1
00:00:15,015 --> 00:00:17,643
"நான் செய்தவற்றிற்கு வருந்ததான் முடியும்,
அதைத்தான் நான் செய்கிறேன்."

2
00:00:17,726 --> 00:00:21,688
நான் பிடிபட்டதுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்,

3
00:00:21,772 --> 00:00:26,109
அன்புக் கரங்களால் என் வீழ்ச்சி
தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

4
00:00:26,193 --> 00:00:28,487
இவ்வுலகிற்கு. யாரும்
என் செயல்களுக்கு என்னைத் தவிர

5
00:00:51,218 --> 00:00:53,387
ஆனால் இன்னும் நீ உணர்ந்து சொல்லவில்லை.

6
00:01:17,870 --> 00:01:19,246
லுமன்

7
00:01:25,085 --> 00:01:26,712
நாம் மறுபடி நாளை காலை முயற்சிப்போம்.

8
00:02:06,668 --> 00:02:07,961
நாளை சந்திப்போம், ஹெல்லி.

9
00:02:22,142 --> 00:02:23,435
என்னை நாசம் செய்.

10
00:02:28,524 --> 00:02:30,567
நான் நேற்று அதை 300 முறை அதை படிச்சேன்.

11
00:02:31,985 --> 00:02:36,698
259. இருப்பினும், தயவுசெய்து. இப்போது.

12
00:02:40,160 --> 00:02:41,662
ஒரு குரல் கேட்குதே, அது என்ன?

13
00:02:59,513 --> 00:03:03,183
""நான் இவ்வுலகிற்கு செய்த
தீமைக்கு என்னை மன்னிக்கவும்.

14
00:03:05,102 --> 00:03:07,479
என்னைத் தவிர யாரும் என் செயல்களுக்கு
யாரும் பிராயசித்தம் செய்ய முடியாது."

15
00:03:15,153 --> 00:03:17,781
"எனக்குள் மட்டும் தான்
அந்த கரைகள் தங்கும்."

16
00:03:30,294 --> 00:03:32,087
நான் உண்மையிலேயே வருந்துகிறேன், சரியா?

17
00:03:35,174 --> 00:03:36,341
நான் வருந்துகிறேன்.

18
00:03:38,594 --> 00:03:41,597
மாற்றிச் சொல்வது கூடாது. மீண்டும்.

19
00:05:30,372 --> 00:05:34,126
மிஸ்டு கால் பதிவு
தடுக்கப்பட்டது

20
00:06:00,652 --> 00:06:03,697
கேம்பிங்

21
00:06:28,388 --> 00:06:30,474
மனம் - அரோக்கியம் - எம்டிஆர் - பிரேக் அறை
ஓ&டி? - நிரந்தர பகுதி

22
00:06:30,557 --> 00:06:31,975
நாம் இங்கிருப்பதற்கு காரணம்
நாம் எல்லோரும் அங்கில்லாததால் தான்.

23
00:06:35,562 --> 00:06:36,563
- மார்க்?
- என்ன?

24
00:06:36,647 --> 00:06:41,276
1100 முறைகளை கடந்தாச்சு, நேற்றிலிருந்து இன்னும்
ஹெல்லி அந்த பிரேக் அறையிலேயே இருக்கிறாள்.

25
00:06:41,360 --> 00:06:43,737
- சரியா?
- இந்த டிபார்ட்மெண்டின் சீஃபாக,

26
00:06:43,820 --> 00:06:46,406
அவளுடைய முன்னேற்றத்தை பத்தி
யோசிக்கிறாயான்னு எனக்கு கேட்கத் தோணுது?

27
00:06:46,490 --> 00:06:47,950
- சரி...
- மார்குக்கு அந்த அதிகாரம் இல்லை.

28
00:06:48,033 --> 00:06:49,743
- சரி, அவன் கேட்கலாமே.
- அவன் கேட்கப் போறதில்லை.

29
00:06:49,826 --> 00:06:50,827
- கேட்டாலும் கேட்கலாம்.
- சரி...

30
00:06:50,911 --> 00:06:52,329
ஹை.

31
00:06:55,249 --> 00:06:57,167
இடையூறு செய்வதற்கு மன்னிக்கணும்.

32
00:06:58,293 --> 00:07:02,130
நாம அன்னிக்கு சந்திச்சோம்.
ஆப்டிக்ஸ் மற்றும் டிசைன் துறையிலிருந்து நான் பர்ட்.

33
00:07:02,214 --> 00:07:05,884
- ஹை, இர்விங்.
- ஹை, பர்ட். நீங்க இங்க என்ன செய்யறீங்க?

34
00:07:05,968 --> 00:07:07,219
உங்களுக்கு எப்படி அவ்வளவு தெளிவா

35
00:07:07,302 --> 00:07:08,387
- இந்த துறை எங்கயிருக்குன்னு தெரியும்?
- டைலன்!

36
00:07:08,470 --> 00:07:12,641
என... எனக்கு முன் இருந்தவர், ஆலிஸ் கே.,
சந்திப்புகள் எல்லாம் நடத்தினப்போ, இங்க வந்திருந்தார்,

37
00:07:12,724 --> 00:07:15,018
- அப்போ அவர் எப்படி வருவதென விவரங்களை தந்தார்.
- அதை தலைகீழா எங்களுக்குத் தாங்க.

38
00:07:15,102 --> 00:07:16,228
சரி. பரவாயில்லை.

39
00:07:16,311 --> 00:07:17,771
நாங்க உங்களுக்கு எப்படி உதவ முடியும், பர்ட்?

40
00:07:17,855 --> 00:07:19,064
நன்றி. சரி.

41
00:07:19,857 --> 00:07:21,859
இர்விங், நீங்கள் சொன்னதைப்
பத்தி யோசிச்சேன்

42
00:07:21,942 --> 00:07:25,445
அதாவது புதிய கைப்புத்தக பைகளைப் பத்தி
நீங்க உற்சாகமா இருப்பது,

43
00:07:25,529 --> 00:07:27,489
ஒருவேளை நீங்க விளையாட்டுக்கு சொன்னீகளோ.

44
00:07:27,573 --> 00:07:29,366
இல்லை, இல்லவேயில்லை.

45
00:07:29,449 --> 00:07:32,703
சரி, நல்லது. இருந்தாலும், நான் கவலைப்
பட்டுகிட்டிருந்தேன், ஏன்னா நீங்க சொன்னீங்க

46
00:07:32,786 --> 00:07:36,039
எதிர்பார்ப்பே வேலையிலிருந்து அங்க
கவனத்தை திசைச் திருப்பலாம்னு,

47
00:07:36,123 --> 00:07:37,708
நான் உத்தேசித்தது அதற்கு நேர் எதிரானது.

48
00:07:37,791 --> 00:07:40,961
அதனால நான் நினைத்தேன், ச்சே,
அவர்களுக்கு இப்பவே கொண்டு கொடுப்போமேன்னு.

49
00:07:41,044 --> 00:07:43,505
அப்படி செய்தால், அது உங்களை திசைத்திருப்பாது.

50
00:07:43,589 --> 00:07:48,594
நீங்க அந்த கைப்புத்தக பைகளின் ப்ரீ-ரிலீஸுக்கு முன்
எங்களுக்காக கொண்டு வந்தீங்களா?

51
00:07:48,677 --> 00:07:51,638
அப்படிச் செய்வது தான் சரின்னு தோணுது. உங்க நேரம்
மிகவும் விலைமதிக்க முடியாததுன்னு தெரியும்.

52
00:07:51,722 --> 00:07:54,892
சரி, நீங்க அதை மேஜையில் வைத்து விடுங்க.
மீண்டும் ஓ&டிக்கு போக நீண்ட துரம் நடக்கணும்.

53
00:07:55,601 --> 00:07:56,685
ஆமாம்.

54
00:07:56,768 --> 00:07:59,563
நான் உங்களுக்கு ஒரு
அழைப்பு விடுக்கவும் விரும்பினேன்.

