1
00:00:51,093 --> 00:00:52,094
கிரேனர்.

2
00:00:52,177 --> 00:00:54,596
நீங்க கேட்டுகிட்டது போல நாங்க
கில்மரின் மூளையிலிருந்த டாட்டாவை பார்த்தோம்.

3
00:00:54,680 --> 00:00:57,266
அவங்க சிப்பை ஹேக் செய்ய பயன்படுத்திய
கான்சோலின் முத்திரையைக் கண்டுபிடித்தோம்.

4
00:00:57,349 --> 00:00:59,268
யாருடைய முத்திரை?

5
00:00:59,351 --> 00:01:00,519
நம்முடையது.

6
00:01:00,602 --> 00:01:02,229
அது ரெகாபியை சுட்டிக்காட்டுதுன்னு நினைக்கிறேன்.

7
00:01:02,312 --> 00:01:04,772
- ரெகாபி.
- ஆமாம்.

8
00:01:04,857 --> 00:01:07,276
அவள் தான் மறுபிணைப்பை கண்டுபிடித்தாள்.
நான் அவளை கண்டுபிடிக்கிறேன்.

9
00:01:32,009 --> 00:01:35,220
"என் நான்கு
குணங்களையும் மிதமாக ஆக்குங்கள்…"

10
00:01:35,304 --> 00:01:36,930
மிர்ட்டில் ஈகன்
பெண்களுக்கான பள்ளி

11
00:01:37,014 --> 00:01:39,349
"…அதனால் நான் உங்களுக்கு
இன்னும் அதிகமாக சேவை செய்யலாம்."

12
00:01:39,433 --> 00:01:41,685
லுமன் இன்டஸ்டிரீஸ் - உயர் தர
உட்பாயும் மருத்துவ செயல்முறைகள்

13
00:01:41,768 --> 00:01:44,021
"என்னுள் ஒன்பது ஆதாரங்களை வைத்துவிடுங்கள்…"

14
00:01:44,104 --> 00:01:46,523
புரோபிடி - நம் குறையுள்ள தன்மையை குறையற்றதாக
ஆக்கும் முயற்சி ஒருபோதும் முன்னேறாது

15
00:01:46,607 --> 00:01:48,317
"…அதனால் தங்களின் திவ்விய
ஸ்பரிசத்தை நான் உணரும் வகையில்."

16
00:01:48,400 --> 00:01:49,401
கோபெல் சார்லெட்
3-17-44

17
00:03:48,353 --> 00:03:51,732
மிஸ்டு கால் லாக்
தடை செய்யப்பட்டுள்ளது - தடை செய்யப்பட்டுள்ளது

18
00:04:54,837 --> 00:04:56,171
நான் உள்ள வரலாமா?

19
00:04:56,255 --> 00:04:57,965
ஆம். கட்டாயம்.

20
00:05:07,808 --> 00:05:09,518
நீங்க இதை கண்டுப்பிடிச்சீங்களா?

21
00:05:10,686 --> 00:05:11,979
கொஞ்சம் காலத்துக்கு முன்னாடி.

22
00:05:13,355 --> 00:05:16,733
சில சமயம் நான் இங்கு வருவேன், நான் மட்டும்.

23
00:05:21,780 --> 00:05:24,449
இப்போ, உங்கிட்ட அதை காட்ட விரும்புகிறேன்.

24
00:05:25,826 --> 00:05:27,119
ரொம்ப அழகா இருக்கு.

25
00:05:29,204 --> 00:05:33,000
இது நமக்கு மட்டுமாக இருக்கலாம்.
நம்முடைய ரகசிய இடம்.

26
00:05:35,169 --> 00:05:36,336
இறுதியாக.

27
00:05:37,629 --> 00:05:41,592
நான் சொல்ல வந்தது, உங்க ஓ&டி
ஆளுங்க நல்லவங்க தான்,

28
00:05:41,675 --> 00:05:43,218
ஆனால் அவங்க...

29
00:05:43,302 --> 00:05:45,179
- எப்போதும் கூடவே இருக்காங்க.
- ஆமாம்.

30
00:05:53,770 --> 00:05:55,189
இது பரவாயில்லையா?

31
00:05:58,483 --> 00:06:04,573
இர்விங், தெரியுமா, லுமன் கைப்புத்தகம், உதடோடு
உதடு சேர்க்கை பத்தி எதுவும் சொல்லவில்லை.

32
00:06:05,616 --> 00:06:10,287
இருப்பினும் காதல் கலந்த நட்புக்கு
ஊக்கமளிக்கவில்லை.

33
00:06:10,370 --> 00:06:12,206
அப்படீன்னா இது காதலாக இருக்கக்கூடாது.

34
00:06:14,374 --> 00:06:15,375
கூடாது.

35
00:06:17,544 --> 00:06:21,215
கொஞ்சமும்... காதல் இல்லையா?

36
00:06:25,719 --> 00:06:27,012
உண்மையாக வருந்துகிறேன்...

37
00:06:29,890 --> 00:06:31,099
நான் இன்னும் தயாராக இல்லை.

38
00:06:34,102 --> 00:06:35,479
என்னை... என்னை மன்னிச்சிடுங்க.

39
00:06:41,026 --> 00:06:42,152
பரவாயில்லை.

40
00:06:45,405 --> 00:06:46,573
அப்படியே இரு.

41
00:06:48,784 --> 00:06:52,079
என்னுடன் இங்கேயே இரு.

42
00:07:13,267 --> 00:07:15,310
நீ நல்ல குழந்தை.

43
00:07:15,394 --> 00:07:19,439
நாம இப்போ வீட்டுக்குப் போய் நீ
சாப்பிடுகிறாயான்னு பார்க்கப் போறோம். தயவுசெய்து.

44
00:07:45,257 --> 00:07:47,509
நாம இருவருமே நல்ல வகையாக வந்துட்டோம் போலும்.

45
00:07:47,593 --> 00:07:49,511
- ஓ, ஹலோ.
- ஹை.

46
00:07:50,220 --> 00:07:52,264
டெவோன். அந்த விடுதியில் சந்திச்சோமே.

47
00:07:52,347 --> 00:07:54,558
உங்களிடம் காபி கேட்டு வந்தேனே.

48
00:07:56,894 --> 00:07:58,645
அழகா இருக்கானே.

49
00:07:58,729 --> 00:08:00,022
அவனைப் பார்த்தாலும் வில்லியம் போல தான் இருக்கான்.

50
00:08:00,772 --> 00:08:02,900
உண்மையில் அவன் பெயர் ப்ராட்லி.

51
00:08:04,067 --> 00:08:05,068
வில்லியம் இல்லையா?

52
00:08:06,486 --> 00:08:09,448
- நீங்க மாத்திட்டீங்களா?
- நாம ஜூஸ் பெட்டிகளை காரில விட்டுட்டோமா?

53
00:08:10,324 --> 00:08:11,450
ஆமாம், மறந்திருக்கலாம்.

54
00:08:12,409 --> 00:08:15,204
ஹை.ஏஞ்சலோ ஆர்டேடா.

55
00:08:15,287 --> 00:08:16,997
நான் டெவோன். சந்தித்ததில் சந்தோஷம்.

56
00:08:17,080 --> 00:08:19,458
- வாழ்த்துக்கள்.
- ஓ, மிக்க நன்றி.

57
00:08:19,541 --> 00:08:21,251
உங்களுக்கு ஒருவரை ஒருவர் தெரியுமா?

