,325 --> 00:08:13,410
எனக்குத் தெரிந்தவரை, அப்படி
சொல்வதை தான் அவர்கள் விரும்புகிறார்...

77
00:08:13,493 --> 00:08:16,246
உங்களிடமிருந்து எதிர்பார்க்கக்கூடிய
மெத்தனமான சொல் அதுவாகத்தான் இருக்க முடியும்

78
00:08:16,330 --> 00:08:18,874
ஏனெனில், மக்கள் அவங்க விருப்பப்படி தீர்மானிப்பதை
அனுமதிக்காத ஒரு கும்பல் தானே நீங்க.

79
00:08:18,957 --> 00:08:20,667
விருப்பப்படியா? அந்த பெண்ணின் உட்புறம் ஒரு...

80
00:08:20,751 --> 00:08:22,711
உட்புறமா? உங்களுக்கு
இது போன்ற சொற்கள் எங்கிருந்து கிடைக்கிறது?

81
00:08:22,794 --> 00:08:25,797
போகட்டும். தங்கள் மூளையை
பாதியாக பிரித்தவர்கள் என சொல்லுங்களேன்...

82
00:08:25,881 --> 00:08:28,050
நாங்கள் லுமனில் செய்வதற்கும் இதற்குமோ,
அல்லது எந்தவித துண்டிப்பு செயல்முறைக்கும்

83
00:08:28,133 --> 00:08:29,635
சம்மந்தமே இல்லை.

84
00:08:29,718 --> 00:08:31,386
என் கேள்விகளுக்கு பதில் சொல்ல
விரும்பலைன்னு தெரியுது...

85
00:08:31,470 --> 00:08:33,722
- கேள்விகளுக்கு பதில் தான் சொல்கிறேனே.
- ...ஏன்னா அது உங்கள் உண்மை உருவத்தைக் காட்டும்

86
00:08:33,804 --> 00:08:36,683
- அது தார்மீக ரீதியா முற்றிலும் தப்புன்னும் காட்டும்.
- தார்மீக ரீதியா என்ன தப்பு...

87
00:08:41,395 --> 00:08:42,438
இது உண்மையில்லை.

88
00:08:44,525 --> 00:08:47,027
சரி, சொல்ல விரும்புறேன், ஆனா முடியலை. பாரு?

89
00:08:48,153 --> 00:08:50,030
...பெரும் ஏரியின் வழியாக நகர்ந்து,

90
00:08:50,113 --> 00:08:54,535
நாங்கள் நேற்று கூறியிருந்ததைப் போல, இன்று
மதியம், சென்று அடையலாம்.

91
00:08:54,618 --> 00:08:58,997
நற்செய்தி என்னவெனில், அந்த மேகங்கள்
கேன்ஸ் பகுதியின் பொழிந்து, மறையக்கூடும்,

92
00:08:59,081 --> 00:09:03,001
கியர் பகுதியில் உள்ள நண்பர்களுக்கு
நல்ல தெளிந்த, சூரிய ஒளி உள்ள நாளாக இருக்கும்.

93
00:09:03,085 --> 00:09:05,796
இருப்பினும், குளிர்
குறைய வாய்ப்பே இல்லை.

94
00:09:05,879 --> 00:09:08,674
வாரம் முழுவதும், சாலைகள் எல்லாம்
ஐஸ்கட்டிகளால் மூடப்பட்டுதான் இருக்கப்போகிறது

95
00:09:08,757 --> 00:09:10,175
மேலும் வார இறுதியிலும் அது தொடரும்.

96
00:09:10,259 --> 00:09:12,761
எனவே, நீங்கள் எங்கு செல்வதாக இருந்தாலும்,
ஜாக்கிரதையுடன் பயணம் செய்யவும்.

97
00:09:20,227 --> 00:09:21,228
பீட்டி.

98
00:09:24,189 --> 00:09:27,442
எழுந்திரு, பீட்டி. பீட்டி?

99
00:09:33,615 --> 00:09:34,616
ஏய்.

100
00:09:35,325 --> 00:09:37,703
காலையாகிடுச்சு.
நீ என் பேஸ்மெண்டுல இருக்க.

101
00:09:40,038 --> 00:09:41,248
சரி.

102
00:09:41,915 --> 00:09:46,128
நீ சொன்னது போல நான் வேலைக்குப் போறேன்.
நீ வேணும்னா இங்கேயே தங்கிக்கலாம்.

103
00:09:47,921 --> 00:09:49,590
நான் சொல்ல வந்தது என்னன்னா,

104
00:09:50,966 --> 00:09:54,052
நான் அந்த
மறுபிணைப்பெல்லாம் செய்யப் போறதில்லை, சரியா?

105
00:09:57,347 --> 00:09:58,348
சரி.

106
00:09:59,057 --> 00:10:02,060
என் மனைவி ஒரு கார் விபத்துல
இரண்டு வருஷங்களுக்கு முன்னால இறந்துட்டா.

107
00:10:02,769 --> 00:10:06,023
இந்த வேலை... அது எனக்கு உதவுது, சரியா?

108
00:10:06,106 --> 00:10:08,483
- என்னை மன்னிச்சிடு, மார்க்.
- இல்ல, இல்ல.

109
00:10:10,777 --> 00:10:11,862
அலுவலகத்துல...

110
00:10:14,781 --> 00:10:18,994
சில சமயம் நீ சிவந்த கண்களோடு வருவாய்.

111
00:10:20,495 --> 00:10:23,874
நாம அதைப் பத்தி வேடிக்கையா
லிஃப்ட் அலர்ஜின்னுகூட சொல்லுவோம்.

112
00:10:25,584 --> 00:10:27,085
அதுக்கு ஒரு பாட்டு கூட உருவாக்கினோம்.

113
00:10:29,421 --> 00:10:30,797
ஆனால் எனக்கு எப்போதுமே தோணும்.

114
00:10:32,716 --> 00:10:34,635
நீ ஒரு காயத்தை மனசுக்குள்ள வைச்சிருக்கன்னு.

115
00:10:35,427 --> 00:10:38,847
உனக்கும் அது அடி மனசுல தெரியுது.
ஆனால், உனக்கு அது என்னான்னு தெரியலை.

116
00:10:42,184 --> 00:10:43,268
சரி.

117
00:10:44,311 --> 00:10:47,231
நீ உனக்கு வேணுங்கிறதை,
மேலே ஃபிரிட்ஜிலிருந்து எடுத்துக்கோ, என்ன?

118
00:10:47,314 --> 00:10:48,607
நான் 6:00 மணி சுமாருக்கு வந்து விடுவேன்.

119
00:11:04,706 --> 00:11:05,541
அட, ஹை!

120
00:11:06,291 --> 00:11:09,878
- ஹே.
- பாரு, மார்க், இந்த சத்தத்துக்கு மன்னிச்சிடுப்பா!

121
00:11:10,379 --> 00:11:13,257
வீட்டின் முன் பாகத்தை சுத்தப்படுத்தறேன்.

122
00:11:13,340 --> 00:11:17,177
அட, பரவாயில்லை.
உங்க குக்கீஸுக்கு ரொம்ப நன்றி.

123
00:11:17,261 --> 00:11:18,762
நான் இன்னும் கூட கொண்டு வர்றேன்!

124
00:11:20,097 --> 00:11:21,139
வாங்க.

125
00:11:55,299 --> 00:11:57,301
- திரு. ஸ்கௌட், எப்படி இருக்கீங்க?
- ஹே, ஜூட்.

126
00:12:24,119 --> 00:12:25,120
லுமன்

127
00:12:38,008 --> 00:12:41,595
நான் ஒண்ணு பண்ணினேன்.
அச்சுறுத்தும் எல்லா எண்களையும் அழிச்சிட்டேன்.

128
00:12:41,678 --> 00:12:42,679
எப்போ?

129
00:12:42,763 --> 00:12:45,766
- நேத்து. நீ வரலையே.
- நான் வரலையா?

130
00:12:45,849 --> 00:12:49,645
ஆமாம். டைலன் தான் ரொம்ப
வெற்றிகரமா எனக்கு நல்லா பயிற்சி தந்தான்.

131
00:12:49,728 --> 00:12:53,106
நீ மெலிந்தது போல இருக்க, மார்க்.
உனக்கு வயித்துப் போக்கு இருந்ததோ?

132
00:12:53,190 --> 00:12:55,317
பாஸ், மீண்டும் வரவேற்கிறோம்.
புது ஃபோட்டோ எல்லாம் வந்துடுச்சா?

133
00:12:55,400 --> 00:12:58,195
அட, நல்லது. ஒரு வழியா
அந்த பழைய ஃபோட்டக்களை தூக்கிப் போடலாம்.

134
00:13:02,574 --> 00:13:05,953
உண்மையில, நீ அதையும் ஒத்திப் போடலாம், ஏன்னா
என் ராஜினாமா கோரிக்கையை கொடுத்துட்டேன்.

135
00:13:06,787 --> 00:13:08,580
- நீ கொடுத்துட்டயா?
- ஆமாம், கொடுத்துட்டேன்.

136
00:13:09,915 --> 00:13:12,793
நல்லது தான். நீ இனிமே பிரேக் அறைக்கு போக
வேண்டிய அவசியம் இருக்காதே.

137
00:13:14,461 --> 00:13:15,921
ஹலோ, சுத்திகரிப்பாளர்களே.