55
00:07:59,646 --> 00:08:02,316
மீண்டும், எனக்குத் தெரியும் நீங்க... நீங்க
கடினமாக உழைக்கிறீர்கள் என்று, எனவே...

56
00:08:02,983 --> 00:08:06,904
ஒருவேளை உங்களுக்கு ஓ&டியை சுத்தி பார்ப்பது
எப்போதாவது சுவாரசியமாக இருக்குமானால்,

57
00:08:06,987 --> 00:08:10,991
நானே இர்விங்கையும், உங்களையும்
சுத்தி காட்டுவதில் மகிழ்ச்சி அடைவேன்.

58
00:08:11,783 --> 00:08:14,494
வழி முன் பையில்
கொடுக்கப்பட்டுள்ளது, தலைகீழாக.

59
00:08:14,578 --> 00:08:15,662
செல்லுபடி ஆகலை.

60
00:08:18,540 --> 00:08:19,625
சரி.

61
00:08:21,001 --> 00:08:22,711
நன்றி, பர்ட்.

62
00:08:23,837 --> 00:08:24,838
நன்றி.

63
00:08:32,513 --> 00:08:35,599
அவர் அழைப்பை ஏற்பதற்கு இது ரொம்ப
சீக்கிரம்னு தோணுது.

64
00:08:35,682 --> 00:08:38,644
இதுவாரை நாம அவங்களை சென்று
பார்த்ததேயில்லை என்பதே அபத்தமாக தோணுது.

65
00:08:39,144 --> 00:08:43,565
கியரின் பார்வையில் நாம் அனைவரும்
சேர்ந்து வேலை செய்வதைத் தான் எண்ணியிருந்தார்.

66
00:08:43,649 --> 00:08:46,818
அது ஓ&டி துறை மக்களின் குடல்களை
வெளியே எடுத்துப் போடும் முன்பு.

67
00:08:46,902 --> 00:08:49,238
சுத்த மடத்தனம். நான்
மணி 1:00க்குள் திரும்பி விடுவேன்.

68
00:08:50,948 --> 00:08:51,990
அவன் இறக்கப் போகிறான்.

69
00:08:54,076 --> 00:08:55,077
இர்வ்...

70
00:09:04,169 --> 00:09:05,295
எத்தனை முறையானது?

71
00:09:08,507 --> 00:09:10,384
1,072 முறைகள்.

72
00:09:28,777 --> 00:09:30,487
ஓ&டி
எம்டிஆர்

73
00:09:40,330 --> 00:09:41,915
கதவுக்குப் பின்னாலிருந்து
வந்த அந்த குரல் யாருடையது?

74
00:09:42,541 --> 00:09:43,667
அழும் குழந்தை ஒன்று, அதைச் சொல்கிறாயா?

75
00:09:43,750 --> 00:09:44,877
லுமன்
நிலக்கடலை

76
00:09:44,960 --> 00:09:47,838
இல்ல. அதாவது, அந்த கோபமான, முணுமுணுக்கும் ஆளு.

77
00:09:47,921 --> 00:09:51,675
நண்பர்களே? உண்மையில் நாம்
அந்த பிரேக் அறையை பத்திப் பேசக்கூடாது.

78
00:09:52,217 --> 00:09:53,927
அதில் முக்கியமான விஷயம் என்னவென்றால்,

79
00:09:54,011 --> 00:09:56,889
நீ சரியாக மன்னிப்பக் கேட்டாய்,
இப்போது வெளியே வந்துவிட்டாய்.

80
00:09:57,931 --> 00:09:59,433
நீ என்ன செய்திருக்கணும்னா அந்த இயந்திரத்தை

81
00:09:59,516 --> 00:10:01,560
தந்திரமாக ஏமாத்தியிருக்கணும், நீ உண்மையிலேயே
வருத்தப்படும் ஒன்றைப் பத்தி நினைத்திருக்கணும்,

82
00:10:01,643 --> 00:10:05,439
எனவே என் வெளிப்புறத்தின் காதல்-வாழ்க்கையை
ஒரு வயதான அம்மாவோடு கற்பனை செய்து,

83
00:10:05,522 --> 00:10:08,609
கண்டிப்பாக அது அதிகம் தான்,
ஆனால் நான் கணவர்களை பார்த்து பரிதாபப் படுகிறேன்.

84
00:10:29,630 --> 00:10:30,714
ஹே.

85
00:10:32,257 --> 00:10:33,759
பிரேக் அறை சரியான அறுவை.

86
00:10:33,842 --> 00:10:38,180
அதனால் தான் நமக்கு அது போல முடிந்து விடக்கூடாது
என்று தான், முறைகளும் செயல்முறைகளும் உள்ளன.

87
00:10:39,181 --> 00:10:40,933
நீயே தெரிஞ்சுப்ப. கண்டிப்பா.

88
00:10:54,029 --> 00:10:55,030
ஹலோ?

89
00:10:56,907 --> 00:10:58,200
யார் அது?

90
00:10:58,283 --> 00:10:59,493
அட, ஹை.

91
00:11:00,077 --> 00:11:03,830
இர்விங் பி. மேக்ரோடேட்டா சுத்திகரிப்பாளர்கள்

92
00:11:03,914 --> 00:11:05,999
நாம அன்னிக்கு ஹாலுல சந்திச்சோமே.

93
00:11:09,253 --> 00:11:11,338
பர்ட் ஆறாம் அலமாரி பக்கத்தில் இருப்பார்.

94
00:11:12,297 --> 00:11:13,757
எதையும் தொட வேண்டாம்.

95
00:11:16,885 --> 00:11:20,722
பெரிய கவர்களால் அப்பென்டிக்ஸின்
மறுபதிவை கையாள முடியும்.

96
00:11:20,806 --> 00:11:26,311
ஆனால், கண்டிப்பாக, நாங்கள் ஹாலின் வழியில்
இருக்கும் பொருட்களை ஃப்ரேமோடு அனுப்புவோம்.

97
00:11:28,730 --> 00:11:30,065
இவ்வளவையும் நினைவில் கொள்ளணும்.

98
00:11:31,775 --> 00:11:33,443
ஃபெலிசியாவும் நானும் எப்படியோ சமாளிச்சிடுவோம்.

99
00:11:34,027 --> 00:11:38,740
நீங்க எம்டிஆர் ஆளுங்க தினமும் செய்யறதைவிட
சுலபம் தான்னு நினைக்கிறேன்.

100
00:11:39,658 --> 00:11:43,287
புதிய கலை படைப்புகள் வரும்போது
எப்படியிருக்கும்னு நான் கற்பனை தான் செய்யணும்.

101
00:11:43,370 --> 00:11:45,581
அனைவருக்கும் முன்பாக, நீங்க அதை பார்த்துவிடுவீங்க.

102
00:11:46,540 --> 00:11:51,086
இது கேட்க சிரிப்பா இருக்கும், ஆனால் உண்மையில்

103
00:11:51,170 --> 00:11:54,047
நீங்க "கியரின் இளம்பிராய பிணியாறுதல்"
படத்தை மாட்டியபோது, நான் அழுதேன்.

104
00:11:54,131 --> 00:11:55,632
- இல்ல.
- நான் அழுதேன்.

105
00:11:55,716 --> 00:11:59,386
கைப்புத்தக வரிகள் அப்படியே கண் முன்னே
சித்தரிக்கப்படும் என்று நான் நினைக்கவேயில்லை.

106
00:11:59,469 --> 00:12:05,851
ஒரு மாசமாவோ என்னவோதான் மாட்டியிருந்தாங்க,
ஆனால், அப்பப்பா. அது எப்படிப்பட்ட மாசம் தெரியுமா.

107
00:12:11,523 --> 00:12:12,524
இங்க வா.

108
00:12:14,276 --> 00:12:18,989
ஒரு ஹால் கலை பொக்கிஷம் அனைத்து
டிபார்ட்மெண்ட்களையும் ஒரு முறை வலம் வந்துவிட்டால்,

109
00:12:19,072 --> 00:12:21,283
அது மீண்டும் இங்கு தான் வந்து சேரும்.

110
00:12:21,366 --> 00:12:22,367
அடடே!