58
00:08:21,335 --> 00:08:24,087
ஆம், நான்... நாங்க... அந்த
பிரசவ விடுதிகளிலே சந்திச்சோம்.

59
00:08:26,131 --> 00:08:29,134
- உங்கள சந்திச்சதுல சந்தோஷம், டெவோன்.
- ஆம். உங்களையும் தான்.

60
00:08:32,304 --> 00:08:33,347
அடடா-அடடா.

61
00:08:35,640 --> 00:08:36,642
நாம கிளம்பணும்.

62
00:08:38,559 --> 00:08:40,229
- பை. பை.
- பை, நண்பர்களே.

63
00:08:41,313 --> 00:08:42,313
பை, பிராட்லி.

64
00:08:45,234 --> 00:08:47,361
டெக்லான், காய், வாங்க.

65
00:08:48,487 --> 00:08:50,697
என்ன நடக்குது, ஒண்ணும் புரியமாட்டேங்குதே?

66
00:08:51,949 --> 00:08:52,950
மன்னிப்பு.

67
00:08:55,202 --> 00:08:57,287
காமராடரீ என்றால் என்ன பொருள்?

68
00:08:58,038 --> 00:08:59,039
அத்தியாயம் 29
காமராடரீ

69
00:08:59,122 --> 00:09:02,459
பெரும்பாலும் மொழி வல்லுனர்கள் லத்தீன் சொல்லான
"கேமரா"விலிருந்து வந்துள்ளது என கருதுகிறார்கள்

70
00:09:03,085 --> 00:09:06,213
"ஃபோட்டோ எடுக்கும் ஒரு கருவி" என்பது
அதன் பொருள்.

71
00:09:07,714 --> 00:09:12,219
அதோடு மிகச்சிறந்த படங்கள் எப்போதும்
நேசம் நிறைந்து, சந்தோஷமாக இருக்கும்

72
00:09:12,302 --> 00:09:13,846
நண்பர்கள் கூட்டத்தை காட்டுபவை தான்.

73
00:09:13,929 --> 00:09:14,972
உன் நிகழ்கால
உருவம்

74
00:09:15,055 --> 00:09:19,268
ஆனால் என் சிந்தனையின்படி காமராடரீ என்பது
கூட்டத்தில் படத்திற்கு சிரிப்பது மட்டும் இல்லை.

75
00:09:19,852 --> 00:09:22,521
நெருக்கடி காலங்களில் தோள் கொடுத்து
நிற்பது தான் அது.

76
00:09:23,272 --> 00:09:27,025
மற்றவர்கள் படும் கஷ்டத்தில் பொதுவான
ஒன்றை அடையாளம் கண்டு

77
00:09:27,860 --> 00:09:31,947
உதவிக்கரம் நீட்டி அரவணைப்பது தான் அது.

78
00:09:36,743 --> 00:09:37,744
கிச்சனெட்

79
00:09:37,828 --> 00:09:40,205
நாம உடனடியாக ஓ&டிக்குத் திரும்பிப் போகணும்.

80
00:09:40,289 --> 00:09:41,790
நாம் அனைவரும். இன்றே.

81
00:09:41,874 --> 00:09:43,292
யாரோ இங்கு தோழமை காட்ட
ஆவலாக இருக்கிறா மாதிரி தெரியுதே.

82
00:09:43,375 --> 00:09:45,127
தோழமைக்கும் இதுக்கும் சம்மந்தமே ில்லை.

83
00:09:45,210 --> 00:09:48,589
நாம பல டிபார்ட்மெண்டுகளையும் ஒண்ணாக
சேர்ப்பதுக்கு இது முதல் படியாக இருக்கலாம்

84
00:09:48,672 --> 00:09:50,757
கியர் நினைத்தது போலவே ஆகலாம்.

85
00:09:50,841 --> 00:09:52,634
ஒருவேளை அவருடைய ஆவி உன் திருமணத்தை
வந்து நடத்தி வைக்கலாம்.

86
00:09:52,718 --> 00:09:55,804
இது வேலையிடத்தில் சொல்றதுக்கு
உகந்த அபிப்பிராயமில்லை. உன்னை புகார் செய்யறேன்.

87
00:09:55,888 --> 00:09:58,056
உனக்கு நீயே என்னை புகார் செய்யப் போகிறாயா?

88
00:09:58,140 --> 00:10:00,017
சரி. அவர்கள் ஏதேதோ
பொருட்கள் செய்யறதாக சொன்னாயே?

89
00:10:00,100 --> 00:10:02,269
ஆம், ஏதோ வகையான இயந்திரங்கள்.
நாங்க என்னான்னு கேட்கலை.

90
00:10:02,352 --> 00:10:04,062
அந்த ஆடுகளை கொல்ல அவங்க
உபயோகிக்கும் கதைகள் தான் அவை.

91
00:10:04,146 --> 00:10:05,147
வாயை மூடு.

92
00:10:05,731 --> 00:10:07,941
நான் இர்விங் சொல்றதை ஒத்துக்கொள்கிறேன்.
ஓ&டி தான் இதில் அடுத்த கட்டம்.

93
00:10:08,025 --> 00:10:11,820
- நாம இந்த தளத்தை முழுக்க மேப் செய்தால்...
- தெளிவாக சொல்றேன், மேப்புக்கு நான் ஒத்துக்கலை.

94
00:10:12,613 --> 00:10:13,697
சரி.

95
00:10:13,780 --> 00:10:16,283
நாம இன்னொரு "மன நல நடை பயிற்சி" போனால் என்ன?

96
00:10:16,366 --> 00:10:17,367
வேடிக்கையாக இருக்கும்.

97
00:10:19,870 --> 00:10:21,038
என்ன... எனக்குத் தெரியாது.

98
00:10:21,121 --> 00:10:24,541
நமக்கு இன்னும் நிறைய
வேலை பாக்கி இருக்கு, அதனால...

99
00:10:24,625 --> 00:10:25,834
ஓ, சரி.

100
00:10:27,211 --> 00:10:29,838
இந்த வேலை மர்மமானது மற்றும் முக்கியமானது.

101
00:10:32,090 --> 00:10:35,052
நல்லாயிருக்கு.
என்னை மாதிரியே பேசுற.

102
00:10:35,135 --> 00:10:36,178
தெரியும்.

103
00:10:38,514 --> 00:10:40,182
சோம்பேறிகளா, மீண்டும் வேலைக்கு திரும்புவோம்.

104
00:10:44,394 --> 00:10:45,395
கியருக்கு புகழ் சேரட்டும்.

105
00:10:47,022 --> 00:10:48,023
ஏய்.

106
00:10:48,857 --> 00:10:50,234
நீங்களும் தோழமை கொண்டறீங்களா?

107
00:10:50,817 --> 00:10:52,986
என்ன? இல்லையே, நான்...

108
00:10:53,070 --> 00:10:56,907
நான் என் பணியாளர்களிடம்
அக்கறையா இருக்கும் ஒரு தலைவன்

109
00:10:56,990 --> 00:10:58,867
அதோடு அவர்களோட கோரிக்கைகளையும்
உண்மையா பிரிசீலிப்பவன்.

110
00:10:58,951 --> 00:11:00,077
- உண்மையாவா?
- ஆமாம்.

111
00:11:00,160 --> 00:11:02,704
உன்னை பார்த்தால் நல்ல ஜோள்ளு விழுது.

112
00:11:02,788 --> 00:11:04,831
- நீ என்னை பார்த்து புன்னகைத்ததே இல்லை.
- அவன் சரியாதான் சொல்றான், மார்க்.