138
00:13:16,004 --> 00:13:17,047
ஹலோ, திரு. மில்சிக்.

139
00:13:17,130 --> 00:13:18,841
மார்க், உன் வெளிப்புற பிரதியுடன் நேத்து பேசினேன்.

140
00:13:18,924 --> 00:13:20,968
வேலைக்கு வரமுடியாம
அப்படியே தவிச்சு போயிட்டா மாதிரி இருந்தது.

141
00:13:21,051 --> 00:13:22,469
ஆனால், நீ தான் இப்போ இங்க வந்துட்டயே,

142
00:13:22,553 --> 00:13:25,597
ஒரு டிபார்ட்மெண்ட் தலைவனா உன்னுடைய முதல்
அறிவிப்புகள இந்த காலை நேரத்துல வாசிக்கிறாயா?

143
00:13:27,140 --> 00:13:28,141
கண்டிப்பா.

144
00:13:28,976 --> 00:13:32,104
பார்வையாளர்களில் நான் இல்லாம இருந்தா,
இன்னும் சுலபமா இருக்கும்.

145
00:13:34,106 --> 00:13:37,317
பீட்டியின் அறிவிப்புகளின் போது
இடையூறு செய்வதை மார்க் வேடிக்கைன்னு நினைச்சான்.

146
00:13:37,401 --> 00:13:38,986
வயிறு உப்புசத்துடன்.

147
00:13:40,988 --> 00:13:45,868
சரி, அமைதி, எல்லோரும், அமைதி.
நான் மார்க், உங்க புது அறிவிப்பாளர்.

148
00:13:50,330 --> 00:13:51,665
இரண்டே விஷயங்கள் தான் உள்ளது.

149
00:13:51,748 --> 00:13:54,501
ஏன் ஏதோ போல நிற்கிறாய்? சரியா நில்லு.

150
00:13:55,544 --> 00:13:57,421
நான்... நான் நல்லாதான் நிக்கிறேன்.

151
00:13:57,921 --> 00:14:00,507
நீ சுகமில்லாம இருக்கயா என்ன?
நாங்க வேணும்னா வேற பக்கமா பார்க்கிறோமப்பா?

152
00:14:00,591 --> 00:14:03,844
சரி, குப்பை தொட்டியிலே
சில குப்பைகள் இருந்திருக்கு.

153
00:14:03,927 --> 00:14:06,597
தயவுசெய்து, அனைவரும், அப்படி செய்யாதீங்க.

154
00:14:08,056 --> 00:14:12,811
ஞாபகப்படுத்துகிறேன்,
போஸ்ட்-இட் நோட்ஸ் முகத்தில ஒட்டுவதற்கு அல்ல.

155
00:14:12,895 --> 00:14:14,521
அவை உங்கள் வெளிப்புறத்தின்
துவாரங்களை அடைத்துவிடும்.

156
00:14:15,230 --> 00:14:18,817
அது என்னைப் பத்தி தான்.
நான் தான் அதைச் செய்வேன், ஸ்டிக்கி ஹெட்.

157
00:14:18,901 --> 00:14:22,905
அதோடு, முன்னாடி சாம்பாதிச்ச வாஃபில் பார்ட்டிகளைப்
பற்றி பெருமைபட்டுக் கொள்ள வேண்டாமே?

158
00:14:22,988 --> 00:14:23,989
என்னை தாக்கிட்டாங்க.

159
00:14:25,365 --> 00:14:26,366
கடைசியா...

160
00:14:31,079 --> 00:14:34,249
வந்து, இவ்வளவு சீக்கிரம் பதில் வந்த
ராஜினாமாவை நான் பார்த்ததே இல்லை.

161
00:14:36,418 --> 00:14:39,129
நான் இன்னிக்கு வேலையை முடிச்சிட்டு தான்
போகணுமா, அல்லது இப்போவே போகலாமா?

162
00:14:44,885 --> 00:14:47,804
கடைசியா, ஹெல்லியோட சாஜினாமா கோரிக்கை,

163
00:14:49,723 --> 00:14:50,724
நிராகரிக்கப்பட்டுவிட்டது.

164
00:14:53,519 --> 00:14:54,770
ஆமாம், இல்ல, அது சரியாக இருக்க முடியாது.

165
00:14:55,854 --> 00:14:56,980
என் வெளிப்புறம் அப்படிச் செய்ய மாட்டாள்.

166
00:15:01,777 --> 00:15:03,737
தெரியுமா, பீட்டி சொல்வான்...

167
00:15:22,923 --> 00:15:24,049
்ட, இது ரொம்பவே தமாஷ் தான்.

168
00:15:25,342 --> 00:15:30,055
சத்தம் போடாம, நான்,
மெல்ல கதவு கிட்டப் போகட்டுமா?

169
00:15:30,138 --> 00:15:32,307
- அவன் வேலைக்கு போயிருக்கான், பரவாயில்ல, கண்ணே.
- உனக்கு எப்படி தெரியும்?

170
00:15:32,391 --> 00:15:34,393
- ஏன்னா அவன் கார் இல்லையே.
- ஒருவேளை அனுமதியில்லாம லீவ் போட்டிருந்தா.

171
00:15:34,977 --> 00:15:36,395
போய் வைச்சிட்டு வர்றீங்களா?
ஏன்னா நான் ஒண்ணுக்கு போகணும்.

172
00:15:36,895 --> 00:15:37,980
சரி.

173
00:15:51,326 --> 00:15:54,204
கதவு மேலேயா அல்லது பக்கவாட்டிலா?

174
00:15:54,288 --> 00:15:55,956
எதுவா இருந்தாலும் நல்லது தான்.

175
00:15:58,083 --> 00:16:00,043
- அவனுக்கு ஆச்சரியமா இருக்கும்னு நினைக்கிறாயா?
- அப்படி தான் நினைக்கிறேன்.

176
00:16:00,711 --> 00:16:03,297
என் கண்ணே, நான் பக்கவாட்டில் வைக்கிறேன்.

177
00:16:03,380 --> 00:16:04,381
அற்புதம்.

178
00:16:14,183 --> 00:16:15,184
- கச்சிதம்.
- நல்லது.

179
00:16:15,267 --> 00:16:17,060
- அதாவது, கச்சிதம்.
- ஆமாம்.

180
00:16:24,318 --> 00:16:25,652
அவன் ரொம் குறுகுறுப்பா ஆகிடுவான்.

181
00:16:25,736 --> 00:16:27,196
- ஆமாம்.
- அவன் சீக்கிரமா வந்தா நல்லாயிருக்கும்.

182
00:16:27,279 --> 00:16:28,405
அவன் சீக்கிரம் வரமாட்டான்.

183
00:17:09,154 --> 00:17:11,448
மார்க்

184
00:17:28,799 --> 00:17:30,759
ஹே. அது என்னது? சொடுக்கூவா?

185
00:17:31,385 --> 00:17:32,386
அது ஒண்ணுமில்லை.

186
00:17:33,053 --> 00:17:34,179
நீ என்ன வரைஞ்சிசுகிட்டிருந்த?

187
00:17:34,263 --> 00:17:36,890
கியூபிஸ்டு ஸ்டைலுல, நீ திரும்பி வேலைக்கு வந்தத.

188
00:17:36,974 --> 00:17:40,143
கே, இரண்டு விஷயங்கள். கியூபிஸ்டு ஸ்டைல்னா
என்னான்னு உனக்கு எப்படித் தெரியும்?

189
00:17:40,227 --> 00:17:42,437
அப்புறம் நீ என்ன கண்ராவிய போட்டிருக்க?

190
00:17:45,607 --> 00:17:46,733
அட, ச்சே.

191
00:18:55,886 --> 00:18:56,887
இல்ல.

192
00:19:06,522 --> 00:19:08,440
ஜெம்மாவின் கைவேலை

193
00:19:22,621 --> 00:19:23,622
சொல்லுங்க?

194
00:19:29,503 --> 00:19:32,256
அறிவிப்புக்குப்
பின் அவளிடம் என்ன சொன்னான்?

195
00:19:44,184 --> 00:19:45,644
இல்ல, அது அவ்வளவு மோசமில்ல.

196
00:19:52,693 --> 00:19:55,529
அட, கொஞ்சம் வன்முறையோடு.

197
00:19:58,073 --> 00:20:00,033
அவளை நேரடியாக புகழ்ந்தாயா?

198
00:20:02,077 --> 00:20:04,496
உம்-ஹூம்ம். உம்-ஹூம்ம்.

199
00:20:05,497 --> 00:20:06,498
நான் வருகிறேன்.

200
00:21:09,853 --> 00:21:11,188
ஹே, ஹெல்லி?

201
00:21:11,271 --> 00:21:12,272
போயிடு.

202
00:21:12,773 --> 00:21:14,733
- உனக்கு ஒண்ணுமில்லையே?
- நான் நல்லாயிருக்கேன்.

203
00:21:14,816 --> 00:21:16,485
நான் சொல்வது, இப்போ 45 நிமிடம் ஆயிடுச்சு.

204
00:21:21,740 --> 00:21:23,116
நான் கழிப்பறையை பயன்படுத்துகிறேன்.

205
00:21:23,784 --> 00:21:27,538
சரி. அது... ரொம்ப நேரம் ஆகிடுச்சு, அதுதான்.

206
00:21:27,621 --> 00:21:30,249
- நான் நல்லா தான் இருக்கேன், மார்க்.
- நான் உள்ள வரப்போறேன்னு நினைக்கிறேன்.