111
00:12:25,996 --> 00:12:27,497
ஃபெலிசியா எங்கே போயிட்டாங்க?

112
00:12:27,581 --> 00:12:28,582
சப்ளை செய்ய.

113
00:12:32,586 --> 00:12:33,587
இங்கே பார்.

114
00:12:39,593 --> 00:12:41,720
"உன் நரம்புகளில் பலவீனத்தை வாழ அனுமதிக்காதே.

115
00:12:42,304 --> 00:12:44,890
அன்பான ஊழியர்களே, அதை
உங்களுக்குள்ளேயே புதைத்து விடுங்கள்."

116
00:12:45,390 --> 00:12:48,435
"போராட்டத்தை எதிர்கொள்ள
இன்னும் பொருத்தமாக உங்கள்

117
00:12:48,977 --> 00:12:53,190
மரணப் படுக்கையிலிருந்து
மீண்டெழுந்து வாருங்கள்."

118
00:12:54,441 --> 00:12:55,442
சரியாகச் சொன்னாய்.

119
00:12:55,984 --> 00:12:56,985
நான்...

120
00:12:58,111 --> 00:12:59,363
உங்களிடம் இது இருக்குன்னு...

121
00:13:01,031 --> 00:13:02,282
என்னால் நம்ப முடியவில்லை.

122
00:13:17,714 --> 00:13:20,217
என்னை மன்னிக்கவும். இப்போது நேரம் என்ன?

123
00:13:20,843 --> 00:13:21,844
நான் போகணும்.

124
00:13:38,944 --> 00:13:40,320
ஹே, ஹெல்லி.

125
00:13:41,238 --> 00:13:43,323
- எனக்கு 4 சதம் கிடைத்தது.
- நல்லது!

126
00:13:43,407 --> 00:13:44,491
சந்தோஷமா இருக்கு, இல்ல?

127
00:13:46,159 --> 00:13:48,745
- அப்படிதான் தோணுது.
- அற்புதம். நீ ஒப்புக்கொண்டு பத்தி மகிழ்ச்சி.

128
00:13:52,291 --> 00:13:53,292
சிறந்த வேலை.

129
00:15:02,569 --> 00:15:04,488
உன் நிகழ்கால உருவம் உன் ஆன்ம தேடலின் கதை

130
00:15:04,571 --> 00:15:05,697
டாக்டர். ரிக்கென் லாஸ்லோ ஹாலே, பிஹெச்டி

131
00:15:21,213 --> 00:15:22,631
சிலர் இங்கு வாழக்கூடும்

132
00:15:25,968 --> 00:15:26,969
இது என்ன?

133
00:15:27,761 --> 00:15:29,179
அதை தூக்கிப் போடுறியா?

134
00:15:31,014 --> 00:15:33,225
- எதை தூக்கிப் போடணும்?
- அது ஹால் வழிகளின் வரைப்படம்.

135
00:15:33,308 --> 00:15:34,726
இல்லை, அது வரைப்படம் இல்லை.

136
00:15:34,810 --> 00:15:36,854
வரைப்படங்கள் செய்ய
நமக்கு அனுமதியில்லைன்னு நினைச்சேன்.

137
00:15:37,604 --> 00:15:39,815
நமக்கு அனுமதி கிடையாது.
அதை நான் கண்டுபிடிச்சேன் உருவாக்கலை.

138
00:15:39,898 --> 00:15:40,899
பீட்டி செய்தான்னு நினைக்கிறேன்.

139
00:15:40,983 --> 00:15:42,776
அடடா. நீ அதை அவங்ககிட்ட கொடுக்கவில்லையா?

140
00:15:44,194 --> 00:15:45,529
நீ சரியான இரட்டைவேஷக்காரன்,

141
00:15:45,612 --> 00:15:47,656
விதிமுறைகளின் படி எனக்கு நடக்கச் சொல்லி,
பாடம் எடுக்கிறாய்.

142
00:15:47,739 --> 00:15:50,450
நான் உனக்கு பாடம் எடுக்கலை. நீ மீண்டும் அந்த
பிரேக் அறைக்கு போகாம பார்த்துக்க முயல்கிறேன்.

143
00:15:50,534 --> 00:15:52,578
என்னால பீட்டி பெரிசா வரைப்படம் எல்லாம்
வரைந்தான்னு நம்ப முடியலை. நான் பார்க்கிறேன்.

144
00:15:53,370 --> 00:15:58,542
அவரிடம் ஆரோக்கியம், நிர்வாகம்,
நிரந்திரம்... நமக்கு தெரிந்த எல்லாம் இருக்கு.

145
00:15:58,625 --> 00:16:00,210
இதற்கு அவருக்கு பல வாரங்கள்
எடுத்திருக்கும்.

146
00:16:00,294 --> 00:16:01,962
நாம் ஏன் அலுவலகத்தை வரையக்கூடாது?

147
00:16:02,045 --> 00:16:05,382
அது ஒரு ஈகன் விதி.
"என் படைப்பை சிறியதாக காட்ட வேண்டாம்."

148
00:16:05,465 --> 00:16:06,466
ஏன்?

149
00:16:07,384 --> 00:16:08,886
இது என்ன எழவு இது?

150
00:16:08,969 --> 00:16:11,305
இவைகள் வீடுகள் போல இருக்கின்றன?
பார்க்க வீடுகள் இப்படி தான் இருக்கும்.

151
00:16:11,388 --> 00:16:14,933
ஆம், அது தான் சரி, ஏன்னா
இவை ஆங்காங்க நடக்கும், சலிப்புற்ற டூடில்கள்.

152
00:16:15,017 --> 00:16:17,769
சரி, ஒருவேளை அவையெல்லாம் வெளியில் இருக்கலாம்,
பீட்டி அவற்றை கண்டுபிடித்திருக்கலாம்.

153
00:16:17,853 --> 00:16:20,314
எனவே அந்த வரைப்படம் எப்படி
துண்டிக்கப்பட்ட தளத்தில் இருக்க முடியும்?

154
00:16:20,397 --> 00:16:21,899
அதுல எதுவும் விஷயம் இருக்கலாம்.
உனக்குத் தெரியாது.

155
00:16:21,982 --> 00:16:23,150
அதில் எந்த விஷயமும் இல்லை.

156
00:16:23,233 --> 00:16:25,110
ஏதோ உன்னிடம் சொல்ல
முயற்சித்திருக்கிறார்னு தெளிவாகத் தெரியுது.

157
00:16:25,194 --> 00:16:26,445
இல்ல.

158
00:16:26,945 --> 00:16:28,655
செவுத்துல போய் தலையை முட்டிக்கோ, மார்க்.

159
00:16:30,032 --> 00:16:32,201
நீ உன் நண்பனுக்கு விசுவாசமாக இருக்கிறதைவிட
இந்த நிறுவனத்துக்கு விசுவாசமாக இருக்க.

160
00:16:32,868 --> 00:16:36,705
நீ இங்கு வருவதற்கு முன், இந்த இடம்
எப்படி இருந்ததோ அதுக்கு நேர்மையாக இருக்கேன்.

161
00:16:36,788 --> 00:16:38,040
அதாவது பீட்டி இருந்தபோது
எப்படி இருந்ததோ, அதற்கு, இல்லயா?

162
00:16:38,123 --> 00:16:40,083
ஆம், ஏன்னா அப்போது ஒரு சமநிலை இருந்தது.

163
00:16:40,167 --> 00:16:44,755
டிபார்ட்மெண்டே வெடிக்காமல், நாம வேலையும்
செய்துட்டு, நல்ல ஜாலியாகவும் இருக்க முடிந்தது.

164
00:16:44,838 --> 00:16:46,298
இந்த வேலை சரியான பித்தலாட்டம்.

165
00:16:46,381 --> 00:16:49,635
இந்த வேலை முக்கியமானதும், மர்மமானதும்.

166
00:16:49,718 --> 00:16:52,721
ஒருவேளை கியர் நம்மிடம் எதிர்பார்த்தது போல,
அது ஏற்படுத்தும் நிலையற்ற தன்மையை

167
00:16:52,804 --> 00:16:55,432
நாம் கையாள அது உதவலாம்.