113
00:11:04,915 --> 00:11:08,043
நீ அதிகமா முக பாவனைகளை
உபயோகிப்பதே இல்லை.

114
00:11:08,126 --> 00:11:10,254
இது நல்ல வேடிக்கை. நான் எப்போதும்
சிரிச்சுக்கிட்டே இருப்பேன்.

115
00:11:10,337 --> 00:11:11,505
ஹே, உங்கள தான்.

116
00:11:12,256 --> 00:11:14,049
நீங்க எல்லோரும் என்ன பேசிகிட்டு இருக்கீங்க?

117
00:11:15,759 --> 00:11:16,802
சும்மா, வந்து...

118
00:11:16,885 --> 00:11:17,886
- நாங்க...
- இந்த...

119
00:11:17,970 --> 00:11:20,305
- விவாதிச்சிட்டு இருந்தோம்...
- ஆம், திருமதி...

120
00:11:20,389 --> 00:11:23,684
- மிஸ். கேஸி. மிஸ். கேஸி.
- மிஸ். கேஸி. ஆம்.

121
00:11:24,852 --> 00:11:25,894
பொறு, அவர் எங்கே?

122
00:11:28,480 --> 00:11:34,152
பகுதி-நேர உட்புறங்கள் உன்னைப் போல
பேசிக்கொண்டோ, நாகரீகமாகவோ இருக்க மாட்டார்கள்,

123
00:11:34,236 --> 00:11:37,656
இருந்தாலும் அவர்கள் பணிக்கு அவர்கள் தான்
பொறுப்பு ஏற்கணும்.

124
00:11:38,240 --> 00:11:43,370
மிஸ். கேஸியிடன் ஹெல்லியை கண்காணிக்கும்
பொறுப்பு தந்தோம், அவர் அதை செய்யவில்லை.

125
00:11:44,371 --> 00:11:46,290
ஏன்னா நான் ஹெல்லியை வெளியே
கொண்டு போனேன்.

126
00:11:46,373 --> 00:11:48,709
யாராவது பிரேக் அறைக்கு போணும்னா அது நான்தான்.

127
00:11:51,837 --> 00:11:52,921
வீரம்.

128
00:11:53,672 --> 00:11:56,383
இது அடிப்படை கொள்கை இல்லை,
இருந்தாலும் நல்ல குணம் தான்.

129
00:11:57,426 --> 00:11:59,887
யாருக்காக நீ பிரேக் அறைக்குப் போக மாட்டாய்?

130
00:12:02,306 --> 00:12:05,434
அவள் வெறும் சுகாதார ஆலோசகர் தான், மார்க்.

131
00:12:05,976 --> 00:12:07,769
ஆம், ஆனால், அவரை தண்டிக்க கூடாது.

132
00:12:07,853 --> 00:12:09,521
அதாவது, நான் தான் ஹெல்லிக்கு நடை
பயிற்சி தேவைன்னு நினைத்தேன்.

133
00:12:09,605 --> 00:12:11,231
எனக்கு அதை செய்யும் அதிகாரம் இருக்கு.

134
00:12:11,315 --> 00:12:12,900
நடை பயிற்சியா மட்டுமா அது?

135
00:12:13,525 --> 00:12:14,526
ஆமாம்.

136
00:12:20,240 --> 00:12:22,451
அல்லது உங்க டிபார்ட்மெண்டின் வேலை அளவெல்லாம்
படு மோசமாக இருக்கிறப்போது

137
00:12:22,534 --> 00:12:25,954
மற்ற டிபார்ட்மெண்டுகளை மோப்பம்
பிடித்து விட்டு வந்தீங்களா?

138
00:12:26,788 --> 00:12:28,498
அவள் கிட்டதட்ட இறந்து போயிருந்தாள்.

139
00:12:28,582 --> 00:12:32,294
ஒவ்வொரு சுத்திகரிப்பாளருக்கும் நீ
செவிலித் தாயாக இருப்பது உன் வேலையில்லை.

140
00:12:33,879 --> 00:12:36,173
சரி, என் வேலை தான் என்ன?

141
00:12:36,256 --> 00:12:37,841
உண்மையாகவே நீ எங்கிட்ட இதை கேட்கிறாயா?

142
00:12:39,259 --> 00:12:40,260
ஆமாம்.

143
00:12:40,761 --> 00:12:42,930
நாங்க உண்மையில என்ன செய்யறோம்?

144
00:12:45,307 --> 00:12:48,268
நாம கியருக்கு சேவை செய்கிறோம், சிறுவனே!

145
00:12:48,769 --> 00:12:54,691
அதை உன் பனி மூடியிருக்கிற உன் புத்தியிலே
ஏத்திட்டு, உன் வேலை அளவை முடிக்கிற வரை,

146
00:12:55,275 --> 00:12:59,238
எம்டிஆருக்கு ஹால் பாதையில் உலாவரும்
சலுகைகள் எல்லாம் நிறுத்தப்படுகிறது.

147
00:13:00,072 --> 00:13:05,202
அதனால, மீண்டும் உன் இடத்துக்கு போய், வேலையைப்
பார்த்து, வேறு உத்திரவு வரும் வரை அங்கேயே இரு.

148
00:13:09,289 --> 00:13:11,250
லுமன்

149
00:13:12,084 --> 00:13:14,378
காலகாலத்துக்கும் போதுமான சோகம்.

150
00:13:14,461 --> 00:13:17,923
நானும் மிஸ். கேஸியும் பகிர்ந்த "செய்வாங்களா,
மாட்டாங்களா" எதிர்பார்ப்பை எம்டிஆர் இழக்கும்.

151
00:13:18,006 --> 00:13:19,007
ஓ, அப்படியா?

152
00:13:19,091 --> 00:13:21,260
பாருப்பா, இவளுக்காக நான் இந்த
நல்ல சட்டையை இன்னிக்கு போட்டுட்டு வந்தேன்.

153
00:13:23,428 --> 00:13:25,639
நீ அந்த சட்டையை எடுத்தப்போ,
அப்படி ஒருத்தி இருக்கானே உனக்குத் தெரியாது.

154
00:13:25,722 --> 00:13:28,058
சரி, ஒருவேளை காதல் துண்டிப்பையும்
தாண்டும் வல்லமை உள்ளதோ என்னவோ.

155
00:13:28,141 --> 00:13:30,227
- நீ அப்படி நினைக்கிறியா?
- இல்லை.

156
00:13:32,855 --> 00:13:34,106
உனக்கும் மார்க்குக்கும் இடையே என்ன நடக்குது?

157
00:13:34,189 --> 00:13:35,440
என்னது?

158
00:13:35,524 --> 00:13:38,026
நீங்க இருவரும், அன்னிக்கு
தனியா ஜோடியா போனீங்களே?

159
00:13:38,777 --> 00:13:40,153
"ஆட்டுக் குட்டிகள்"?

160
00:13:41,405 --> 00:13:43,240
அதை ஏன் எப்படியோ சொல்ற?

161
00:13:45,492 --> 00:13:49,121
"ஆட்டுக் குட்டிகள்"ன்னா, மார்க் எஸ்., கூட நான்
உறவு கொள்வதின் மறைமுக சொல்லா?

162
00:13:51,123 --> 00:13:52,666
அடடா.

163
00:13:53,250 --> 00:13:56,336
"ஆட்டுக் குட்டிகள்" என்கிற சொல்
உடலுறவுக்கு குறியீடு வார்த்தையா?