207
00:21:30,916 --> 00:21:32,543
- அது... பரவாயில்லையா?
- இல்ல!

208
00:21:33,126 --> 00:21:36,171
நான் உள்ள வரப்போறேன், அதனால தயார் ஆகிவிடு.

209
00:21:36,255 --> 00:21:38,298
என்ன செய்யணுமோ செய்துவிடு,
ஏன்னா நான் உள்ள வருகிறேன்.

210
00:21:38,382 --> 00:21:39,383
வேண்டாம்!

211
00:21:39,466 --> 00:21:41,552
- சரி, இதோ வருகிறேன். மன்னிக்கணும்.
- மார்க், இல்ல! நான் முழூ ஆடையிலே கூடயில்லை!

212
00:21:41,635 --> 00:21:42,845
- என்ன... கடவுளே.
- மன்னிக்கணும். நான்...

213
00:21:46,390 --> 00:21:47,975
உன் தோல் மீதே நேரடியா குறிப்பு எழுதிக்கிறயா.

214
00:21:48,475 --> 00:21:51,812
துரதிர்ஷ்டவசமா, டிடெக்டர்கள்
எழுத்துக்களை எங்கு இருந்தாலும் கண்டுபிடிச்சிடும்.

215
00:21:51,895 --> 00:21:53,897
இதைப் பார்த்தா எழுத்து மாதிரி தெரியுதா உனக்கு?

216
00:21:53,981 --> 00:21:55,941
சரி, நீ கை இரண்டையும் சேர்த்து வைச்சா தெரியும்.

217
00:21:58,110 --> 00:21:58,944
அட. பரவாயில்லயே.

218
00:21:59,027 --> 00:21:59,862
எனக்கு விடுதலை வேண்டும்

219
00:22:01,905 --> 00:22:04,867
உனக்கு இங்க பிடிக்க
ஆரம்பிச்சிடுச்சுன்னு நினைச்சேன்

220
00:22:04,950 --> 00:22:06,451
என்ன, ஏன்னா நான் அந்த எண்களை செஞ்சதனாலயா?

221
00:22:06,535 --> 00:22:09,705
இருக்கட்டு, உனக்கு வெற்றி தான். பலருக்கு
அதுல ஒரு சந்தோஷம், தெரியுமா.

222
00:22:09,788 --> 00:22:11,665
அது நிஜத்துல பயத்தை உண்டாக்குது.

223
00:22:11,748 --> 00:22:14,376
அது வெறும் ஒரு தொகுதி எண்கள் தான்.
இன்னும் சுகமான வேறு சிலதெல்லாம் இருக்கு...

224
00:22:14,459 --> 00:22:16,170
மார்க், நான் இங்க உன்னோட வேலை செய்ய விரும்பலை.

225
00:22:16,253 --> 00:22:19,006
ஆதனால உன்னுடைய கேவலமான இந்த
பாஸ் குரலை வைச்சுகிட்டு, கழிப்பறைக்குள்ள வந்து

226
00:22:19,089 --> 00:22:20,382
எனக்கு வேலை பிடிச்சிருக்குன்னு
என்னை சமாதானப்படுத்த முயலாதே.

227
00:22:24,720 --> 00:22:26,763
சரி, நான் உனக்கு கைகளைக் கழுவ
அஞ்சு நிமிஷம் தரேன்.

228
00:22:26,847 --> 00:22:28,098
இல்லன்னா? என்ன செய்வ.

229
00:22:29,391 --> 00:22:31,602
உனக்குத் தேவையா
கிரேனர் இன் கையிலே கெட்ட சோப்பை போடணுமா?

230
00:22:33,478 --> 00:22:34,646
கெட்ட சோப்புன்னு ஒண்ணு இருக்கா?

231
00:22:39,776 --> 00:22:40,986
நன்றி, பாஸ்.

232
00:22:42,029 --> 00:22:43,697
ஆம், எனக்கு இங்கு வேலை செய்றது
ரொம்ப பிடிச்சிருக்கு.

233
00:22:44,198 --> 00:22:45,324
- மார்க்.
- இர்வ்.

234
00:22:45,407 --> 00:22:47,576
நான் கதவு பக்கத்துல நின்னு கேட்டேன்.
எல்லாத்தையும் கேட்டேன்.

235
00:22:47,659 --> 00:22:49,661
- சரி.
- எனக்கு கவலையா இருக்கு

236
00:22:49,745 --> 00:22:53,290
நீ இப்போதான் வயித்துப் போக்கிலிருந்து வந்திருக்க,
அதுக்குள்ள சத்தமா இப்படி வாக்குவாதம் செய்ற.

237
00:22:53,373 --> 00:22:54,583
அது பரவாயில்ல.

238
00:22:54,666 --> 00:22:56,919
அவ உன் மேலே அவ்வளவு வெறுப்போட பேசினாளே.

239
00:22:57,002 --> 00:22:58,462
விடு, பழக கொஞ்ச நாளாகும்.

240
00:22:58,545 --> 00:22:59,796
வழிகாட்டலும் வேண்டுமப்பா.

241
00:23:01,507 --> 00:23:02,674
நீ மனசுல என்ன வைச்சிருக்க?

242
00:23:05,761 --> 00:23:08,805
நேத்து முழுக்க டைலன்
ஊக்க பொருட்களைப் பத்தி பேசிக்கிட்டே இருந்தான்,

243
00:23:08,889 --> 00:23:12,518
பென்சிலை அழிக்கும் ரப்பர்கள், வாஃபில் பார்ட்டிகள்,
நாம என்னவோ இதுக்காக தான் இங்க வந்தது போல.

244
00:23:12,601 --> 00:23:14,228
நாம அதுக்கெல்லாம் இங்க வரலையே.

245
00:23:15,395 --> 00:23:21,318
அவள் இங்கே ஒரு ஆழமான தேடலிலே வந்திருந்தா,
அவள் நிரந்தர பகுதியை பார்க்கணும்.

246
00:23:21,401 --> 00:23:23,570
அவளே அந்த கைபுத்தகத்துல
எழுதியிருப்பதை எல்லாம் படிச்சு புரிஞ்சுக்கலாம்.

247
00:23:23,654 --> 00:23:27,199
அங்க இருப்பதே ஒரு வித்தியாசமான
அனுபவம்னு உனக்கேத் தெரியும்.

248
00:23:29,284 --> 00:23:31,703
இன்னும் அதுக்கான காலம் வரலைன்னு நினைச்சேன்,
அந்த இடம் கொஞ்சம் பிரமிப்பாயிருக்கும்.

249
00:23:31,787 --> 00:23:36,208
சரியாச் சொன்ன. அந்த இடம் தான் எல்லாம்.

250
00:23:41,004 --> 00:23:42,005
அந்த சோதனையில என்ன தெரிஞ்சது?

251
00:23:42,548 --> 00:23:46,176
யாரோ அவன் வீட்டு வாசலில் ஒரு பாக்கெட்டை
விட்டிருந்தாங்க. அதை பிரித்து பாரு, சரியா?

252
00:23:47,302 --> 00:23:48,887
உன் நிகழ்கால உருவம்
உன் ஆன்ம தேடலின் கதை

253
00:23:48,971 --> 00:23:49,888
டாக்டர். ரிக்கென்
லாஸ்லோ ஹாலே, பிஹெச்டி

254
00:23:49,972 --> 00:23:51,890
- அடக் கடவுளே.
- இது தான் அவன் மச்சானா?

255
00:23:51,974 --> 00:23:53,684
ரிக்கென். அவனுடைய அஞ்சாவது புத்தகம்.

256
00:23:57,187 --> 00:24:01,066
"அத்தியாயம் 12: என் மனைவியின் முன் மனதளவில்
நிர்வாணமாக இருக்க கற்பது பற்றி."

257
00:24:01,149 --> 00:24:04,069
அதுக்குள்ள ஏதுவும் தகவல்கள்
இருக்கான்னு பார்த்துவிடு, சமாதானத்துக்காக.

258
00:24:04,653 --> 00:24:05,779
மார்க்.

259
00:24:07,197 --> 00:24:09,157
- நான் உனக்கு உதவலாமா?
- அவங்க எனக்கு ஒரு நிமிடம் ஒதுக்க முடியுமா?

260
00:24:09,241 --> 00:24:13,036
நீ மேலாளருடன் பேசணும்னு
அலுவலக விண்ணப்பம் நிரப்பி கொடுத்திருக்கியா?

261
00:24:14,538 --> 00:24:16,748
- இல்ல, நான்...
- பரவாயில்ல. உள்ள வா.

262
00:24:16,832 --> 00:24:18,709
மன்னிக்கணும்.
நான் விண்ணப்பத்தை பூர்த்தி செய்றேன்.

263
00:24:19,418 --> 00:24:20,419
என்ன விஷயம்?

264
00:24:23,088 --> 00:24:24,089
கதவை மூடு.

265
00:24:28,093 --> 00:24:31,597
இர்விங் சொல்கிறார் நாம் ஹெல்லியை
நிரந்தர பகுதிக்கு அழைத்து போக வேண்டும் என.

266
00:24:31,680 --> 00:24:34,516
சரி, நான் இர்விங்கை
டிபார்ட்மெண்ட் தலையாக ஆக்கியது நல்ல காரியம் தான்.