168
00:16:56,391 --> 00:16:59,019
அனைவரும் ஒன்று சேர்ந்து.

169
00:17:00,521 --> 00:17:04,107
என் உயிரே போகும் அபாயம் இருந்தாலும்,

170
00:17:04,733 --> 00:17:07,277
உன் குடும்பத்தின் பாகமாக
இருக்க எனக்கு விருப்பமில்லை.

171
00:17:13,242 --> 00:17:16,744
உன் உற்ற தோழன் உனக்கு இதை விட்டுட்டு
போயிருக்கான், அதைப் பத்தி உனக்கு அக்கறையில்லை.

172
00:17:34,263 --> 00:17:36,682
நீ சொல்வது சரிதான்.
எனக்கு அக்கறையில்லை.

173
00:17:36,765 --> 00:17:37,766
மார்க்...

174
00:17:41,478 --> 00:17:45,649
இப்போ பாரு. போயிடுச்சு. நன்றி, ஹெல்லி.
இப்போ நீ திரும்பவும் வேலைக்குப் போகலாம்.

175
00:17:50,904 --> 00:17:51,905
மார்க்!

176
00:17:54,533 --> 00:17:55,993
இது ஒரு அவசரநிலை.

177
00:17:58,287 --> 00:17:59,496
அட. சரி...

178
00:17:59,580 --> 00:18:00,831
நான் திரு. மில்சிக்கை அழைக்கப் போனேன்,

179
00:18:00,914 --> 00:18:03,041
ஆனால் பதவிப் படிகளை தாண்ட வேண்டான்னு
எண்ணி, அதை செய்யாம விட்டேன்.

180
00:18:03,125 --> 00:18:05,502
இன்னிக்கு
நடக்கக்கூடாதது எல்லாம் நடக்குது.

181
00:18:05,586 --> 00:18:07,087
- நீ என்ன சொல்ற?
- பரவாயில்லை.

182
00:18:07,629 --> 00:18:10,340
யாராவது இதுபோல, இதற்கு முன் பார்த்திருக்கீங்களா?

183
00:18:10,424 --> 00:18:12,092
பகுதி 31, பக்கம் 110.

184
00:18:12,176 --> 00:18:17,931
"என் வார்த்தைளில் திருப்த்தி அடையுங்கள்,
அறிவிலிகளுடன் வீண் தேடலில் இறங்க வேண்டாம்."

185
00:18:18,015 --> 00:18:19,933
கைபுத்தகத்தைத் தவிர, வேறு புத்தகங்கள் கூடாது.
எனக்குத் தெரியும்.

186
00:18:22,561 --> 00:18:23,604
என்ன செய்ற?

187
00:18:23,687 --> 00:18:25,814
ஹெல்லி அவனை செவுத்துல முட்டிக்கோன்னு
சொன்னதால, அவனுடைய மானம் போயிடுச்சு.

188
00:18:25,898 --> 00:18:29,193
- என் மானம் எல்லாம் போகலை. நான் முயற்சிக்கிறேன்...
- ச்சே.

189
00:18:29,276 --> 00:18:30,444
அன்புள்ள மார்க்,
மனதின் வரைப்படத்தை வரைபவன்

190
00:18:30,527 --> 00:18:31,862
மார்க், என்னது இது?

191
00:18:31,945 --> 00:18:34,865
ஒருவேளை இது பீட்டி உனக்கு அனுப்பியிருக்கிற
இன்னொரு தகவலோ. புரட்டு. என் பேர் இருக்கா பாரு.

192
00:18:35,657 --> 00:18:37,451
கண்டிப்பா இது விசுவாச சோதனை தான்.

193
00:18:38,368 --> 00:18:39,786
உங்களுக்கு அந்த ஸ்பைசி கேன்டி நினைவிருக்கா?

194
00:18:39,870 --> 00:18:41,330
நான் இதை மில்சிக்கிடம் கொடுக்கப் போகிறேன்.

195
00:18:41,413 --> 00:18:44,291
என்ன? ஏன்? இது பொக்கிஷம்.
உன பேரு எழுதியிருக்கும் பொக்கிஷம்.

196
00:18:44,374 --> 00:18:45,501
மிகச் சிறந்த முடிவு, மார்க்.

197
00:18:45,584 --> 00:18:48,629
இது ஒரு தகாதவங்கள போற்றும் புத்தகம்,
அதனால அதை அவனிடம் உடனே சொல்லணும்.

198
00:19:15,072 --> 00:19:17,449
எனவே அவங்க இடம் எப்படி இருக்கும்?
உறைந்துகிடக்கும் குகைகளுக்குள் இருப்பது போலா?

199
00:19:17,533 --> 00:19:20,827
இல்ல, அது நல்லாயிருக்கு. பர்ட் உண்மையிலேயே
ஒரு நல்ல வரவேற்கும் சூழலை எற்படுத்தியிருக்கார்.

200
00:19:20,911 --> 00:19:23,497
அவர் லுமனின் நோக்கத்தை புரிந்துள்ளார்.

201
00:19:25,040 --> 00:19:26,041
ஹெல்லி?

202
00:19:28,377 --> 00:19:29,419
மன்னிக்கணும்! ஹெல்லி!

203
00:19:29,503 --> 00:19:30,629
கடவுளே, ஹெல்லி!

204
00:19:30,712 --> 00:19:31,964
எனக்கு ஒரு கேமரா தேவை!

205
00:19:32,047 --> 00:19:35,384
- என்னை மன்னித்துவிடுங்க, மிஸ். கோபெல். நான்...
- என்ன நடக்குது இங்க?

206
00:19:35,467 --> 00:19:38,303
என்ன நடக்குதுன்னா,
நீங்க எனக்கு ஒரு வீடியோ கேமராவைத் தர்றீங்க

207
00:19:38,387 --> 00:19:43,100
ஏன்னா நான் ராஜினாமாவை என் வெளிப்புரத்துக்கு
இப்போதே பதிவு செய்து அனுப்பணும்,

208
00:19:43,183 --> 00:19:46,478
இல்லைன்னா நீங்க அவளுடைய நான்கு விரல்களை
அவள் இழந்தாள்னு நீங்க விளக்க அவசியம் வரும்.

209
00:19:46,562 --> 00:19:49,523
சரி. அனுமதிக்கிறேன்...

210
00:19:50,107 --> 00:19:51,942
கோபெல் தானே உங்க பேரு, இல்லயா?

211
00:19:52,526 --> 00:19:53,527
ஆம்.

212
00:19:54,528 --> 00:19:58,574
கோபெல், என்னைப் பார்த்தா நான் இங்க
இப்போ வளைய வரும் கிறுக்கைப் போல தோணுதா?

213
00:19:58,657 --> 00:20:01,702
இல்ல. இல்லை, அப்படியில்லை.

214
00:20:01,785 --> 00:20:02,786
ஹெல்லி!

215
00:20:04,204 --> 00:20:08,709
ஹை, மார்க்.
உன் பயிற்சி மாணவிடம் சற்று பேசுகிறேன்.

216
00:20:11,795 --> 00:20:13,422
திரு. மில்சிக்,

217
00:20:14,339 --> 00:20:16,758
அந்த வீடியோ கேமராவை
கொஞ்சம் கொண்டு வர முடியுமா?

218
00:20:42,826 --> 00:20:44,119
ஹே.

219
00:21:16,818 --> 00:21:21,240
சரி, பாஸ். நரகத்துக்குப் போன்னு உன்னை
சொல்லும் கட்டம் வந்துடுச்சுன்னு நினைக்கிறேன்.

220
00:21:23,075 --> 00:21:24,493
ஆனால் நீதான் ஏற்கனவே இங்கு வந்துட்டயே.

221
00:21:33,168 --> 00:21:34,461
எனக்கு எந்த வருத்தமும் இல்லை.