164
00:13:56,920 --> 00:13:58,338
இல்லை, அவை நிஜமா ஆட்டுக் குட்டிகள் தான்.

165
00:13:58,422 --> 00:13:59,923
நாம் ஏன் அதை அப்படி அழைக்கணும்?

166
00:14:00,632 --> 00:14:02,718
சரி. சரி, உன்னை நம்புறேன்.

167
00:14:02,801 --> 00:14:03,927
மார்க்.

168
00:14:05,804 --> 00:14:06,972
என்ன ஆச்சுன்னு கண்டுப்பிடிச்சயா?

169
00:14:07,055 --> 00:14:09,099
அவள் பிரேக் அறையில் இருக்கிறாள்.

170
00:14:09,183 --> 00:14:11,768
ச்சே. எல்லாம் நம்மளால் தானா?

171
00:14:14,229 --> 00:14:17,357
நாம இனி வெளியே ஹால் பாதைகளி்ல் போக அனுமதி
கிடையாது, நம் வேலை அளவை முடிக்கும் வரை,

172
00:14:17,441 --> 00:14:21,111
அதனால இனிமே இந்த இன்டர்-டிபார்ட்மெண்டல்
போக்குவரத்துகளுக்கு எல்லாம் தடை!

173
00:14:23,822 --> 00:14:25,324
உண்மையாதான் சொல்றயா?

174
00:14:30,662 --> 00:14:31,663
நான்...

175
00:14:33,582 --> 00:14:35,709
என்னை மன்னிச்சிடு மார்க். அது... அது என் தவறு...

176
00:14:37,794 --> 00:14:43,133
ஒரு முதிர்ந்த சுத்திகரிப்பாளராக இருந்தும் நான்
ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கவில்லை.

177
00:14:48,847 --> 00:14:50,974
ஓ&டிக்கு எப்படி போகணும்னு சொன்ன?

178
00:15:13,705 --> 00:15:15,332
மில்சிக்!

179
00:15:15,415 --> 00:15:16,500
உடனே போறேன்.

180
00:15:50,117 --> 00:15:51,869
நான் இவ்வளவு நபர்களை பார்த்ததே இல்லை.

181
00:15:52,536 --> 00:15:53,954
நானும் தான்.

182
00:15:56,874 --> 00:15:58,333
பரவாயில்லை.

183
00:15:58,417 --> 00:16:02,296
மாற்றத்தை எதிர்கொள்வது கொஞ்சம் கஷ்டம்
தான்னு எனக்குத் தெரியும்,

184
00:16:02,880 --> 00:16:04,631
ஆனால், எம்டிஆர் ஆளுங்க இப்போ இங்க வந்தாச்சு.

185
00:16:07,676 --> 00:16:08,969
உங்கள இங்க வரவேற்கிறோம்,

186
00:16:09,052 --> 00:16:14,683
அதேபோல நீங்களும் உங்க
பணியிடத்துல எங்கள வரவேற்பீங்கன்னு நம்புறேன்.

187
00:16:14,766 --> 00:16:18,604
இப்போ தொடருங்க. நிச்சயமா உங்க எல்லோருக்கும்
நிறைய கேள்விகள் எல்லாம் இருக்குமே.

188
00:16:24,193 --> 00:16:27,154
எனவே, அதை மேக்ரோடேட்டா சுத்திகரிப்புன்னு
அழைக்கிறாங்களா?

189
00:16:29,531 --> 00:16:31,158
எதை சுத்திகரிப்பு செய்யறீங்க?

190
00:16:36,205 --> 00:16:37,372
அது என்ன தண்ணீர் பாய்ச்சும் கேனா?

191
00:16:40,417 --> 00:16:45,172
அது மேலே இருக்கும் அதிகாரிகள் பகுதிக்குத்
தேவையான பொருட்களை அனுப்பன்னு நினைக்கிறோம்.

192
00:16:45,255 --> 00:16:49,635
அதே சமயம், போன வாரத்தின் வெளியீடு
வழக்கத்தைவிட இன்னும் கடுமையாகவே இருந்தது.

193
00:16:49,718 --> 00:16:51,094
அந்த கதைகள் அவ்வளவு கடுமையாக இல்லை.

194
00:16:51,178 --> 00:16:53,138
கதைகளா?

195
00:16:54,556 --> 00:16:57,267
இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்னு நாங்க
யோசிச்சு பார்க்க முயல்கிறோம்.

196
00:16:57,351 --> 00:17:01,271
நான் கண்டுபிடிச்சது, இங்கிருந்து
நேர் ஏதிரே இருக்கிற டிபார்ட்மெண்டில்

197
00:17:01,355 --> 00:17:05,150
அங்க, சரி, ஆட்டுக் குட்டிகளை வளர்க்குறாங்க.

198
00:17:06,401 --> 00:17:07,736
ஆட்டுக் குட்டிகளை வளர்க்கிறார்களா?

199
00:17:12,574 --> 00:17:17,454
நமக்குத் தெரியாமல் நிறைய நடக்கிறது இங்க,
ஆனால் நாம நம் வேலையை மட்டும் செய்கிறோம்.

200
00:17:17,538 --> 00:17:19,205
இது முக்கியமான பணி, நிச்சயமா.

201
00:17:19,289 --> 00:17:21,916
நாம இங்க செய்யற எல்லாமே முக்கியம் தான்.

202
00:17:24,211 --> 00:17:27,422
அது முக்கியம்னு நாம சொல்வதால முக்கியமா, அல்லது
நிஜமாகவே முக்கியமான வேலையா?

203
00:17:30,050 --> 00:17:33,637
பாருங்க, இதுல நாம அனைவரும்
இணைஞ்சு தான் வேலை செய்யணும்.

204
00:17:35,514 --> 00:17:39,142
சேர்ந்து என்ன செய்யணும், உண்மையில்?

205
00:17:39,226 --> 00:17:42,312
எனக்குத் தெரியாது. ஏன் இங்கு
ஆட்டுக் குட்டிகளை வளர்க்குறாங்க, என்பதை போல.

206
00:17:42,396 --> 00:17:47,192
அல்லது, இந்த இடம் எவ்வளவு பெரியதுன்னு
கண்டுப்பிடிப்பது

207
00:17:47,276 --> 00:17:48,944
அல்லது நாம எவ்வளவு பேர் இங்கு இருக்கிறோம்.

208
00:17:54,157 --> 00:17:57,744
நம்மிடம் இங்க என்ன செய்யறோம்னு
அவங்க ஏன் சொல்ல மறுக்குறாங்க?

209
00:17:58,704 --> 00:18:00,414
அவங்க... அவங்க எதைக் கண்டு பயப்படறாங்க?

210
00:18:02,165 --> 00:18:06,545
எல்லாவற்றுக்கும் மேல் அறிவொளி
என்பது தான் ஈகனின் தத்துவம் என்றால்...

211
00:18:06,628 --> 00:18:08,505
எல்லோரையும் தாண்டி அறிவொளி.

212
00:18:08,589 --> 00:18:09,631
ஆனால், ஆம்.

213
00:18:10,382 --> 00:18:12,843
அதுல ஏன் நம்மளை சேர்த்துக்கல?

214
00:18:13,552 --> 00:18:18,515
நம்மை மட்டும் ஏன் இன்னும் இருட்டறையில்
தள்ளிவிட்டு வேலை செய்ய சொல்றாங்க?

215
00:18:25,522 --> 00:18:27,316
அது நல்ல புலமையுடன் இருந்தது, நண்பா.