267
00:24:34,600 --> 00:24:40,898
மன்னிக்கணும். ஹெல்லியோடும் குழுவோடும்
நிரந்தர பகுதிக்கு போகணும்னு நான் நினைக்கிறேன்.

268
00:24:40,981 --> 00:24:44,443
அதற்கு தேவையான பொது-இட
முன் பதிவுச் சீட்டை நிரப்பி கொடுத்துட்டியா?

269
00:24:46,236 --> 00:24:48,822
- இல்ல, நான்...
- மார்க்.

270
00:24:48,906 --> 00:24:52,284
மன்னிக்கணும்.
நான் இப்போதான்... தெரியாது.

271
00:24:52,367 --> 00:24:55,037
பீட்டி போனதிலிருந்து ரொம்ப
விசித்திரமாக தான் இருக்கு.

272
00:24:56,663 --> 00:25:00,751
நான் சொல்ல வந்தது, அவன் தான்...
அவன் பாதையை வகுத்தான்.

273
00:25:02,836 --> 00:25:06,924
நீ பெரிசா சொல்றது போல
அப்படி அவன் பாதை வகுத்திருந்தா,

274
00:25:07,799 --> 00:25:09,426
அவன் இன்னும் இங்க இருந்திருப்பான்.

275
00:25:12,054 --> 00:25:13,055
அப்படின்னா என்ன பொருள்?

276
00:25:14,848 --> 00:25:17,518
என் மக்கை உன் மேலே தூக்கி
எறிவது போல நடந்துக்கப் போறயா?

277
00:25:19,061 --> 00:25:20,812
நான்... நீங்க ஏன் என் மீது...

278
00:25:22,898 --> 00:25:25,442
- எம்டிஆர்ரை அதன் எண்களோடு சேர்த்து போடு.
- சரி.

279
00:25:28,612 --> 00:25:29,613
மார்க்?

280
00:25:31,240 --> 00:25:35,869
இப்போ உனக்கு செய்தது, உன்னால தாங்கிட்டு,
அதிலிருந்து நீ கத்துப்பங்கிறதுக்காக தான் செய்தேன்.

281
00:25:37,037 --> 00:25:39,373
எனக்கு அது ரொம்ப வலிக்குது.

282
00:25:41,333 --> 00:25:43,460
அது உன் வளர்ச்சிக்கு உதவும்னு நினைக்கிறேன்.

283
00:25:50,968 --> 00:25:52,261
திறந்து இருக்கணுமா, மூடணுமா?

284
00:25:58,183 --> 00:25:59,351
இரண்டும்.

285
00:26:03,605 --> 00:26:04,606
நான் வந்து...

286
00:26:09,903 --> 00:26:14,950
இன்னிக்கு என் தோள்பட்டைகளின் தசைகள் நல்லாயிருக்கு.
என் வெளிப்புறம் கண்டிப்பாக அதை உறுதி செய்கிறது.

287
00:26:15,033 --> 00:26:17,911
ஆனால் உன் வெளிப்புறம் தசைகளை அப்படி
காட்டுகிறான்னா, இங்க எதுக்கு வேலை செய்யணும்.

288
00:26:17,995 --> 00:26:19,872
மன்னிக்கணும், ஆனால் உனக்கு தசைகளைக் காட்டும்
நிகழ்ச்சி என்ன விலை கிடைக்கும்னு தெரியுமா?

289
00:26:19,955 --> 00:26:21,456
தெரியாது, நம்ம யாருக்குமே அது தெரியாதே.

290
00:26:21,540 --> 00:26:23,333
அது படிப்படியா போகும்
ஒரு முறைன்னு நான் நினைக்கிறேன்.

291
00:26:23,417 --> 00:26:24,501
எனக்கு இங்கு வேலை செய்ய பிடிக்கலை

292
00:26:24,585 --> 00:26:27,254
ஒருவேளை தங்கம், வெள்ளி மற்றும் வெங்கலத்துக்கு
பணத் தொகையா கொடுப்பாங்களோ என்னவோ.

293
00:26:27,337 --> 00:26:31,508
இல்ல, என் யூகம் என்னன்னா ஒரு
தசைக்கு இவ்வளவுன்னு இருக்கும். அதனால...

294
00:26:31,592 --> 00:26:33,969
- இல்ல, நான் அப்படி நினைக்கலை.
- சிறந்த தோள் பட்டை, 30 டாலர்கள்.

295
00:26:34,052 --> 00:26:38,140
சிறந்த வயிறு தசை, 20 டாலர்கள்.
கை தசைகள் இன்னும் கெட்டின்னா, 75 டாலர்கள்.

296
00:26:38,223 --> 00:26:39,892
தோளோட பின் தசைகளுக்கு
நல்ல விலையிருக்குன்னு நினைக்கிறேன்.

297
00:26:39,975 --> 00:26:42,728
தசைகளை கெட்டிப்படுத்தும் வட்டாரங்களிலே
அதை ரொம்ப வசீகரமா நினைக்கிறாங்க போலும்.

298
00:26:42,811 --> 00:26:44,605
அதோடு பொதுவா சமூகத்திலும்.

299
00:26:44,688 --> 00:26:46,190
பின் தசைகள் எல்லாம் பொய், நண்பா...

300
00:26:46,273 --> 00:26:49,359
- நல்ல உடல்கட்டின் மையப்பகுதி.
- இதுல நீ மட்டும் தான் தனி, இர்வ்...

301
00:26:49,443 --> 00:26:51,445
- நீ என் பின் தசைகளை கவனிச்சிருக்கயா?
- ...ஒருபோதும் இல்ல. கண்டிப்பாக இல்ல.

302
00:26:51,528 --> 00:26:56,658
ஏன் என் உருவம் அப்படி நெடுநேராக
நிக்குதுன்னு உனக்குப் புரியலை. எப்படி என்...

303
00:27:04,833 --> 00:27:05,959
தாகமா?

304
00:27:09,213 --> 00:27:12,466
அட, ஒருவேளை நான்
சொல்வதிலே உனக்கு எதுவும் பொருள் இருந்ததுன்னா,

305
00:27:12,549 --> 00:27:17,346
உன் உடம்புக்குள்ள இருக்கிற தகவல்களைக் கூட
கோட் டிடெக்டர்கள் கண்டுபிடிச்சிடும்.

306
00:27:20,182 --> 00:27:25,979
மேலும், அது நடந்ததுன்னா, மில்சிக் தான்
உங்கிட்டேயிருந்து அதை வெளியே எடுக்கணும்.

307
00:27:26,563 --> 00:27:31,235
எவ்வளவு நேரத்துக்கு முன்னாடி
அதை நீ சாப்பிட்டன்னு கேட்டால்,

308
00:27:31,318 --> 00:27:34,613
என்னால பொய் எல்லாம் சொல்லவே முடியாது.

309
00:27:36,782 --> 00:27:40,077
உங்க இருவருக்குமே எந்த பக்கம்
ஆரம்பிக்கணும்னு தெரிஞ்சா சுலபமா இருக்கும்.

310
00:27:50,254 --> 00:27:51,547
ஆனால் இன்னொரு நல்ல முயற்சி தான்.

311
00:27:56,552 --> 00:27:58,846
உன் பணி நிலையத்தை மூடு.
நாம ஒரு சுற்றுலா போறோம்.

312
00:27:58,929 --> 00:28:00,472
கால் தசைகளில தான் வலிமை இருக்கு.

313
00:28:00,556 --> 00:28:04,393
...எப்போதுமே அப்படிதான் இருந்திருக்கு.
இளைஞனே, நான் இப்போதே சொல்றேன்.

314
00:28:05,269 --> 00:28:07,729
எட்டு சிஈஓக்களுமே ஈகன் வழியில் வந்தவர்கள் தான்.

315
00:28:07,813 --> 00:28:09,690
அந்த வம்சவளியை பின்னோக்கிப் பார்த்தால் நம்மை நேரே
இதன் நிறுவனருக்கே கொண்டு போகிறது.

316
00:28:09,773 --> 00:28:12,860
அந்த பெயர்களை சுலபமாக ஞாபகம் வைச்சுக்க
ஒரு எளிமையான கவிதையை உருவாக்கியிருக்கேன்.

317
00:28:12,943 --> 00:28:16,363
நானே அதை செய்தேன், நிச்சயமா அது
நிறுவனத்தைச் சேர்ந்ததும் இல்ல,

318
00:28:16,446 --> 00:28:18,740
கண்டிப்பா அவ்வளவு கவிதை நயமும் கிடையாது.

319
00:28:18,824 --> 00:28:22,828
இரண்டாவது சந்தத்திலே, "ஆம்பிரோஸ்" பெயரிலிருந்து
"விரட்டப்பட்டோர்" என ஒரு வரி வரும்,

320
00:28:22,911 --> 00:28:26,665
கதையை முன்னுக்குக் கொண்டு போக அது தேவையா
இருந்தது, ஆனால் வருத்தமாக இருந்தது.

321
00:28:26,748 --> 00:28:30,502
சிலர், ஆம்பிரோஸ் தான் குடும்பத்தின்
கறும்புள்ளின்னு தப்பா புரிஞ்சுகிட்டிருக்காங்க.

322
00:28:30,586 --> 00:28:31,587
என்னது இது?

323
00:28:31,670 --> 00:28:34,590
அவரை இன்னும் கேவலப்படுத்துவது
என் நோக்கமா இருக்கலை,

324
00:28:34,673 --> 00:28:36,758
- ஆனால், நான் நினைக்கிறேன், உங்களுக்கு...
- "ஈகன் பிங்கோ" வா?