222
00:21:56,650 --> 00:21:57,943
ஹெல்லி,

223
00:21:58,944 --> 00:22:01,822
நான் ராஜினாமா செய்யக்
கோரும் உன் காணோளியை நான் பார்த்தேன்.

224
00:22:02,406 --> 00:22:06,034
இதுக்கு முன் நீ வைத்த கோரிக்கையும்
எனக்கு கிடைத்தது, அதற்கும் பதிலளித்தேன்.

225
00:22:06,577 --> 00:22:08,120
நான் நினைத்தேன், அதுவே இந்த பிரச்சினைக்கு
தீர்வாகிவிடும் என,

226
00:22:08,203 --> 00:22:13,417
ஆனால், இப்போது மிஸ். கோபெல், நீ உன் விரல்களை
வெட்டப் போவதாக பயமுறுத்தினாய் என்றார்?

227
00:22:17,921 --> 00:22:22,676
உனக்கு கிடைத்த வாழ்க்கையில் நீ
சந்தோஷமாக இல்லை என்று எனக்குப் புரிகிறது.

228
00:22:24,011 --> 00:22:27,014
ஆனால் என்ன தெரியுமா?
காலப்போக்கில் நாம் அனைவருமே உண்மையை ஏற்கணும்.

229
00:22:28,056 --> 00:22:31,059
எனவே, இது இதைக் கேள்.

230
00:22:33,520 --> 00:22:35,272
நான் ஒரு நபர்.

231
00:22:36,982 --> 00:22:38,358
நீ இல்லை.

232
00:22:40,068 --> 00:22:41,862
தீர்மானங்களை எடுப்பது நான்.

233
00:22:43,280 --> 00:22:44,573
நீ இல்லை.

234
00:22:45,657 --> 00:22:49,494
ஒருவேளை நீ என் விரல்களுக்கு
எதுவும் தீங்கு செய்தால்,

235
00:22:50,078 --> 00:22:53,540
நீ அதை நினைத்து நொந்து வேதனைப்படும் அளவிற்கு
நீண்ட காலம் உன்னை உயிருடன் வைத்திருப்பேன்.

236
00:22:56,251 --> 00:22:58,462
உன் ராஜினாமா கோரிக்கை
நிராகரிக்கப்பட்டது.

237
00:22:59,671 --> 00:23:00,672
மூடிவிடுங்கள்.

238
00:23:17,689 --> 00:23:21,527
"இயற்கையால் சூழப்பட்டிருக்கும் ஒரு
உலகத்திற்கு உங்கள் குழந்தையை வரவேற்க வேண்டும்."

239
00:23:22,236 --> 00:23:23,529
இல்லை, நன்றி...

240
00:23:25,072 --> 00:23:29,618
"இப்பக்கத்தின் கீழே பார்த்து, எங்கள் நாட்டுப்புற
பிரசவ விடுதிகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்."

241
00:23:31,245 --> 00:23:32,287
எனக்குத் தெரியாது. நான் வந்து...

242
00:23:33,080 --> 00:23:38,418
இதைப் பார்த்தால் மோசமான ஒரு ஸ்கீ விடுதியைப் போல
இருக்கு, பிரசவ விடுதியைப் போலயில்லை, ஆனால்...

243
00:23:38,961 --> 00:23:40,003
சரி, நிச்சயமாக, நல்லது.

244
00:23:40,087 --> 00:23:42,297
ஆனால் அது மிக அற்புதமாக இருக்கப் போகிறது.
உங்களுக்கு மிகவும் பிடித்துவிடும்.

245
00:23:42,381 --> 00:23:46,176
இதில் ரிக்கெனின் யோசனை எத்தனை சதம்,
300ஆ அல்லது 400 சதமா?

246
00:23:46,260 --> 00:23:47,469
சும்மா...

247
00:23:47,553 --> 00:23:50,556
உன் சக்தியை எல்லாம் சேர்த்து வைத்துக்கொள்
இல்லைன்னா மாமாங்கிற பதவி உனக்கு கிடைக்காது.

248
00:23:50,639 --> 00:23:54,643
என்ன தெரியுமா? இன்னும் கொஞ்சம் சக்தி இருந்தா
நல்லாயிருக்கும். எனக்கு சற்று ஆயாசமா இருக்கு.

249
00:23:54,726 --> 00:23:56,937
- நாளைக்கு அழைக்கட்டுமா?
- சரி, பை.

250
00:24:09,324 --> 00:24:10,576
தி கியர் குரானிகல்
வட்டார தகவல் எச்சரிக்கை

251
00:24:10,659 --> 00:24:16,373
துண்டிக்கப்பட்ட லுமன் ஊழியர் ஒரு
"அறியப்படாத நோய்" காரணமாக உயிர் இழந்தார்

252
00:24:56,496 --> 00:24:58,123
முக்கிய குழுவிடமிருந்து எதுவும் தகவல் உண்டா?

253
00:25:01,335 --> 00:25:02,669
இல்ல.

254
00:25:03,754 --> 00:25:06,465
கில்மரின் சாவுக்கு நீங்க இல்லை,
கண்டிப்பாக நானும் காரணமில்லை.

255
00:25:06,548 --> 00:25:07,841
அவங்க புரிஞ்சுப்பாங்க.

256
00:25:12,846 --> 00:25:14,431
அது உங்க தவறில்லை, ஹார்மோனி.

257
00:25:17,267 --> 00:25:20,604
உங்களுக்கு ஒரு அணைப்பு தேவைன்னா,
நரகத்துக்குப் போய் உங்க தாயிடம் பெறலாம்.

258
00:25:20,687 --> 00:25:21,772
கடவுளே.

259
00:25:21,855 --> 00:25:23,023
பீட்டி மறுபிணைப்பு செய்ததிலிருந்து...

260
00:25:23,106 --> 00:25:25,108
முக்கிய குழு, மறுபிணைப்பை
இதுவரையில் ஏற்றுக் கொள்ளவேயில்லை.

261
00:25:25,192 --> 00:25:27,945
அவனுடைய சிப்பை நாம் கைப்பற்றணும்.

262
00:25:30,739 --> 00:25:33,784
ஞாயிற்று கிழமை, ஈமச்சடங்கிற்கு பின்

263
00:25:33,867 --> 00:25:35,953
அவனுடைய சடலத்தை எரித்து சாம்பலாக்கப் போறாங்க.

264
00:25:36,745 --> 00:25:37,829
நீங்க தெரிந்து கொள்வதாற்காக சொன்னேன்.

265
00:25:55,055 --> 00:25:56,056
நோக்கம்.

266
00:25:57,140 --> 00:25:58,225
துடிப்பு.

267
00:25:59,309 --> 00:26:00,310
அறிவு.

268
00:26:01,562 --> 00:26:02,771
உற்சாகம்.

269
00:26:03,814 --> 00:26:04,982
வினயம்.

270
00:26:05,774 --> 00:26:07,401
கொடை.

271
00:26:07,985 --> 00:26:09,778
திறமை.

272
00:26:11,905 --> 00:26:13,115
கண்ணியம்.

273
00:26:14,324 --> 00:26:15,909
சாதுர்யம்.

274
00:26:18,203 --> 00:26:19,580
சாதுர்யம்.

275
00:26:51,778 --> 00:26:52,905
மார்க்.

276
00:26:52,988 --> 00:26:54,198
திருமதி. செல்விக்?

277
00:26:54,281 --> 00:26:55,824
- நீங்க இங்கே என்ன செய்யறீங்க?
- என்...

278
00:26:57,117 --> 00:27:02,623
நான்... நான்... செய்தியறிக்கையில்
அவர் லுமனில் வேலை செய்தார்னு இருந்தது,

279
00:27:02,706 --> 00:27:06,376
எனவே அவரை தெரிந்திருக்கலாம்னு நான்... நான்
நினைத்தேன். நீங்க இங்க என்ன செய்யறீங்க?

280
00:27:06,460 --> 00:27:10,380
ஓ, அவர் என் கடைக்கு எப்போதும் வருவார்.
என் செம்பருத்தி ரொட்டியை அவருக்குப் பிடிக்கும்.