216
00:18:27,399 --> 00:18:28,483
நன்றி.

217
00:18:31,028 --> 00:18:32,154
மார்க் சொல்வது சரிதான்.

218
00:18:32,779 --> 00:18:34,323
- சரியாக சொல்றானா?
- சரியாகத் தான் சொல்றான்.

219
00:18:34,406 --> 00:18:40,412
இர்விங், ஞானம் மற்றும் உண்மை இவற்றின் அரவணைப்பை
நாம் உணர்வதை தான் கியர் விரும்புவார்.

220
00:18:40,495 --> 00:18:43,415
அந்த வகையில் நாம் அவருடைய கொள்கைகளுக்கு
உண்மையான கூட்டாளிகளாக இருக்கலாம்.

221
00:18:43,999 --> 00:18:45,000
அதே தான்.

222
00:18:46,460 --> 00:18:50,756
இரண்டு டிபார்ட்மெண்டுகளின் தலைவர்களாக,

223
00:18:51,548 --> 00:18:55,719
மார்க்கும் நானும் இந்த ஆடு டிபார்ட்மெண்டுடன்
தொடர்பு கொண்டு அவர்களுக்குத் தெரிந்ததை அறியணும்.

224
00:18:57,471 --> 00:19:01,934
அதோடு ஒரு உதவியாளரையும் அழைத்து வரலாம்.

225
00:19:24,122 --> 00:19:27,209
நாங்கள் குழந்தைகள் இல்ல, திரு. மில்சிக்.
நாங்க தப்பு எதுவும் செய்யலை.

226
00:19:32,798 --> 00:19:34,550
மேக்ரோடேட்டா
சுத்திகரிப்பு

227
00:19:50,649 --> 00:19:55,529
கியர், அருள் பெற்றவரே, கியர்

228
00:19:56,029 --> 00:20:01,326
கியர், பிரகாசமானவரே, கியர்

229
00:20:01,410 --> 00:20:07,791
செல்வத்தை எளியவர்களுக்குத் தருபவரே
வலியானாலும், மழையானாலும்

230
00:20:08,375 --> 00:20:13,088
முன்னேற்றம், ஞானம்
பயமின்மை

231
00:20:13,881 --> 00:20:18,635
கியர், அருள் பெற்றவரே

232
00:20:18,719 --> 00:20:21,013
கியர்

233
00:20:27,019 --> 00:20:31,523
நான் உன் மீது நம்பிக்கை வைத்தேன்,
அதை நீ உடைத்து விட்டாய்.

234
00:20:32,733 --> 00:20:35,986
உன் ஆற்றலின்மை மற்றும்
சுற்றித் திரியும் கோழிக் குஞ்சின் தன்மை

235
00:20:36,069 --> 00:20:38,864
இரண்டும் உன் பொறுப்பு தான்.

236
00:20:47,331 --> 00:20:50,083
அவனை பிரேக் அறைக்கு கூட்டிட்டுப் போங்க.

237
00:21:29,498 --> 00:21:31,500
பிரேக் அறை

238
00:22:02,364 --> 00:22:03,365
என்னை மன்னிச்சிடுங்க.

239
00:22:22,384 --> 00:22:23,802
உன் கைக்கு என்ன ஆனது?

240
00:22:26,346 --> 00:22:30,184
நான் ஒரு தண்ணீர் குளிர் சாதனத்தை நிரப்புறபோது
கையை நசுக்கிக்கிட்டேன், போலும், அலுவலகத்துல.

241
00:22:30,267 --> 00:22:31,977
அல்லது அவங்க
அப்படிதான் எங்கிட்ட சொன்னாங்க.

242
00:22:32,060 --> 00:22:33,604
அந்த ஜக்குகள் மிகவும் கனமானவை.

243
00:22:34,229 --> 00:22:35,397
ஆமாம், அது சரிதான்.

244
00:22:35,480 --> 00:22:36,690
இன்னொரு மெர்லாட் வேணுமா?

245
00:22:36,773 --> 00:22:37,774
வேண்டாம், நன்றி.

246
00:22:38,442 --> 00:22:40,068
எனக்கு தண்ணீர் போதும், நன்றி.

247
00:22:42,654 --> 00:22:44,740
நீ, இளவரசியைப் பார்த்தயா?

248
00:22:45,616 --> 00:22:47,659
இல்ல, பிறந்த பின் பார்க்கலை.

249
00:22:47,743 --> 00:22:49,870
ஆனால் உங்க அக்காவோட நான்
ஃபோனுல பேசினேன்.

250
00:22:50,370 --> 00:22:52,164
அவங்க தன்னைப் பத்தி எவ்வளவு
உங்ககிட்ட சொல்றான்னு தெரியாது...

251
00:22:52,247 --> 00:22:53,957
- பால் குடிப்பதில் பிரச்சினைகள் தானே?
- ஆமாம்.

252
00:22:54,041 --> 00:22:56,752
எனக்கு... எனக்குத் தெரியும்.
ரொம்ப தெரியுமோ என்னவோ. அதுவும் தெரியாது.

253
00:22:56,835 --> 00:23:00,297
சரி, அவங்களுக்கு சில தாய்ப்பால்
ஆலோசகர்களின் பெயர்கள் தேவையாக இருந்தது.

254
00:23:01,381 --> 00:23:03,300
சரி, அதெல்லாம் கவலைப்பட எதுவும் இல்லை, இல்ல?

255
00:23:03,383 --> 00:23:04,843
இல்ல. இதெல்லாம் சாதாரணம்.

256
00:23:05,469 --> 00:23:07,721
இருந்தாலும், ஒரு நிபுணரின்
ஆலோசனை பெறுவது நல்லது.

257
00:23:07,804 --> 00:23:09,223
அதாவது, ரிக்கென் அல்லாத...

258
00:23:09,306 --> 00:23:11,767
- மற்றவர்களிடமிருந்தா? ஆம்.
- ...ரிக்கென்.

259
00:23:13,852 --> 00:23:15,938
நீங்க குழந்தைகள் பெறுவதைப் பத்தி யோசிச்சீங்களா?

260
00:23:18,023 --> 00:23:19,024
ஜெம்மாவுடனா?

261
00:23:20,484 --> 00:23:21,485
ஆமாம்.

262
00:23:27,032 --> 00:23:28,700
ஆம், நாங்க சில காலம்
முயற்சி செய்தோம்.

263
00:23:29,576 --> 00:23:30,911
அது ஒண்ணும் சரியாகவில்லை.

264
00:23:32,371 --> 00:23:34,623
தத்து எடுத்துக்கொள்வதைப் பத்தி பேசினோம்,
ஆனால்...

265
00:23:37,042 --> 00:23:41,505
தெரியலை. அப்புறம்,
"சரி, இவ்வளவு கொடுத்திருக்காங்க.

266
00:23:42,130 --> 00:23:46,218
அது இன்னொரு வாழ்க்கை,
அப்புறம் இன்னொன்று கிடைக்காது.

267
00:23:46,301 --> 00:23:48,345
அதனால கிடைச்சதை வைத்து வாழு"ன்னு
நினைக்க ஆரம்பிச்சுட்டோம்.

268
00:23:50,597 --> 00:23:52,015
அது ரொம்ப நல்லது.

269
00:23:52,099 --> 00:23:54,726
சரி, இதெல்லாம் அவள் சொன்னது தான்.

270
00:23:56,270 --> 00:23:59,648
அவள் எப்போதுமே, சமயோஜிதமாக
சிந்திப்பாள்.