325
00:28:37,259 --> 00:28:38,677
ஹே. ஈகன் பிங்கோ.

326
00:28:38,760 --> 00:28:42,264
- நாம செய்யக்கூடாது, இல்ல? இது...
- ...ஏன்னா, நாம அங்க போறப்போ...

327
00:28:42,347 --> 00:28:44,183
ஏய், இது என்ன கண்ராவி, ஈகன் பிங்கோன்னு?

328
00:28:44,266 --> 00:28:46,810
இந்த நிரந்தர பகுதியிலே, அசாத்தியமா போரடிப்பதை
எப்படி தடுக்கலாம் என்பது தான் அது.

329
00:28:46,894 --> 00:28:48,896
அதோடு, இர்வைத் தவிர,
நாம எல்லோரும் ஒரு நல்ல தோழமையை

330
00:28:48,979 --> 00:28:50,689
வளர்த்துக்க இது ஒரு நல்ல வாய்ப்பு.

331
00:29:02,284 --> 00:29:03,535
ஆப்டிக்ஸ் மற்றும் டிசைன்

332
00:29:04,953 --> 00:29:06,705
மேக்ரோடேட்டா சுத்திகரிப்பு.

333
00:29:08,624 --> 00:29:09,625
பர்ட்.

334
00:29:09,708 --> 00:29:10,709
ஹை.

335
00:29:11,418 --> 00:29:13,212
உங்க பயிற்சி சிறப்பா
இருந்திருக்கும்னு நினைக்கிறேன்.

336
00:29:13,295 --> 00:29:15,005
சிறப்பா இருந்தது, நல்ல புத்துணர்ச்சி.

337
00:29:15,088 --> 00:29:16,548
என்... உங்களுக்கு ஒருவரை ஒருவர் தெரியுமா?

338
00:29:16,632 --> 00:29:21,595
ஒரு குறுகிய காலத்துக்கு, நாங்க லுமன் கலை
வேலைப்பாட்டை சேர்த்து ரசித்தோம், அவ்வளவுதான்.

339
00:29:21,678 --> 00:29:24,431
ஞாபகம் இருக்கட்டும், அந்த புது கைப்புத்தக
தரகர்கள் சீக்கிரம் இங்க வந்துடுவாங்க.

340
00:29:24,515 --> 00:29:25,641
ரொம்ப உற்சாகம் தான்.

341
00:29:25,724 --> 00:29:27,935
உங்க துப்புக்கு நன்றி. உங்களுக்கு வேலையிருக்கா,
அல்லது சும்மா நடக்க வந்தீர்களா?

342
00:29:28,018 --> 00:29:30,854
- டைலன்.
- என்ன? நீங்க எல்லோரும் பரவாயில்லப்பா,

343
00:29:30,938 --> 00:29:34,358
நீங்க எல்லாம் என்ன செய்யறீங்கன்னு யோசிச்சேன்.
உங்களையெல்லாம் வெளியே பார்க்கிறதே அரிதுதான்.

344
00:29:34,441 --> 00:29:37,236
குழு-ஒத்துமையை வலுவாக்கும்
முட்டையை-கீழே போடும் சவாலை நடத்துறோம்.

345
00:29:38,153 --> 00:29:40,447
எங்களைப் போல இணைஞ்சு இருக்கும் ஒரு
டிபார்ட்மெண்ட், புரிதைலை சிறப்பா வைச்சுக்கணுமே.

346
00:29:40,531 --> 00:29:43,033
முட்டையை-கீழே போடும் சவாலாம்.
இந்த கண்ராவியை நீ நம்புறயா?

347
00:29:43,116 --> 00:29:44,785
- நீங்க எல்லோரும் என்ன செய்யறீங்க?
- ஃபெலிசியா.

348
00:29:44,868 --> 00:29:48,038
நிரந்தர பகுதிக்கு ஒரு சுற்றுப்பயணம்.
இவர் ஹெல்லி, எங்க புது சுத்திகரிப்பாளர்.

349
00:29:48,121 --> 00:29:49,456
- இவர்...
- வரவேற்கிறோம், ஹெல்லி.

350
00:29:50,499 --> 00:29:55,671
சரி, நாங்க திரும்பணும்.
கூட்டை காலியா விட முடியாதே.

351
00:29:56,713 --> 00:29:58,006
உங்கள சந்திச்சதிலே சந்தோஷம், ஓ&டி.

352
00:30:00,175 --> 00:30:01,510
அந்த முட்டைகளை பார்க்கவே
அசிங்கமாயிருக்கு.

353
00:30:07,599 --> 00:30:08,642
இர்விங், வா போகலாம்.

354
00:30:16,650 --> 00:30:17,651
செத்?

355
00:30:23,615 --> 00:30:24,783
நாடலி.

356
00:30:24,867 --> 00:30:26,869
ஹார்மோனி, ஹலோ.

357
00:30:27,494 --> 00:30:30,706
நான் எதிர்பார்க்கலையே...
இது ஹெலினாவைப் பத்தியா?

358
00:30:31,290 --> 00:30:33,417
இல்ல, பீட்டர் கில்மரைப் பத்தி.

359
00:30:33,500 --> 00:30:36,044
முக்கிய குழு நம்முடன் சேர்ந்து
கொல்வாங்கன்னு நான் உங்களுக்குச் சொல்லணும்.

360
00:31:03,614 --> 00:31:05,532
நீங்கள் முதலில் பேசுவைதை
முக்கிய குழு விரும்புகின்றனர்.

361
00:31:05,616 --> 00:31:07,117
ஓ, அப்படியா. கண்டிப்பாக.

362
00:31:07,701 --> 00:31:09,036
வணக்கங்கள்.

363
00:31:15,250 --> 00:31:17,669
கில்மருக்கான தேடல் இன்னும் தொடர்கிறது.

364
00:31:24,426 --> 00:31:26,178
நான் இதை மட்டும் சொல்றேன்.

365
00:31:26,261 --> 00:31:29,431
பயமுறுத்த இல்ல,
ஆனால் அவன் போவதற்கு முன்னாடி,

366
00:31:29,515 --> 00:31:34,394
சில நெருடலான அறிகுறிகள் இருந்தன,
அவனுக்கு... மறுபிணைப்பு ஆகியிருக்கலாம்.

367
00:31:47,908 --> 00:31:48,909
சரி.

368
00:31:48,992 --> 00:31:52,037
எனவே, முக்கிய குழு மிக பலமாக உங்களுக்கு
சொல்லும்படி கூறுகின்றனர்

369
00:31:52,120 --> 00:31:55,374
துண்டிப்பு செயல்முறை மாற்ற முடியாத ஒன்று
என நிரூபணமாகியிருக்கிறது என்று.

370
00:31:56,291 --> 00:31:57,292
ஆம்...

371
00:31:57,376 --> 00:32:01,255
மேலும் இந்த அறிவு, துண்டிப்பு தளத்தை நிர்வாகம்
செய்யும் ஒருவருக்கு கண்டிப்பாக இருக்க வேண்டும் என.

372
00:32:01,338 --> 00:32:02,506
ஆமாம், நிச்சயமாக.

373
00:32:02,589 --> 00:32:05,592
அதே சமயம், நிச்சயமாக, எம்டிஆரை அந்தந்த
இலக்கு எண்களுக்கு கொண்டு வர

374
00:32:05,676 --> 00:32:07,845
காலாண்டு கெடுவிற்கு, இன்னும்
மூன்று வாரங்கள் தான் உள்ளதென்று நினைவு வேணும்.

375
00:32:07,928 --> 00:32:09,596
சரி, கண்டிப்பா.

376
00:32:10,514 --> 00:32:15,269
எங்கள் புதிய இளம் சுத்திகரிப்பாளரோடு, நாங்கள்
விரைவில் இன்னும் நல்ல பலன்களைத் தருவோம்.

377
00:32:15,853 --> 00:32:18,772
- அதோடு, நான் சொல்ல விரும்புவது...
- முக்கிய குழு இந்த அழைப்பை முடித்துவிட்டனர்.

378
00:32:21,483 --> 00:32:24,069
அப்படியா, சரி. நன்றி.

379
00:32:26,071 --> 00:32:28,282
- நான் கேட்க நினைத்தது...
- குட் பை, ஹார்மோனி.

380
00:32:34,454 --> 00:32:37,833
உண்மையா, இரு-நபர் டிபார்ட்மெண்ட் இருக்கா?
அவங்க ஒருத்தரை ஒருத்தர் தான் பார்த்துப்பாங்களா?

381
00:32:37,916 --> 00:32:41,128
பெரும்பாலும் அப்படிதான்.
தனிமையா தான் இருக்கும்னு நினைக்கிறேன்.

382
00:32:41,211 --> 00:32:43,213
அது இயல்பானது இல்ல. மூர்க்கத் தனமானது.

383
00:32:43,297 --> 00:32:44,381
ஓ&டி நல்லவங்க தான்.

384
00:32:44,464 --> 00:32:47,217
இல்ல, அவங்க நல்லவங்க இல்ல.
நம்ம கொள்கைகளும் அவங்களுக்கு கிடையாது.

385
00:32:47,301 --> 00:32:49,261
டிபார்ட்மெண்டுகளை, கியர் குணத்தின்
அடிப்படையிலே தான் பிரிச்சிருக்காரு.