281
00:27:10,464 --> 00:27:14,176
அடடா, கடவுளே. எவ்வளவு சின்ன உலகம்.

282
00:27:14,259 --> 00:27:16,220
ச்சே, பாவம், அப்பாவி மனிதர்.

283
00:27:17,012 --> 00:27:19,681
சரி, நல்ல விஷயம் என்னன்னா,
நாம இருவரும் இதனால சேர்ந்தோம்.

284
00:27:23,101 --> 00:27:24,436
அட, அங்கே இருக்கிறார்.

285
00:27:24,520 --> 00:27:26,522
ஒருவேளை நீங்க உள்ள போய் உங்க
மரியாதைகளை செலுத்த விரும்பினால்,

286
00:27:26,605 --> 00:27:27,856
நான் இங்கேயே உங்களுக்காக காத்திருக்கிறேன்.

287
00:27:27,940 --> 00:27:30,984
நான் கழிப்பறை பக்கம் போயிட்டு வரேன்,
ஆனால், சீக்கிரம் உங்களை பார்க்கிறேன்.

288
00:27:32,027 --> 00:27:34,154
- விரைவில் பிரார்த்தனை ஆரம்பிக்கிறது.
- ஆமாம்.

289
00:27:46,625 --> 00:27:48,335
விஸ்கி. ராக்ஸ்.

290
00:27:48,418 --> 00:27:50,212
வைன் போதும், சார்.

291
00:27:50,295 --> 00:27:52,130
சரி. சிகப்பு, தயவுசெய்து.

292
00:28:26,665 --> 00:28:28,667
ஹலோ. நீங்க ஒரு நண்பரா?

293
00:28:31,587 --> 00:28:32,880
அவர் என் தந்தை.

294
00:28:33,589 --> 00:28:36,133
அடடா, என் ஆழ்ந்த வருத்தங்கள்.

295
00:28:41,054 --> 00:28:43,390
நான் நினைக்கிறேன் நீங்கள் நெருக்கமாக
இருந்திருக்கணும்னு, இல்லையா?

296
00:28:56,570 --> 00:28:57,696
வெள்ளை, தயவுசெய்து.

297
00:29:04,870 --> 00:29:06,997
மன்னிக்கணும், உங்களைத் தெரியாது.
நான் நீனா.

298
00:29:07,748 --> 00:29:08,749
ஓ, மார்க் ஸ்கௌட்.

299
00:29:10,125 --> 00:29:11,710
நான் பீட்டரின் முன்னாள் மனைவி.

300
00:29:13,170 --> 00:29:15,631
ஓ, ஆம், நிச்சயமா. வருந்துகிறேன்.

301
00:29:20,552 --> 00:29:22,095
நீங்க லுமனில் வேலை செய்யறீங்க.

302
00:29:31,939 --> 00:29:33,941
எனவே உங்களுக்கு இவரை தெரியவே தெரியாது.

303
00:29:36,860 --> 00:29:38,820
- அவரைத் தெரியும்னு நினைத்தேன்...
- ஹே, அம்மா.

304
00:29:38,904 --> 00:29:40,030
அவங்க ஆரம்பிக்க விரும்புறாங்க.

305
00:29:40,614 --> 00:29:41,615
சரி, குழந்தை.

306
00:29:42,241 --> 00:29:45,077
ஹை. நீ... நீ தான் ஜூனா?

307
00:29:46,245 --> 00:29:47,538
ஆமாம்.

308
00:29:48,205 --> 00:29:49,331
உன்னை சந்திச்சதுல சந்தோஷம்.

309
00:30:00,801 --> 00:30:02,386
பீட்டர் கில்மரின்
வாழ்க்கையை கொண்டாடுகிறோம்

310
00:30:02,469 --> 00:30:03,637
அமைதியான உள்ளார்ந்த பார்வை நேரம்

311
00:30:03,720 --> 00:30:04,721
நினைவுகளின் காணோளி

312
00:30:17,651 --> 00:30:19,027
எனவே உங்களுக்கு என் அப்பாவை தெரியுமா?

313
00:30:21,738 --> 00:30:22,739
ஆமாம்.

314
00:30:26,493 --> 00:30:27,494
வேலையில்.

315
00:30:28,996 --> 00:30:30,122
நீங்களும் அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவரா.

316
00:30:31,665 --> 00:30:32,958
பாதி நேரம் உங்கள் மூளையின்
மூடிவைத்து விடுவது தான்

317
00:30:33,041 --> 00:30:35,335
உங்கள் வாழ்க்கையின் இந்த அவலங்களுக்கு தீர்வு
காண ஒரே வழின்னு நீங்க நினைப்பது

318
00:30:35,419 --> 00:30:37,671
தவறாக இருக்கலாம்னு,
நீங்க எப்போவாவது நினைத்ததுண்டா?

319
00:30:41,133 --> 00:30:42,843
என்னால் உறுதியா சொல்ல முடியலை.

320
00:30:46,680 --> 00:30:47,764
என்னை மன்னிக்கணும்.

321
00:30:48,307 --> 00:30:50,184
நாங்க உங்களுக்காக
ஒரு நிகழ்ச்சியை வழங்கப் போகிறோம்.

322
00:30:52,477 --> 00:30:54,313
நீ இங்க இருப்பதுல
எனக்கு ரொம்ப மகிழ்ச்சி, கண்ணே.

323
00:30:54,396 --> 00:30:56,940
நாங்க இசைக்கப் போகிறோம் ஒரு... நாங்க இசைக்...
நாங்க உங்களை உருக வைக்கப் போகிறோம்.

324
00:30:57,024 --> 00:30:59,276
- நாங்க ராக் இசை இசைக்கப் போகிறோம்.
- நாங்க கொஞ்சம் ராக் அண்ட் ரோல் இசைக்கப் போறோம்.

325
00:30:59,860 --> 00:31:01,486
ராக் நிகழ்ச்சி நேரம்!

326
00:31:06,992 --> 00:31:09,077
குட்டியே, பிரார்த்தனை செய்

327
00:31:09,161 --> 00:31:10,871
மறக்காதே, மகனே

328
00:31:10,954 --> 00:31:13,165
அதில் அனைவரையும் சேர்க்க

329
00:31:15,042 --> 00:31:17,294
உன்னுள் அவர்களை அருமையாக
அணைத்துக் கொள்ள

330
00:31:17,377 --> 00:31:18,921
பாவத்திலிருந்து உன்னை அண்டாமல் இருக்க

331
00:31:19,004 --> 00:31:20,589
அந்த மண் வாருபவன் வருகிறவரையில்

332
00:31:23,175 --> 00:31:26,386
ஒரு கண்ணை விழித்து வைத்தே உறங்கு

333
00:31:27,221 --> 00:31:30,098
தலையணையை கெட்டியாக பிடித்துக்கொள்

334
00:31:30,182 --> 00:31:32,768
இலகுவாக பிரிந்து செல்

335
00:31:34,019 --> 00:31:37,981
இருள் வரும்

336
00:31:38,065 --> 00:31:40,692
மண் மூடிவிடும்

337
00:31:41,693 --> 00:31:44,363
மீண்டும் வர முடியாத உலகத்திற்கு பயணிப்போம்

338
00:31:51,787 --> 00:31:53,914
ஏதோ தவறாகியிருக்கு, ஒளியை மறைத்து விடு

339
00:31:53,997 --> 00:31:57,835
இன்றிரவு கனமான எண்ணங்கள் தான்
அவை ஸ்னோ வைட்டைப் போல மகிழ்சியானவை இல்லை

340
00:31:59,711 --> 00:32:01,672
போரைப் பற்றி கனவுகள்,
பித்தலாட்டக்காரர்களைப் பற்றி கனவுகள்

341
00:32:01,755 --> 00:32:03,632
டிராகனின் நெருப்பைப் பற்றிய கனவுகள்

342
00:32:03,715 --> 00:32:05,717
மற்றும் கடித்துவிடும்
கொடுமைகளைப் பற்றி கனவுகள்