271
00:24:00,315 --> 00:24:01,900
எப்போதும் அவளிடம் மாற்று திட்டம் இருக்கும்.

272
00:24:01,984 --> 00:24:05,487
ஒரு சமயத்துல நாங்க இந்த கேம்பிங் டிரிப்புல
போறதாக இருந்தோம், அப்போ...

273
00:24:05,571 --> 00:24:07,990
விசித்திரமா இல்ல,
நான் இப்போ அதைப் பத்தி பேசுறது?

274
00:24:08,073 --> 00:24:10,951
- எனக்குத் தோணுது...
- இல்லை. நான் இதுவும் நல்லதுன்னு தான் நினைக்கிறேன்.

275
00:24:11,743 --> 00:24:13,287
ஆம், ஆனால் நாம சேர்ந்து
இருக்கும் நேரம் இது. நான்...

276
00:24:14,872 --> 00:24:16,540
நான் இன்னும் உன்னை உதறிவிட்டுப் போகலையே.

277
00:24:23,422 --> 00:24:28,594
சில சமயத்துல, அவள் என்னை விட்டு
தள்ளி இருக்க விரும்புவாள்னு... தோணும்.

278
00:24:29,887 --> 00:24:31,930
அதோடு சில சமயம் அவளுக்கு என்னைப் பத்தி
கவலையே இல்லைன்னு தோணும்.

279
00:24:32,014 --> 00:24:34,474
அவள் இறந்துவிட்டாள்னு தான் அவளுக்கு வருத்தம்.

280
00:24:37,853 --> 00:24:39,897
மன்னிச்சிடு, எனக்குத் தெரியும் நான் பேசுறது
எதுவுமே விளங்காதுன்னு.

281
00:24:41,690 --> 00:24:43,025
அவள் உன்னுடைய ஒரு பகுதி.

282
00:24:44,067 --> 00:24:46,236
தெரியுமா?
நீ அப்படியெல்லாம் பிரித்து பார்க்க முடியாது...

283
00:24:46,320 --> 00:24:50,282
- ஓ, இல்ல, ஆனால் உன்னால முடியும், அலெக்ஸா.
- ஓ. ச்சே.

284
00:24:50,365 --> 00:24:52,492
இந்த அற்புதமான புதிய செயல்முறையால.

285
00:24:52,576 --> 00:24:54,953
- நான் நேர அங்க தான் வந்திருக்கேன்.
- ஆம், சரி தான்.

286
00:25:06,256 --> 00:25:08,759
இந்த வாடிக்கையாளரின் முகப்பு தனிப்பட்டது
கெப்பியேலா ஆர்டேடா

287
00:25:12,971 --> 00:25:14,556
கேப்ரியாலா ஆர்டேடா
செனட்டர், ஏஞ்சலோ ஆர்டேடாவின் மனைவி

288
00:25:15,390 --> 00:25:18,101
ஏஞ்சலோ ஆர்டேடா மற்றும் மனைவி கேப்ரியாலா
அவருடைய அலுவலக மறுவரவை கொண்டாடுகிறார்கள்

289
00:25:26,443 --> 00:25:27,819
...அதிகாரத்தில் ஏறுகிறார்
அதி வேகமாக

290
00:25:27,903 --> 00:25:29,655
சர்ச்சைக்குள்ளான துண்டிப்பிற்கு,
தனது ஆதரவின் வாயிலாக...

291
00:25:30,155 --> 00:25:32,824
மாநில செனட்டர் துண்டிப்பு விவாதத்தில்
முன்னணி நபராக மாறுகிறார்

292
00:25:35,869 --> 00:25:38,539
"துண்டிப்பு ஒரு முக்கிய விஷயம்"
என்கிறார் வட்டார அதிகாரி

293
00:25:40,123 --> 00:25:41,333
- அன்பே?
- என்ன?

294
00:25:43,377 --> 00:25:44,586
- அவங்க வந்துட்டாங்க.
- இதோ.

295
00:25:49,633 --> 00:25:52,803
கவனத்து. அவசரம் வேண்டாம்.
இந்த வழியாக.

296
00:25:52,886 --> 00:25:56,306
- பிடித்தது.
- சரி. என் குழந்தை. குழந்தை.

297
00:25:59,518 --> 00:26:00,811
சரி.

298
00:26:02,729 --> 00:26:04,398
நீங்க
தான் டெவோனாக இருக்கணும்.

299
00:26:04,481 --> 00:26:05,983
டெவோன், இது தான் திருமதி. செல்விக்.

300
00:26:06,066 --> 00:26:09,236
ஹை. ஆம், நீங்க மார்க்கின் பக்கத்து வீட்டில் வசிப்பவர்.
இந்கு வந்ததுக்கு ரொம்ப நன்றி.

301
00:26:09,319 --> 00:26:10,988
அட, எனக்கு கிடைத்த பாக்கியம்.

302
00:26:11,071 --> 00:26:13,740
மார்க் நீங்க ஒரு ஆலோசகரை தேடுறீங்கன்னு
சொன்னப்போது எனக்கு ரொம்ப ஆச்சரியம்.

303
00:26:13,824 --> 00:26:16,702
- தற்செயல் தான்.
- ஆமாம்.

304
00:26:16,785 --> 00:26:18,245
அந்த தாவர உப்பு வேலை செய்ததா?

305
00:26:18,912 --> 00:26:21,540
இது தான் குட்டி எலினோராக இருக்கணும்.

306
00:26:21,623 --> 00:26:23,542
ஹலோ, எலினோர் குட்டி.

307
00:26:26,295 --> 00:26:28,589
- உங்களுக்கு சுகப் பிரசவம் தானே, இல்லையா?
- ஓ, ஆமாம்.

308
00:26:28,672 --> 00:26:30,632
நாம பல்வேறு வகையான பால் கொடுக்கும்
பொசிஷன்களைப் பார்ப்போம்.

309
00:26:30,716 --> 00:26:32,259
ஓ, அதோடு நான் இதை உங்களுக்கு கொண்டு வந்தேன்.

310
00:26:33,343 --> 00:26:35,971
ஷீ வெண்ணை, உங்க காம்புகள்ல தடவிக்கொள்ள.

311
00:26:36,054 --> 00:26:37,055
எங்கள் அன்பளிப்பு.

312
00:26:37,556 --> 00:26:39,516
- நாங்க சிலரைப் பத்தி பேசிட்டிருந்தோம்.
- கண்டிப்பாக.

313
00:26:39,600 --> 00:26:41,268
ஓ, இதோ பாரு.

314
00:26:41,351 --> 00:26:42,936
- மன்னிக்கணும்.
- சரி.

315
00:26:43,020 --> 00:26:47,441
ஓ, இல்ல, அதெல்லாம் வேண்டாம்.
குழந்தைகள்னா அப்படிதான்.

316
00:26:47,524 --> 00:26:48,859
நான் எடுத்துக்கலாமா?

317
00:26:48,942 --> 00:26:49,943
ஆமாம், ஆமாம்.

318
00:26:52,237 --> 00:26:54,156
செல்லமே.

319
00:26:54,239 --> 00:26:56,950
இதோ, இதோ, இதோ. சரி.

320
00:27:25,145 --> 00:27:27,189
...எழுவது நூற்று ஒண்ணு,

321
00:27:27,856 --> 00:27:29,983
எழுவது நூற்று இரண்டு,

322
00:27:30,609 --> 00:27:32,945
எழுவது நூற்று நாற்பத்து-மூன்று,

323
00:27:33,737 --> 00:27:36,740
எழுவது நூற்று நாற்பத்து-ஆறு.