386
00:32:49,344 --> 00:32:53,056
மேக்ரோடாட்டுகள் அறிவாளிகள், உண்மையானவர்கள்,
ஆனால் ஓ&டிகாரங்க ரொம்ப குரூரமானவங்க.

387
00:32:53,140 --> 00:32:54,266
இங்க எவ்வளவு டிபார்ட்மெண்டுகள் இருக்கு?

388
00:32:54,349 --> 00:32:55,475
- சுமார் 30 இருக்கலாம்.
- கிட்டதட்ட அஞ்சு.

389
00:32:55,559 --> 00:32:56,935
யாருக்கும் உறுதியா தெரியாது.

390
00:32:57,019 --> 00:32:59,897
மத்தவங்க மேல, ஓ&டி பல ஆண்டுகளுக்கு முன்னாடி,
ஒரு வன்மமான சதித்திட்டத்தை தீட்டினாங்க,

391
00:32:59,980 --> 00:33:01,773
அதனால தான் அவங்களை இரண்டாக குறைச்சிட்டாங்க.

392
00:33:01,857 --> 00:33:03,734
அதனால தான் நம்ம அனைவரையுமே
இப்போ தள்ளி தள்ளி வைக்கிறாங்க.

393
00:33:03,817 --> 00:33:05,527
அது அப்பட்டமான கட்டுக்கதை.

394
00:33:05,611 --> 00:33:06,737
அவங்க யாரையாவது கொன்னார்களா?

395
00:33:06,820 --> 00:33:09,448
இல்ல. ஒரு சதி திட்டமும் இல்ல.
யாரும் யாரையும் கொல்லலை.

396
00:33:09,531 --> 00:33:11,617
அப்போ நாம எல்லாம்
ஏன் சேர்ந்தே இருக்கறது கிடையாது?

397
00:33:12,534 --> 00:33:14,870
நான் சொல்ல வந்தது, சதி திட்டம் எதுவும் இல்லைன்னு
என்னால 99 சதம் நிச்சயமா சொல்ல முடியும்.

398
00:33:17,247 --> 00:33:20,042
ஒருவேளை அவங்க திரும்ப வந்து நம்மைத்
தாக்கினாங்கன்னா, மார்க்கை கொல்லணும்.

399
00:33:20,125 --> 00:33:21,251
- ஓஹோ, அப்படியா?
- ஆமாம்.

400
00:33:21,752 --> 00:33:23,712
எனவே அவங்க நினைப்புபடி,
நாம எதைப் பத்தியும் கவலையில்லாத முட்டாள்கள்.

401
00:33:23,795 --> 00:33:25,005
புத்திசாலித்தனம். அது தான் புத்திசாலித்தனம்.

402
00:33:25,088 --> 00:33:28,091
இப்போ, அவங்க அந்த திருப்பத்திலே நம்மை
தாக்கறாங்க, நாம ரத்த-களமாகறோம்,

403
00:33:28,175 --> 00:33:31,720
நான் உன் முகத்தைப் போட்டுக்கிட்டேன், அவங்க, "இது
யாரோட முகம்?"ன்னு கேக்குறதா, கற்பனை செய்றேன்.

404
00:33:31,803 --> 00:33:35,057
அதுக்கு நான், "கடைசியா எங்கள
ஏமாத்துன ஆளோட முகம்" அப்படின்னு சொல்றேன்.

405
00:33:36,391 --> 00:33:38,769
அந்த கற்பனை
எனக்குள்ள ரொம்ப வலுவா தோணிகிட்டே இருக்குது.

406
00:33:38,852 --> 00:33:42,272
என்னன்னா... அவங்க என் முகத்தை
நீ தலைகீழாக போட்டுகிட்டன்னு வை.

407
00:33:42,356 --> 00:33:43,857
அப்போ ஒருவேளை அடையாளம் காணுவாங்களோ?

408
00:33:52,741 --> 00:33:53,784
நிரந்தர பகுதி

409
00:33:53,867 --> 00:33:54,868
நாம வந்து சேர்ந்துட்டோம்.

410
00:34:00,958 --> 00:34:03,043
நினைவில் இருக்கும் மனிதன்
ஒரு நாளும் மக்குவதில்லை. - கியர் ஈகன்

411
00:34:03,126 --> 00:34:05,921
வரலாறு நம்முள் வசிக்கிறது, நாம் அதை கற்றாலும்
இல்லாவிடிலும். - ஜேம் ஈகன்

412
00:34:10,676 --> 00:34:13,303
"உடனே வாருங்கள், என் துறையின் மக்களே,

413
00:34:13,846 --> 00:34:16,764
வந்து என் இரத்தக் குழந்தைகளை அறிந்து கொள்ளுங்கள்."

414
00:34:19,601 --> 00:34:20,601
ஓஹோ.

415
00:34:21,478 --> 00:34:27,734
அவர் தான் ஜேம் ஈகன்.
இப்போதுள்ள சிஈஓ. அற்புதமான மனிதர்.

416
00:34:28,569 --> 00:34:31,530
அழகானவரும் கூட. அந்த புருவத்தைப் பார்த்தியா?

417
00:34:54,719 --> 00:34:58,307
எல்லா மத்தியப் பகுதி உருவங்களும் ஒரு
கடந்த கால ஈகன் சிஈஓவுக்கானது தான்.

418
00:34:59,057 --> 00:35:01,935
ஆனால் பின் பக்கம் முழுவதும் கியருடையது.

419
00:35:25,209 --> 00:35:28,295
மரணம் என்னை நெருங்குவது எனக்குத் தெரியும்,

420
00:35:28,378 --> 00:35:34,593
ஏனெனில் மக்கள் என் வாழ்வின் பெரிய சாதனையாக
எதைக் கருதுகிறேன் எனக் கேட்கத் தொடங்கிவிட்டனர்.

421
00:35:35,177 --> 00:35:40,516
நான் மக்கிப் போகும்போது என்னை எப்படி நினைவில்
கொள்ள வேண்டுமென அறிய விரும்புகிறார்கள்.

422
00:35:41,266 --> 00:35:48,106
என் வாழ்க்கையில், ஒவ்வொரு மனித ஆன்மாவும்
உருவமைக்கப்பட்டுள்ளது என நான் அடையாளம் கண்டேன்,

423
00:35:48,190 --> 00:35:52,236
அவை நான்கு பாகங்களால் ஆனது,
குணாதிசயம் என அவற்றை அழைக்கிறேன்.

424
00:35:52,819 --> 00:35:58,242
துக்கம். விளையாட்டு. பீதி. வெறுப்பு.

425
00:35:58,325 --> 00:35:59,618
சிஈஓ 1865-1939
கியர் ஈகன் 1841-1939

426
00:35:59,701 --> 00:36:05,541
ஒரு மனிதனின் குணம் இந்த குணாதிசயங்களின்
துல்லிய கலவை விகிதத்தால் நிர்ணயிக்கப்படுகிறது.

427
00:36:05,624 --> 00:36:07,292
சிஈஓ 1959-1976
பைர்டு ஈகன் 1902-1976

428
00:36:07,376 --> 00:36:11,171
என் மனம் என்னும் குகைக்குள் நான் புகுந்து சென்று,
அங்கு அவற்றை கட்டுக்குள் கொண்டு வந்தேன்.

429
00:36:11,255 --> 00:36:12,881
சிஈஓ 1987-1999
ஃபிலிப் "பிப்" ஈகன் 1937-1999

430
00:36:12,965 --> 00:36:18,428
நான் செய்ததைப் போல நீங்களும் உங்களுடையதை
செய்தால், அதன் பின் உலகம் என்பது...

431
00:36:18,512 --> 00:36:19,972
சிஈஓ 1976 - 1987
கெர்ஹார்ட் ஈகன் 1920-1991

432
00:36:20,055 --> 00:36:21,306
...உங்கள் இணைப்பாகி விடும்.

433
00:36:21,390 --> 00:36:25,102
இந்த வலிமையான, புனிதமான ஆற்றலைத் தான்

434
00:36:25,185 --> 00:36:30,482
என் மக்களான உங்களுக்கு,
நான் விட்டுச் செல்ல விரும்புகிறேன்.

435
00:36:31,066 --> 00:36:32,609
சிஈஓ 1941-1959
மிர்ட்டில் ஈகன் 1886-1960

436
00:36:32,693 --> 00:36:34,862
ஒரு ஈகனாக இருக்க,

437
00:36:34,945 --> 00:36:39,783
உண்மையான ஈகனாகவோ, அல்லது
லுமன் குடும்பத்தில் பணி செய்யும் யாரானாலும்,

438
00:36:39,867 --> 00:36:42,744
ஒரு வகையான தார்மீக கொள்கைகளை
கடைப்பிடிப்பவராக இருப்பது அவசியம்,

439
00:36:42,828 --> 00:36:47,583
நாங்கள் வெகு காலமாக பொக்கீஷமாக
பாதுகாத்து வரும் அந்த கொள்கைகள்,

440
00:36:47,666 --> 00:36:51,795
என்றோ ஒரு நாள் அவை இந்த உலகை
காப்பாற்றப் போகிறது என நான் நம்புகிறேன்.

441
00:36:51,879 --> 00:36:54,298
அந்த தார்மீக கொள்கைகள் என் உடலிலுள்ள

442
00:36:54,381 --> 00:36:56,091
- இரத்தம் முழுவதிலும் பாய்ந்து...
- அட, பாருடா, நீ ஒண்ணை கையில வைச்சிருக்க.