343
00:32:08,011 --> 00:32:10,973
ஒரு கண்ணை விழித்து வைத்தே உறங்கு

344
00:32:12,140 --> 00:32:14,852
தலையணையை கெட்டியாக பிடித்துக்கொள்

345
00:32:14,935 --> 00:32:17,354
இலகுவாக பிரிந்து செல்

346
00:32:18,480 --> 00:32:22,609
இருள் வரும்

347
00:32:22,693 --> 00:32:25,237
என் கையைப் பிடித்துக் கொள்

348
00:32:26,488 --> 00:32:28,282
மீண்டும் வர முடியாத உலகத்திற்கு பயணிப்போம்

349
00:32:30,784 --> 00:32:32,411
என் ஆன்மாவை வைத்துக்கொள்ள
இறைவனிடம் கெஞ்சுகிறேன்

350
00:32:32,494 --> 00:32:34,872
என் ஆன்மாவை வைத்துக்கொள்ள
இறைவனிடம் கெஞ்சுகிறேன்

351
00:32:34,955 --> 00:32:36,623
நான் விழிக்கும் முன்பே இறந்து போனால்

352
00:32:36,707 --> 00:32:38,125
நான் விழிக்கும் முன்பே இறந்து போனால்

353
00:32:38,709 --> 00:32:40,502
என் ஆன்மாவை எடுத்துக்கொள்ள
இறைவனிடம் கெஞ்சுகிறேன்

354
00:32:40,586 --> 00:32:42,713
என் ஆன்மாவை எடுத்துக்கொள்ள
இறைவனிடம் கெஞ்சுகிறேன்

355
00:32:42,796 --> 00:32:46,133
ஷ்ஷ், குட்டி குழந்தாய், ஒன்றும் பேசாதே

356
00:32:46,717 --> 00:32:50,220
நீ கேட்ட அந்த சத்தத்தையும் பொருட்படுத்தாதே

357
00:32:50,804 --> 00:32:54,391
அது உன் மஞ்சத்தின் கீழ் இருக்கும் மிருகம் தான்

358
00:32:54,474 --> 00:32:58,145
- உன் தலையின் ஒரு அறைக்குள்
- உன் தலையில்

359
00:32:58,228 --> 00:33:00,689
இலகுவாக பிரிந்து செல்

360
00:33:02,149 --> 00:33:05,777
இருள் வரும்

361
00:33:05,861 --> 00:33:08,864
மண் மூடிவிடும்

362
00:33:10,157 --> 00:33:11,867
மீண்டும் வர முடியாத உலகத்திற்கு பயணிப்போம்

363
00:33:22,419 --> 00:33:23,629
இல்லை!

364
00:33:25,881 --> 00:33:26,840
இல்லை!

365
00:33:28,967 --> 00:33:32,346
நீங்க... நீங்க பயங்கரமாக வெளியேறி, புகை
வெளியே வந்தால், என்னவாகும்?

366
00:33:32,429 --> 00:33:33,430
உங்க செவிகளின் வழியாக.

367
00:33:53,367 --> 00:33:55,869
மார்க், அன்பே, நீங்க நலமாக இருக்கீங்களா?
நான் மிகவும் வருந்துகிறேன்.

368
00:33:55,953 --> 00:33:57,829
- ஆம்.
- இங்கே சிஸ்டிடிஸ் இருக்குன்னு...

369
00:33:57,913 --> 00:33:59,748
நான் செய்தது தவறு. நான் போகணும்.

370
00:33:59,831 --> 00:34:01,917
- சரி, நான் உன்னுடன் வருகிறேன்.
- வேண்டாம், அதற்கு அவசியம் இருக்காது.

371
00:34:02,000 --> 00:34:04,044
- இல்லை, மரியாதை செலுத்திவிட்டேன். போகலாம்.
- பிரார்த்திப்போம்.

372
00:34:04,127 --> 00:34:05,629
பரலோகத்தில் இருக்கும் பிதாவே...

373
00:34:07,381 --> 00:34:10,467
எனவே, இரங்கலுக்கு வந்தது வருத்தமாக இருக்கா...

374
00:34:12,844 --> 00:34:14,679
ஆமாம், கிட்டதட்ட அப்படிதான்.

375
00:34:14,763 --> 00:34:16,264
அதைப் பத்தி பேசி தீர்கணும்னா...

376
00:34:16,348 --> 00:34:20,226
ஓ, இல்ல. நன்றி. பரவாயில்லை...

377
00:34:22,062 --> 00:34:25,148
ஆனால் இன்று என்னுடைய இரங்கல்
நண்பராக இருந்ததற்கு நன்றி.

378
00:34:26,733 --> 00:34:27,818
குட் நைட்.

379
00:34:28,360 --> 00:34:29,360
குட் நைட்

380
00:37:27,456 --> 00:37:28,665
அதுதான் பீட்டியா?

381
00:37:30,918 --> 00:37:32,669
அது தான் பீட்டி.

382
00:37:34,796 --> 00:37:35,797
எப்படி நீங்கள்...

383
00:37:35,881 --> 00:37:39,134
அதை மேலே டயக்னாஸ்டிக்ஸ்சுக்கு தயவுசெய்து
கொண்டு போக முடியுமா?

384
00:37:46,058 --> 00:37:47,100
யாரு?

385
00:37:53,065 --> 00:37:54,942
என்னை வரச் சொன்னீர்களா, மிஸ். கோபெல்?

386
00:37:55,526 --> 00:38:01,281
மிஸ். கேஸி, மார்க் எஸுக்கு ஒரு சிறப்பு ஆரோக்கிய
நேரம் நடத்த வேண்டும் என்பது என் விருப்பம்.

387
00:38:01,949 --> 00:38:02,950
மார்க் எஸ்?

388
00:38:03,825 --> 00:38:05,244
என்ன பிரச்சினை?

389
00:38:08,622 --> 00:38:11,458
அவருக்கு அது தேவை. என்னை நம்புங்கள்.

390
00:38:26,139 --> 00:38:29,184
"கியர் தன்னுடைய நீரை பருக உங்களை வரவேற்கிறார்."

391
00:38:30,310 --> 00:38:32,563
- இர்விங்.
- நீங்க இங்க இருப்பீங்கன்னு ஃபெலிசியா சொன்னார்.

392
00:38:35,649 --> 00:38:39,611
அது எனக்குப் பிடிக்கவில்லைன்னு சொன்னால்
மிகவும் மோசமாக இருக்குமா?

393
00:38:40,112 --> 00:38:41,113
இல்லை.

394
00:38:41,864 --> 00:38:44,491
உண்மையா, அது எனக்கு சற்று ஆட்டம் தருது.

395
00:38:46,827 --> 00:38:49,830
எவ்வள்வு அழகான வெளிச் சூழல், ஆனால்
எனக்குத் தோணுது...

396
00:38:49,913 --> 00:38:51,123
அவர் கால் தவறி விழலாம்.

397
00:38:54,960 --> 00:38:59,756
எம்டிஆரிலிருந்கு ஒருவர் வந்து எங்களைப்
பார்த்தது எங்களுக்கு உற்சாகமாக இருந்தது,

398
00:38:59,840 --> 00:39:02,426
நீங்க காட்டயதைப் போல ஆர்வமும், எனவே...

399
00:39:03,552 --> 00:39:04,803
சங்கடப்படும்படி நான் எதுவும் செய்திருந்தால்...

400
00:39:04,887 --> 00:39:05,888
நீங்க அப்படியெல்லாம் எதுவும் இல்லை.

401
00:39:07,181 --> 00:39:09,349
நீங்க செய்தீங்களா?

402
00:39:10,350 --> 00:39:11,643
உங்களுக்கு சங்கடமாக இருக்கா?

403
00:39:14,479 --> 00:39:15,480
இல்ல.

404
00:39:17,816 --> 00:39:18,817
நல்லது.

405
00:39:21,528 --> 00:39:23,197
எனக்கு போக இன்னும் நான்கு இடங்கள் உள்ளன.

406
00:39:26,825 --> 00:39:29,077
எம்டிஆர்-க்கு என்னுடன் வர முடியுமா?