324
00:27:36,823 --> 00:27:40,285
எழுவது நூற்று நாற்பத்து-எட்டு...

325
00:27:42,079 --> 00:27:43,121
டைலன்.

326
00:27:45,207 --> 00:27:47,793
நான் உன்னை வீட்டில் எழுப்புகிறேன்.
எனக்கு நீ அதை எங்க வச்சிருக்கன்னு தெரியணும்.

327
00:27:48,836 --> 00:27:49,962
எதை எங்க வச்சிருக்கேன்?

328
00:27:50,045 --> 00:27:51,797
ஓ&டியிலிருந்து நீ எடுத்த ஐடீயோகிராஃபிக் அட்டை.

329
00:27:51,880 --> 00:27:53,632
நீ அதை எடுக்கும் காணொளி துண்டை பார்த்தேன்.

330
00:27:53,715 --> 00:27:55,843
அதை வேளியே எடுத்து வந்தயா? இங்க இருக்கா?

331
00:27:55,926 --> 00:27:57,469
கடவுளே, இது என் வீடா?

332
00:27:57,553 --> 00:28:00,889
டைலன், நல்லா கேளு. இந்த தகவல் எவ்வளவு
முக்கியம்னு உனக்குத் தெரியாது.

333
00:28:01,974 --> 00:28:04,309
யாராவது உனக்கு பணம் கொடுத்து அந்த
அட்டையை வெளியே கொண்டு வரச் சொல்லியிருந்தா...

334
00:28:04,393 --> 00:28:06,436
இல்ல, இல்ல. நான்...
நான் அதை கழிப்பறையில் வச்சேன்.

335
00:28:06,520 --> 00:28:08,146
இரண்டாவது கழிப்பறை, இருக்கைக்கு பின்னாடி.

336
00:28:08,230 --> 00:28:09,273
நன்றி.

337
00:28:09,356 --> 00:28:10,607
எனக்கு அது என்னான்னு கூட தெரியாது.

338
00:28:10,691 --> 00:28:12,359
- அதுவும் நல்லது தான்.
- அப்பா.

339
00:28:13,026 --> 00:28:14,027
அப்பா.

340
00:28:14,653 --> 00:28:16,280
என்ன... என்ன எழவு இது?

341
00:28:16,363 --> 00:28:19,950
நாங்க சொன்னது ஆயிரம் வரை எண்ணிட்டு
வெளியே காத்திருன்னு.

342
00:28:20,033 --> 00:28:21,201
அது என் குழந்தையா?

343
00:28:22,411 --> 00:28:23,412
முடித்து விடு.

344
00:28:23,495 --> 00:28:24,329
ஆன் - ஆஃப்

345
00:28:29,334 --> 00:28:30,335
அப்பா.

346
00:28:35,883 --> 00:28:36,884
நல்ல விதமா முடிஞ்சுதா?

347
00:28:37,718 --> 00:28:38,719
நல்ல விதமா முடிஞ்சது.

348
00:28:48,395 --> 00:28:51,440
எனவே, நாம...

349
00:28:52,024 --> 00:28:53,609
நாம நம் கார்களை அழைக்கலாமா.

350
00:28:55,819 --> 00:28:56,820
ஆம்.

351
00:29:02,451 --> 00:29:03,452
ஓ, அடெடெ.

352
00:29:06,246 --> 00:29:07,456
அது ஜூன்.

353
00:29:07,539 --> 00:29:08,957
கதவு 9 மணி மாலை டிஜே பார்ட்டிக்குப் பின்
திங்கட்கிழமை

354
00:29:09,041 --> 00:29:12,127
ஏய், இது இன்னிக்கு தான். இப்போ.

355
00:29:12,961 --> 00:29:15,756
நாம இதுக்குப் போகலாமா, என்ன?

356
00:29:16,590 --> 00:29:17,591
என்னது இது?

357
00:29:18,425 --> 00:29:21,887
சரி, இது ஒரு இசைக் குழு.
நான்... எனக்கு கொஞ்சம் அதில ஒருவரை தெரியும்.

358
00:29:23,514 --> 00:29:24,973
மோசமா இருந்தா, வந்துவிடலாம்.

359
00:29:25,474 --> 00:29:27,559
நம்மள மாதிரி நல்லாயில்லைன்னா
வந்து விடாலம்னு சொல்ற.

360
00:29:29,311 --> 00:29:30,312
அதே தான்.

361
00:29:40,656 --> 00:29:44,076
எனக்கு இப்போ வயசானது போல தோணுது.

362
00:29:44,159 --> 00:29:46,995
இல்ல, நீ நல்ல பொருத்தம் தான்.
அதைப் பத்தியெல்லாம் கவலை வேண்டாம்.

363
00:29:56,421 --> 00:29:59,299
ஹை. இரண்டு பீயர்கள், தயவுசெய்து.

364
00:30:03,971 --> 00:30:04,972
ஹலோ.

365
00:30:06,515 --> 00:30:07,516
நன்றி.

366
00:30:11,103 --> 00:30:16,358
ஹை. யாரு இன்னிக்கு அந்த பாதையில் ஓசை
எழுப்புவது? ரொம்ப கொடூரமாக இருக்கு.

367
00:30:16,441 --> 00:30:18,235
சரி, இதை செய்து முடிக்கலாம்.

368
00:30:30,330 --> 00:30:32,749
இப்போதெல்லாம்
நான் வேலை செய்யும்போது கோடை மழை

369
00:30:32,833 --> 00:30:35,794
என் மனதே என்னை வெறுக்கிறது
ஏனெனில் எல்லா நாளும் ஒன்று போல் தான் உள்ளது

370
00:30:35,878 --> 00:30:38,338
உடைந்த மனது, உடைந்த எண்ணம்

371
00:30:39,047 --> 00:30:41,175
பறவையின் நெருப்பு ஜன்னலை உடைக்கிறது...

372
00:30:43,468 --> 00:30:44,553
படம் எடுக்க அனுமதியில்லை, மூடனே.

373
00:30:44,636 --> 00:30:45,679
நிச்சயமா, நன்றி.

374
00:30:45,762 --> 00:30:50,559
இதையெல்லாம் நீ நிஜமாக்கலாம்
என் கண்ணுள் ஒரு வானத்தை நீலத்தில் அமைத்துவிடு

375
00:30:50,642 --> 00:30:53,145
லுமன் நான் உன்னை வெறுக்கிறேன்
நீ என் முதல் காதலை பறித்தாய்

376
00:30:53,228 --> 00:30:55,981
நீ நாசமாக, லுமன், உனக்குப் போதாதது

377
00:30:56,064 --> 00:30:59,693
என்னுடன் சண்டையிடலாம் என நினைக்கிறாய்
அப்படி எண்ணுவதே உன் தவறு தான்

378
00:31:00,694 --> 00:31:02,321
லூமன், நாசமாக!

379
00:31:03,238 --> 00:31:04,656
உன்னை வெறுக்கிறேன், லுமன்!

380
00:31:06,450 --> 00:31:07,993
லூமன், நாசமாக!

381
00:31:13,832 --> 00:31:16,543
லூமன், நாசமாக
நீ என் முதல் காதலை பறித்தாய்

382
00:31:16,627 --> 00:31:19,463
உன்னை வெறுக்கிறேன், லுமன்,
உனக்குப் போதாதது

383
00:31:19,546 --> 00:31:20,672
நீ நாசமாக, லுமன்.