443
00:36:56,175 --> 00:36:58,468
...நாம் ஆரம்பித்த இடமான
கியருக்கே கொண்டு செல்லும்.

444
00:36:58,552 --> 00:37:00,846
- கண்ணீர் வந்தால் கவலைப் பட வேண்டாம்.
- நான் சிறுமியாக இருந்தபோது,

445
00:37:01,513 --> 00:37:03,140
என் தந்தை என்னை கிசுகிசுக்க வைப்பார்...

446
00:37:03,223 --> 00:37:05,726
அவர் அஞ்சு சிஈஓக்களுக்கு முன் இருந்தவர்.

447
00:37:07,102 --> 00:37:08,729
அதற்கு முன் ஒரு பெண் சிஈஓ இருந்திருக்கவில்லை.

448
00:37:09,479 --> 00:37:14,359
தனது ஏழாம் வயதிலேயே, தன் தந்தையிடம் தான்தான்
முதல் பெண் சிஈஓவாக வரப்போவதாக கூறினார்.

449
00:37:14,443 --> 00:37:16,069
தீர்க்க தரிசனம். துடிப்பு.

450
00:37:16,153 --> 00:37:17,696
- அது அழகாக இல்ல?
- கூர்மையான அறிவு.

451
00:37:17,779 --> 00:37:19,031
- ரொம்ப அழகாக இருக்கு.
- மகிழ்ச்சி.

452
00:37:19,656 --> 00:37:22,910
எனக்கும் என் குழந்தைக்கால ஞாபகம்
இருக்கக்கூடாதா என்று தோண்றுகிறது.

453
00:37:22,993 --> 00:37:27,789
சுறுசுறுப்பு. நன்னடத்தை. சாதுர்யம்.

454
00:37:28,624 --> 00:37:33,962
ஒருவருக்கு எந்தவித வரலாறும் இல்லாமல்
இருப்பது இயல்பானது நிலை இல்லை.

455
00:37:34,463 --> 00:37:40,010
வரலாறு நம்மை ஒரு மனிதராக உருவாக்குகிறுது.
நமக்கு ஒரு விவரத்தைத் தருகிறது. ஒரு உருவம்.

456
00:37:40,677 --> 00:37:44,932
ஆனால், நான் அந்த மேஜையில் வினுத்தபோது,
நான் எந்த உருவமும் இல்லாமல் இருந்தேன்.

457
00:37:47,017 --> 00:37:52,189
ஆனால் நான் வேலை செய்யும் நிறுவனம்
மனித இன சேவையில் 1866ம் ஆண்டு முதல்

458
00:37:52,272 --> 00:37:58,278
அக்கறைக் கொண்டுள்ளது என்று அறிந்தேன்.

459
00:37:59,029 --> 00:38:00,113
பாரு.

460
00:38:00,197 --> 00:38:05,536
இதுல இருக்கும் ஒவ்வொன்றும், வெளிப்புறத்தில்
இருக்கும் ஒருவரின் உண்மையான புன்னகை.

461
00:38:06,245 --> 00:38:09,414
லுமன் இன்டஸ்டிரீஸ் உதவியிருக்கும் ஒருவருடையது.

462
00:38:10,082 --> 00:38:12,417
இவற்றை அவர்கள் திரும்பத் திரும்ப
உபயோகிக்கின்றனர்.

463
00:38:12,501 --> 00:38:16,797
புன்னகைகளின் உண்மையான
எண்ணிக்கை இலட்சக் கணக்கில் போகலாம்.

464
00:38:18,549 --> 00:38:20,342
எனவே, நாம் என்ன ஒரு பற்பசைப் போன்ற நிறுவனமா?

465
00:38:20,425 --> 00:38:21,552
இல்லை.

466
00:38:21,635 --> 00:38:24,638
நான் சொல்வது, நீங்க இப்போது வரலாற்றின்
பாகமாகி விட்டீர்கள்.

467
00:38:24,721 --> 00:38:27,266
- ஒரு மாண்புமிகு வரலாறு.
- அதுவும் மிக அதிக அளவி...

468
00:38:27,349 --> 00:38:28,433
இந்த வாய்களின் சுவரை அவ்வப்போது
அப்டேட் செய்வார்களா?

469
00:38:28,934 --> 00:38:31,645
அதன் பெயர் "வாய்களின் சுவர்" இல்லை.

470
00:38:31,728 --> 00:38:33,647
ச்சே, எனக்குப் பிடித்த
குட்டியின் வாயை எடுத்துட்டாங்க.

471
00:38:34,189 --> 00:38:36,275
- நீங்க அனைவரும் போகத் தயாராக இருக்கீங்களா?
- நாம இப்போதானே இங்க வந்திருக்கோம்.

472
00:38:38,193 --> 00:38:40,654
அவ இன்னும் அந்த கியர் பாகத்தை பார்க்கவேயில்லை.

473
00:38:44,867 --> 00:38:45,868
கெர்ஹார்ட்.

474
00:38:48,787 --> 00:38:51,790
லுமன் லெகசி ஆஃப் ஜாய்
கியர் ஈகனின் வீடு மாதிரி

475
00:39:00,090 --> 00:39:02,718
- கடவுளே.
- இல்லை, கியர்.

476
00:39:03,927 --> 00:39:04,970
இது அவருடைய வீடா?

477
00:39:05,053 --> 00:39:07,055
அச்சு அசலான மாதிரி.

478
00:39:07,139 --> 00:39:08,140
ரொம்ப நல்லாயிருக்கு, இல்ல?

479
00:39:09,266 --> 00:39:11,268
ஆமாம், ரொம்ப நல்லாயிருக்கு.

480
00:39:37,294 --> 00:39:40,047
கியர் ஈகனின் படுக்கையில்
படுத்துக் கொள்ள வேண்டாம்

481
00:39:40,130 --> 00:39:45,219
அவர் விட்டு சென்றபடியே,
கியரின் படுக்கையறை.

482
00:39:49,598 --> 00:39:50,974
இதில் முற்றிலும் எல்லாம் உள்ளது.

483
00:39:51,975 --> 00:39:55,687
நான் இந்த இடத்தை வெறுக்கிறேன்.
19ம் நூற்றாண்டு புழுதியைப் போல நாத்தம் வருகிறது.

484
00:39:55,771 --> 00:39:59,274
இது ஒரு பியர் பார்ட்டியைப்
போல பாவிப்பதை நிறுத்துங்க.

485
00:39:59,358 --> 00:40:01,568
இது நியாயமில்லை. இதுவரையில்
நான் இந்த எழவில் மரியாதையாக தான் இருந்தேன்.

486
00:40:03,487 --> 00:40:04,488
- மார்க்.
- என்ன?

487
00:40:06,949 --> 00:40:10,744
நீ அந்த படுக்கையின் மேலே... உட்கார இருந்தயா?

488
00:40:10,827 --> 00:40:13,497
இல்ல. இல்லயே-உம்.

489
00:40:15,874 --> 00:40:18,752
உன் பாக்கெட்டில், என்ன இருக்கு, மார்க்?

490
00:40:20,712 --> 00:40:21,713
நான்...

491
00:40:22,589 --> 00:40:26,218
ஓ, கடவுளே, மார்க். இன்னுமா?

492
00:40:27,845 --> 00:40:29,680
அது... சும்மா ஒரு தமாஷுக்கு தான்.

493
00:40:29,763 --> 00:40:31,265
இது நிரந்தர பகுதி.

494
00:40:31,974 --> 00:40:33,684
இது ஈகன் குடும்பம்.

495
00:40:33,767 --> 00:40:38,105
அது லுமனின் ஆன்மா சுவாசிக்கும் இடம் அதோடு
லுமன் சம்மந்தப்பட்ட எல்லாமும் கூட சம்மந்தப்பட்டது,

496
00:40:38,188 --> 00:40:39,565
உன் பிங்கோ மாட்ச் இல்ல.

497
00:40:39,648 --> 00:40:43,277
பாரு, கியர், "உன் மனதில் எப்போதும்
மகிழ்ச்சியை வைத்துக்கொள்" என்றார்.

498
00:40:44,194 --> 00:40:45,863
உன் பயிற்சி மாணவிக்கு ஒன்றைத் தந்தாயா?

499
00:40:47,447 --> 00:40:48,448
கண்டிப்பா, நீ செய்த.

500
00:40:49,867 --> 00:40:52,035
அவளுக்கு இதன் பொருள் எதுவுமே விளங்கலை.

501
00:40:52,119 --> 00:40:54,705
அதனால, கட்டாயமா,
நீ நம்ம நிறுவனரின் அறிவிப்பை

502
00:40:54,788 --> 00:40:57,207
ஜோக்குகளோடும்,
அவமரியாதையோடும் குறைக்கிற.

503
00:40:57,291 --> 00:41:01,253
அவளுடைய டிபார்டமெண்ட் தலையிடமிருந்து
அவளுக்கு நல்ல பாடம் கற்பிக்கிற.

504
00:41:01,336 --> 00:41:03,172
ஏய், நான் ஒண்ணும் டிபார்ட்மெண்ட்
தலையாக ஆகணும்னு கேட்டு வாங்கலை.