407
00:39:31,788 --> 00:39:32,873
எம்டிஆர் வரலாமே.

408
00:39:35,042 --> 00:39:36,043
உங்களுக்கு ஏதோ ஆகிவிட்டது.

409
00:39:36,627 --> 00:39:38,378
ஒரு சிறிய தூக்கம் போட்டால் நன்றாக இருக்கும்.

410
00:39:39,129 --> 00:39:41,590
நான் அங்கு மேலே 15 மணி நேரங்கள்
இரவு தூங்குகிறேன் என நினைக்கிறேன்.

411
00:39:41,673 --> 00:39:42,925
அது குணத்தின் தவறு.

412
00:39:43,008 --> 00:39:45,219
நீங்கள் பார்ட்டியை விரும்புபவர் என்பது
தான் அதன் அர்த்தம், டிஸ்கோ ராஜா.

413
00:39:45,302 --> 00:39:47,554
நான் தூங்க முடியாது, பர்ட்.

414
00:39:47,638 --> 00:39:50,015
- யாருக்கு அக்கறை?
- கைப்புத்தகம் அக்கறைக் கொள்கிறது.

415
00:39:50,098 --> 00:39:53,936
"தூக்கத்திற்கென எந்த பணியிடமும்
மாற்றியமைக்கப்படக் கூடாது."

416
00:39:54,019 --> 00:39:58,482
எனக்கு கைப்புத்தகம் மனப்பாடமாகத் தெரியும், அப்பா.
நான் முதல் பதிவிலேயே படிப்பவன்.

417
00:39:59,942 --> 00:40:06,615
கியரின் சொந்த வாக்கு: "உங்களைப் போல் கடமை
ஆற்றுபவர்களுக்கு என்றும் நான் காதில் உரைப்பேன்.

418
00:40:06,698 --> 00:40:10,536
உங்களின் மிகச் சிறந்த எண்ணங்கள் மற்றும்
ஏமாற்றங்களில் என் குரல் ஒலிக்கும்.

419
00:40:10,619 --> 00:40:13,038
நீங்கள் தான் என் குரல்,

420
00:40:13,622 --> 00:40:17,125
உங்கள் மூலம், நான் தொடர்ந்து ரகசியமாக உரைப்பேன்

421
00:40:17,209 --> 00:40:19,837
என் காலமாகி பத்து நூற்றாண்டுகள் கழிந்த பின்னும்.

422
00:40:22,714 --> 00:40:24,299
எனக்குப் புரியவில்லை.

423
00:40:24,383 --> 00:40:28,846
அவர் இந்த பெயின்டிங்குகள் மூலமாகவோ
அல்லது கைப்புத்தகம் மூலமாகவோ நம்மோடு பேசவில்லை.

424
00:40:29,638 --> 00:40:31,265
மற்ற வழிகளை கண்டுபிடிப்பார்.

425
00:40:33,016 --> 00:40:34,393
அத்தியாயம் 9
இறுதியாக ஒலிக்கும் மணி

426
00:40:34,476 --> 00:40:36,270
"உனக்கு இந்த வேலைத்
தேவை என நினைக்கிறாய்.

427
00:40:37,938 --> 00:40:40,315
ஆனால் நான் வெளிநாடுகளில்
ஒரு நாடோடியாக வசித்திருக்கிறேன்

428
00:40:40,399 --> 00:40:45,195
எனக்கென்று பணம் செலவாக்காமல்,
மற்றவர்களின் கொடையை நம்பி வாழ்ந்திருக்கிறேன்.

429
00:40:45,779 --> 00:40:49,700
அதில் பலரும் தாங்களே யாசகம் செய்பவர்கள் தான்,
ஆனாலும் சந்தோஷமாக இருந்தார்கள்.

430
00:40:50,450 --> 00:40:53,370
எனவே, அந்த கோடையில் நானும் அப்படி இருந்தேன்.

431
00:40:55,330 --> 00:40:57,666
உன் வேலைக்கு நீ தேவை,

432
00:40:59,042 --> 00:41:01,211
உனக்கு அது தேவையில்லை."

433
00:41:06,967 --> 00:41:09,303
பாதுகாப்பாக செல்லுங்கள், எம்டிஆர்.

434
00:41:10,262 --> 00:41:12,472
நன்றி, ஓ&டி.

435
00:41:30,824 --> 00:41:32,034
மார்க்?

436
00:41:33,702 --> 00:41:34,953
நான் போகப் போகிறேன்.

437
00:41:35,037 --> 00:41:36,205
போயேன்.

438
00:41:36,288 --> 00:41:39,416
நான் மணியடிக்கும் வரை வேலை செய்வேன்.
அதனால் இன்று இரவு இதை முடிக்கலாம்.

439
00:41:40,751 --> 00:41:41,835
முடித்தால் நல்லது.

440
00:41:45,172 --> 00:41:46,173
விரைவில் காணலாம்.

441
00:42:43,438 --> 00:42:45,899
உன் நிகழ்கால உருவம்

442
00:42:48,485 --> 00:42:49,486
எனக்குத் தெரியும்.

443
00:42:55,409 --> 00:43:00,497
சில சமயம், தங்கள் உணர்ச்சிகளுக்கு களிமண்ணால்
உருவம் கொடுக்கும் படி சிலரிடம் கூறுவேன்.

444
00:43:01,415 --> 00:43:03,417
உங்களுக்கு அப்படிச் செய்ய விருப்பமா?

445
00:43:07,796 --> 00:43:08,797
சரி.

446
00:43:40,245 --> 00:43:45,751
"'விதி'. ஒரு அக்ராஸ்டிக் கவிதை அனுபவம்,
எழுதியவர், ரிக்கென் ஹேல்."

447
00:43:45,834 --> 00:43:47,920
அத்தியாயம் 5

448
00:44:07,147 --> 00:44:11,485
"டி என்பது டிரீமிங், அதாவது கனவுலகம்,
அது தான் அனைத்துக்கும் ஆரம்பம்."

449
00:44:17,032 --> 00:44:19,159
"ஈ என்பது எனர்ஜி அதாவது சக்தியை குறிக்கும்...

450
00:44:21,161 --> 00:44:23,080
தடயங்களை அகற்றுவது.

451
00:44:24,373 --> 00:44:26,625
எஸ் ென்பது ஸ்டூவர்டுஷிப் அதாவது, வழிகாட்டுதல்,

452
00:44:28,085 --> 00:44:30,295
வீட்டிற்கும் இந்த பூமிக்கும்."

453
00:44:34,132 --> 00:44:38,345
"டி எனப்து டெரர், அதாவது பயங்கரம்,
அது இன்னும் விலையை அதிகரிக்கிறது.

454
00:44:42,266 --> 00:44:44,184
ஐ என்பது கண்கள்,

455
00:44:45,644 --> 00:44:47,646
நம்மை அன்புடன் பார்க்கும் விழிகள்.

456
00:44:50,148 --> 00:44:52,693
என் என்பது நியூநெஸ், அதாவது புதுமை,

457
00:44:53,652 --> 00:44:55,946
வந்து மேற்கூறியதை முறிக்கும் வரை.

458
00:44:58,532 --> 00:44:59,533
மற்றும் ஒய்.

459
00:45:00,534 --> 00:45:03,245
அதைப் பத்தி நாம் இப்போது யோசிக்க வேண்டாம்.

460
00:45:04,496 --> 00:45:09,793
விதிக்கு, நண்பர்கள், இன்னும் நல்ல இடத்திற்கு
கொண்டு செல்வார்கள்."

461
00:45:11,962 --> 00:45:13,755
ஹே. எப்படியிருக்கிறாய்?

462
00:45:13,839 --> 00:45:15,132
நன்றாக இருக்கிறேன்.

463
00:45:15,215 --> 00:45:17,384
அப்படியா? இங்கு நடந்து கொள்வதை கொஞ்சம்
புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளாய் போலும்.

464
00:45:20,137 --> 00:45:21,346
நல்லது.

465
00:46:28,163 --> 00:46:30,165
தமிழாக்கம் அகிலா குமார்