384
00:31:22,257 --> 00:31:24,092
நான் உன்னை வெறுக்கிறேன், லுமன்!

385
00:31:25,385 --> 00:31:27,429
நீ நாசமாப் போ, லுமன்!

386
00:31:27,513 --> 00:31:29,515
நான் உன்னை வெறுக்கிறேன், லுமன்!

387
00:31:29,598 --> 00:31:32,267
என்ன நடக்குது?
இது மோசமாக இருக்கு.

388
00:31:32,935 --> 00:31:33,936
ஹை.

389
00:31:34,895 --> 00:31:36,647
ஹே, நான்...

390
00:31:36,730 --> 00:31:38,941
- பணியிடத்திலிருந்து வந்த நபர்.
- ஆம்.

391
00:31:41,443 --> 00:31:43,862
எப்படி போகுது?

392
00:31:49,743 --> 00:31:51,954
மன்னிக்கணும். இது என் தோழி, அலெக்ஸா.

393
00:31:52,037 --> 00:31:53,705
இவர் தான் ஜூன்.

394
00:31:53,789 --> 00:31:56,041
- ஹே. நீங்க நிஜமாவே நல்லா செய்யறீங்க.
- ஆமாம்.

395
00:31:56,124 --> 00:31:58,877
நல்லா செய்யறோமா?
கண்டிப்பா மோசமா செய்யறோம்.

396
00:31:58,961 --> 00:32:00,671
சரி, அந்த கடைசி பாடல் நல்லாயிருந்தது.

397
00:32:02,047 --> 00:32:04,091
- எது தெரியுமோ அதை எழுதணும், இல்லையா?
- ஆம்.

398
00:32:06,593 --> 00:32:08,428
உன் அப்பாவிற்கு கண்டிப்பாக பிடிக்கும். நிச்சயம்.

399
00:32:09,513 --> 00:32:10,931
- நிஜமாவா?
- ஆம்.

400
00:32:11,807 --> 00:32:13,600
உங்களுக்கு அது தெரிய வழியேயில்லையே?

401
00:32:13,684 --> 00:32:16,270
ஏய், நீ நாசமாப் போக, மவனே.

402
00:32:19,189 --> 00:32:20,858
நாம கிளம்பலாம்னு நினைக்கிறேன்.

403
00:32:21,483 --> 00:32:22,568
ஆமாம்.

404
00:32:31,702 --> 00:32:32,953
எனவே...

405
00:32:35,372 --> 00:32:39,668
அவர் நான் உடன் வேலை செய்த ஒருவரின், மகள்.

406
00:32:40,169 --> 00:32:42,212
அவர் இறந்துட்டார்.

407
00:32:42,296 --> 00:32:47,092
அதுக்கப்புறம்...
எனக்கு மிகவும் கஷ்டமாப் போச்சு...

408
00:33:07,112 --> 00:33:08,113
ஹார்மோனி.

409
00:33:09,156 --> 00:33:10,240
அவளை கண்டுபிடிச்சியா?

410
00:33:10,324 --> 00:33:13,327
கான்ஸ் கல்லூரியில் ஒரு வளாக போலீஸிடமிருந்து
எனக்கு துப்பு கிடைத்தது.

411
00:33:13,410 --> 00:33:15,913
அவள்... நீ என்ன எழவை போட்டுட்டு இருக்க?

412
00:33:17,623 --> 00:33:20,459
நான் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்தேன்.

413
00:33:21,293 --> 00:33:22,920
அது எதுக்கான அடைமொழி?

414
00:33:24,546 --> 00:33:26,048
டக், எனக்கு இன்னிக்கு கடும் நாள்.

415
00:33:27,090 --> 00:33:29,468
நமக்குள் நடக்கும் இந்த பேச்சில் எந்த பகுதியை

416
00:33:29,551 --> 00:33:33,805
நாம ஃபோனுல பேசியிருக்க முடியாதுன்னு
நான் இன்னும் யோசிச்சிட்டிருக்கேன்.

417
00:33:34,389 --> 00:33:37,267
யாரோ அந்த கான்ஸின் பழைய லேபு
கட்டடத்தில ஒளிஞ்சுகிட்டு இருக்காங்க.

418
00:33:37,351 --> 00:33:39,686
அந்த டீன் செக்யூரிட்டியிடம்
அதை கண்டுகொள்ள வேண்டாம்னு சொல்லிட்டார்.

419
00:33:40,521 --> 00:33:42,397
ஒருவேளை அது ரெகாபியாக இருக்கலாம்.

420
00:33:42,481 --> 00:33:43,732
அது அவள் தான்.

421
00:33:44,775 --> 00:33:46,235
என் கூட வந்து கண்டுப்பிடிக்கிறியா?

422
00:33:47,236 --> 00:33:49,279
வேண்டாம். நான் மாட்டேன்.

423
00:33:50,030 --> 00:33:51,657
அவளை பிடித்தவுடன் எனக்கு சொல்லு.

424
00:33:52,783 --> 00:33:55,244
ஓ, இன்னிக்கு இரவு, மேயின்டெனேன்ஸ்
வந்து புதுசா அமைக்கறாங்க.

425
00:33:55,327 --> 00:33:56,745
அது நல்ல விஷயம்னு நினைக்கிறேன்.

426
00:33:59,206 --> 00:34:02,501
எனவே, நீ என் செவிலித் தாயா?

427
00:35:07,107 --> 00:35:08,817
தடை செய்யப்பட்டுள்ளது

428
00:35:16,617 --> 00:35:17,618
ஹலோ?

429
00:35:18,869 --> 00:35:20,078
யார் பேசுறது?

430
00:35:26,627 --> 00:35:28,003
பீட்டியின் தோழன்.

431
00:35:35,511 --> 00:35:39,681
ஹலோ? நீங்க... நீங்க இருக்கீங்களா?

432
00:35:41,642 --> 00:35:42,893
நீங்க மார்க் ஸ்கௌட்டா?

433
00:35:48,941 --> 00:35:50,776
அலர் இறப்பதற்கு முன்னாடி
உங்ககிட்ட என்ன சொன்னார்?

434
00:35:52,444 --> 00:35:53,779
ஒண்ணும் சொல்லலை.

435
00:35:53,862 --> 00:35:55,364
நான்...

436
00:35:57,032 --> 00:35:58,992
நான்... நான்... நான்... எனக்கு வேண்டியது...

437
00:36:01,578 --> 00:36:03,080
எனக்கு புரிந்து கொள்ளணும்.

438
00:36:06,792 --> 00:36:08,043
என்னை இப்போ சந்திக்க முடியுமா?

439
00:36:21,098 --> 00:36:24,142
லுமன்

440
00:38:08,705 --> 00:38:09,831
நீங்க தனியாக இருக்கீங்களா?

441
00:38:16,505 --> 00:38:18,006
ஆம், நாம் மட்டும் தான் இருக்கேன்.

442
00:38:22,678 --> 00:38:24,596
நான் இந்த பள்ளியில ஆசிரியரா இருந்திருக்கேன்.

443
00:38:24,680 --> 00:38:25,681
எனக்குத் தெரியும்.

444
00:38:29,893 --> 00:38:30,894
யார் நீங்க?

445
00:38:36,275 --> 00:38:37,276
என்னுடன் வா.

446
00:40:14,039 --> 00:40:16,041
தமிழாக்கம் அகிலா குமார்