505
00:41:03,255 --> 00:41:05,924
நான் ஒண்ணும் பீட்டியை எடுத்துட்டு,
அவன் இடத்துல...

506
00:41:10,888 --> 00:41:11,889
ஹெல்லியை கேட்கலை, இல்ல?

507
00:41:13,724 --> 00:41:14,725
உம்-ம்.

508
00:41:15,517 --> 00:41:16,518
ஹெல்லி?

509
00:41:17,269 --> 00:41:18,854
ச்சே.

510
00:41:47,090 --> 00:41:48,091
ஹெல்லி!

511
00:41:52,596 --> 00:41:54,765
இது வந்து... கடவுளே.

512
00:42:15,869 --> 00:42:16,870
ஹெல்லி!

513
00:42:30,175 --> 00:42:31,385
ஹெல்லி!

514
00:42:36,640 --> 00:42:37,641
ஹெல்லி!

515
00:42:39,726 --> 00:42:40,686
மீண்டும் இங்க வரவே வரராதே

516
00:42:40,769 --> 00:42:41,770
இல்ல!

517
00:42:43,939 --> 00:42:45,816
நாசாமாப்போச்சு, ஹெல்லி!

518
00:42:57,911 --> 00:42:59,663
இந்த வழியா வாங்க, தயவுசெய்து, ஹெல்லி!

519
00:43:03,876 --> 00:43:06,420
துண்டிக்கப்பட்டவர்கள் வாசல்
அனுமதியில்லை

520
00:43:39,703 --> 00:43:40,704
உள்ள போங்க.

521
00:44:14,947 --> 00:44:16,949
ஹெல்லி, உன்னை இங்க பார்ப்பது
நிஜமா எனக்கு வருத்தமாக இருக்கு.

522
00:44:21,745 --> 00:44:22,746
மும்மடங்கு ஆன்டிபையாட்டிக்
கிருமிநாசினி

523
00:44:27,835 --> 00:44:29,503
நீ ஒரு வழியா பழகிட்டன்னு நினைத்தேன்.

524
00:44:32,089 --> 00:44:35,342
உன்னை சந்தோஷமாக வைக்க மார்க் எவ்வளவு
கஷ்டப்படுகிறான்னு எனக்குத் தெரியும்.

525
00:44:43,934 --> 00:44:48,772
பாருங்க, உங்களப் பார்த்தா புத்திசாலி மனிதரா
தெரியுது. ஆனால் இதெல்லாம் மோசம்னு தெரியலையா?

526
00:44:49,273 --> 00:44:50,691
- நீங்க இப்படி கட்டாயப்படுத்தி...
- இப்போது வேண்டாம், ஹெல்லி.

527
00:44:53,110 --> 00:44:55,237
உட்காருங்க. தயவுசெய்து.

528
00:45:11,545 --> 00:45:13,088
மேஜை மேல கைகளை வைங்க, தயவுசெய்து.

529
00:45:52,461 --> 00:45:54,963
ஹெல்லி ஆரின் குற்ற போத
அறிக்கையை முன் வைக்கிறேன்.

530
00:46:01,553 --> 00:46:02,554
என்ன இது?

531
00:46:06,225 --> 00:46:07,226
அதைப் படி.

532
00:46:10,687 --> 00:46:11,688
நான் விரும்பலை.

533
00:46:13,273 --> 00:46:15,275
இல்ல. படி.

534
00:46:21,823 --> 00:46:25,369
"நான் இவ்வுலகிற்கு செய்த
தீமைக்கு என்னை மன்னிக்கவும்.

535
00:46:26,411 --> 00:46:29,831
என்னைத் தவிர யாரும் என் செயல்களுக்கு
யாரும் பிராயசித்தம் செய்ய முடியாது,

536
00:46:29,915 --> 00:46:32,626
எனக்குள் மட்டும் தான் அந்த கரைகள் தங்கும்.

537
00:46:33,836 --> 00:46:36,505
நான் பிடிபட்டதுக்கு நன்றிகடன் பட்டுள்ளேன்,

538
00:46:36,588 --> 00:46:38,966
அன்புக் கரங்களால் என் வீழ்ச்சி
தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

539
00:46:39,633 --> 00:46:41,760
நான் செய்தவற்றிற்கு வருந்ததான் முடியும்,
அதைத்தான் நான் செய்கிறேன்."

540
00:46:45,889 --> 00:46:47,391
நீ சொன்ன எதையுமே நீ உணரவில்லை.

541
00:46:49,351 --> 00:46:50,352
என்னது?

542
00:46:52,062 --> 00:46:53,230
தயவுசெய்து, இன்னொகு முறை.

543
00:46:56,024 --> 00:46:58,694
"நான் இவ்வுலகிற்கு செய்த
தீமைக்கு என்னை மன்னிக்கவும்.

544
00:47:00,112 --> 00:47:02,990
என்னைத் தவிர யாரும் என் செயல்களுக்கு
யாரும் பிராயசித்தம் செய்ய முடியாது,

545
00:47:04,032 --> 00:47:07,327
எனக்குள் மட்டும் தான் அந்த கரைகள் தங்கும்.

546
00:47:07,911 --> 00:47:09,955
நான் பிடிபட்டதுக்கு நன்றிகடன் பட்டுள்ளேன்,

547
00:47:10,539 --> 00:47:13,208
அன்புக் கரங்களால் என் வீழ்ச்சி
தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

548
00:47:14,042 --> 00:47:16,879
நான் செய்தவற்றிற்கு வருந்ததான் முடியும்,
அதைத்தான் நான் செய்கிறேன்."

549
00:47:23,260 --> 00:47:24,428
மீண்டும்.

550
00:47:27,181 --> 00:47:28,182
நிஜமாவா?

551
00:47:33,687 --> 00:47:34,688
வேடிக்கையான நாள்.

552
00:47:36,648 --> 00:47:37,649
நாளை பார்க்கலாம்.

553
00:47:39,651 --> 00:47:40,652
ஆமாம்.

554
00:47:42,362 --> 00:47:43,614
இதை எல்லாம் அணைக்கட்டுமா?

555
00:47:44,907 --> 00:47:45,908
ஆம், அணைச்சிடு.

556
00:49:05,571 --> 00:49:07,030
நாம் அனைவரும் அங்கு இல்லை
அதனால் தான் நாம் இங்கிருக்கிறோம்

557
00:49:07,114 --> 00:49:08,115
அழிவின்... சுருள்

558
00:49:08,198 --> 00:49:09,241
நிரந்தர பகுதி

559
00:49:09,324 --> 00:49:10,742
சிலர் இங்கு வாழலாம்

560
00:49:30,137 --> 00:49:34,057
பிரேக் அறை

561
00:49:41,231 --> 00:49:44,109
மனது

562
00:50:02,169 --> 00:50:05,964
எங்கிட்ட டோக்கன்கள் இல்ல.
நான் டோக்கன்கள் இல்லாம சாப்பிட முடியாது.

563
00:50:13,639 --> 00:50:14,640
ஏய்!

564
00:50:15,724 --> 00:50:17,434
எனக்கு சாப்பிட டோக்கன்கள் தேவை.

565
00:50:27,152 --> 00:50:28,028
அடக் கடவுளே.

566
00:51:00,602 --> 00:51:02,604
லுமன்

567
00:51:34,386 --> 00:51:35,387
பீட்டி?

568
00:51:41,602 --> 00:51:42,603
பீட்டி?

569
00:53:05,936 --> 00:53:07,354
இப்போ
சரியாகிவிடும். நிதானம்.

570
00:53:11,692 --> 00:53:13,652
எந்த திசையிலிருந்து வந்தாருன்னு கவனிச்சீங்களா?

571
00:53:15,737 --> 00:53:17,781
நான் ஒரு ஸ்ட்ரெச்சரை கொண்டு வரப் போகிறேன்.
உடனே திரும்பி விடுவேன்.

572
00:53:18,323 --> 00:53:19,616
இந்த ஆளின்
அடையாளத்தை செக் செய்ய முடியுமா?

573
00:53:23,245 --> 00:53:26,540
பக்கத்திலிருந்து தான் வந்திருக்கணும்.
மேலே வெறும் அங்கி மாத்திரம் தான். வேற இல்லை.

574
00:53:38,594 --> 00:53:39,803
அட, அட, அடடா.
விழுந்துவிட்டார். விழுந்துட்டார்.

575
00:53:39,887 --> 00:53:42,014
சார். சார். நான் பேசறது கேட்குதா?

576
00:53:42,097 --> 00:53:43,682
அதை எடுத்தாச்சா? பின்னாடி நில்லு.

577
00:53:43,765 --> 00:53:48,562
ஆமாம், அனுப்பு, 10-53 கேஸு ஒண்ணு
இருக்கு, 42ம் தெருவில ஒரு கடையிலே.

578
00:53:48,645 --> 00:53:49,897
அதை உள்ள அனுப்புங்க, தயவுசெய்து.

579
00:53:51,523 --> 00:53:53,692
- மூச்சு இருக்கா?
- இல்ல, மூச்சில்ல.

580
00:53:53,775 --> 00:53:55,110
ஆம், ஆமாம். எனக்கு இதயத் துடிப்பு ரேட்டைச் சொல்லு.

581
00:53:56,820 --> 00:53:59,239
- நல்லாயிருக்கயா? நலமா?
- அவரை ஏத்துங்க.

582
00:56:32,351 --> 00:56:34,353
தமிழாக்கம் அகிலா குமார்

